ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
21•11•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்
பொள்ளாச்சி.
(144) மனிதனே புனிதன் —
சத்சங்கத்தில் கூட்டம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமியின் படுக்கை விரிப்பில் படுத்துக் கொண்டு, பிடரியில் இரண்டு கைகளையும் கட்டிககொண்டு, கால் மீது காலைப் போட்டபடி, புன்சிரிப்புடன் இருந்த, தவத்திரு. வேணுகோபால சுவாமி நமது நாகராஜன் சுவாமி தியானம் செய்து முடிக்கும் வரையிலும் பொறுமையாகக் காத்திருந்தார். நாகராஜன் சுவாமி தியானம் முடிந்த பிறகு உலக நன்மைக்குப் பிரார்த்தனைகள் செய்வார். கண்களைத் திறந்து பார்த்தவருக்கு இன்பஅதிர்ச்சி! முதல் வார்த்தையே, “அனைவரும் நலமா?” என்று தான் கேட்டார் தவத்திரு.வேணு கோபால சுவாமி.
நமது சுவாமியும் முதலில் வணக்கம் சொல்லி விட்டு, “ஆம் சுவாமி! நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று கூறியதும் கைகளை உயர்த்தி “அருள் ஆசிகள் ” என்று கூறிவிட்டு எழுந்தார். “உன்னிடம் நிறையப் பேச வேண்டும். பிறகு பார்க்கிறேன்” என்று கூறியவர் வேகமாக வெளியே சென்றார். அவருடன் சேலத்துக்கு காரர்கள் இரண்டு பேர் சென்றனர். நமது சுவாமியும் வெளியே சென்று பார்த்தார். பனி சுழ்ந்த மரங்கள் அடர்ந்த காட்டுப் பாதையில் அவர்கள் செல்வது தெரிந்தது.
காலையிலேயே கோதுமை ரவா உப்புமா, வழங்கப்பட்டது. நமது சுவாமி அந்த உப்புமாவை அக்கால கட்டத்தில் உண்ணமாட்டார். அநேகம் பேர் அங்கு உண்ணாமல் இருந்தார்கள். “இந்த உணவு எனது உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் குருதேவா! எனது உடலில் நன்றாக ஜீரணமாகும் குருதேவா” என்று சொல்லி விட்டு, உணவின் மீது உள்ளங்கையை சற்று உயரே வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்! “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று நீண்ட முழக்கம் போல் தவத்திரு. வேணு கோபால சுவாமி இனிமையாகச் சொல்ல, ஒரே குரலில் எல்லோரும் அம் மந்திரத்தை உரத்து முழங்கினர். அதனால் ஒரு வித்தியாசமான அதிர்வு அலைகள் ஏற்படுவதை, எல்லோருமே நன்றாக உணர்ந்தார்கள். எல்லோரையும் தைரியமாக சாப்பிடச் சொன்னார்கள்.
சிறிது நேரத்திலேயே தியான வகுப்பு ஆரம்பமானது. எல்லோரையும் வரவேற்றுப் பேசினார்கள். பிறகு சத்தியத்தின் சக்தி நிலை என்ற புத்தகம் அங்கு வாசிக்கப்பட்டது. எல்லோரும் அப் புத்தகம் படிக்கும் போது கண்களை மூடிக் கொண்டார்கள். பெண்கள் ஒரு புறமும், ஆண்கள் மற்றொரு புறமுமாக கண்கள் மூடி அமர்ந்து இருப்பது அதிசயமாக இருந்தது. எத்தனையோ பொழுது போக்கில் ஈடுபடும் ஜனங்கள், மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு இருப்பதைப்போல ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்தனர். நீண்ட நேரம் சப்பணமிட்டு அமர்ந்து இருக்க இயலாதவர்கள், கால்களை நீட்டிக் கொண்டும், இன்னும் முடியாதவர்கள் படுத்துக் கொண்டும் பாடம் கேட்டார்கள். இயல்பான சுதந்திரமாக எல்லோரும் உணர்ந்தனர். இதில் இன்னொரு விஷேசம் என்னவென்றால் அநேகக் குழந்தைகளும் இப்படி மணிக்கணக்கில் தியானத்தில் அமர்ந்து கொண்டு இருப்பது எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.