ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
12•05•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(316) மனிதனே புனிதன் —
சதியும் குரல் பதிவும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிராமத்து வீட்டிற்கு குரலைப் பதிவு செய்து திரும்பக் கேட்கும் ஒலிப்பதிவு சாதனம் ஒன்று வந்து சேர்ந்தது. தியான நண்பர் ஓருவர் சுவாமிக்கு அன்பின் நிமித்தம் வழங்கியது. சோப்பு டப்பா அளவே உள்ள அது மிகத் துல்லியமாக மிகுந்த சப்தமாக திரும்ப ஒலித்தது. திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் தரிசனத்தை, நண்பர் குடும்பத்துடன் சென்று சேவித்து விட்டு வரும் போது, மலை அடிவாரத்தில் வாங்கிக் கொண்டு வந்தார். குழந்தைகள் தங்கள் குரலைப் பதிவு செய்து, பாடல்கள் முதல் கேட்டு ரசித்தனர். அது ஒரு பொழுது போக்கு அம்சமாகத்தான் வீட்டில் இருந்து வந்தது. நமது சுவாமி தியான வகுப்பகற்கு தமது மனைவியுடன் பொள்ளாச்சி சென்றிருந்தார். இரவு வீடு திரும்பிய போது சின்ன மகன் ஒலிப்பதிவு பெட்டியில் இருந்த பேச்சுக்குரலைக் கேட்கச் சொன்னார். சுவாமியின் தகப்பனாரும், தம்பனவசியனின் இரண்டாவது மகனும் பேசியது கேட்டது. ஆவேசமான அந்தப் பேச்சில், தியானம் செய்து வருவதால் ஊருக்குள் கேடு வருகிறது என்றும், வீட்டை விட்டே சுவாமி குடும்பத்தைச் துரத்தி விடுவதெனவும் ஆலோசனைகள் நடந்தது தெரிய வந்தது. பூஜை அறைக்கு முன்பு அதனை வைத்து எதிர்ப்பாளர்கள் திருந்தி வாழவேண்டும் என்ற பிரார்த்தனையை நமது சுவாமி நிறைவேற்றினார்.
மறுநாள் காலை உணவிற்குப் பிறகு வேறெரு சாதனத்தின் வழியே மிகுந்த சப்தத்துடன் எல்லோரும் கேட்டு ரசிக்கும்படி ஒலிபரப்பு செயதார் சுவாமி. குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை அனைவரும் நடந்த உரையாடல்களைக் கேட்டு விட்டு, ” இப்படியும் அநியாயம் நடக்குமா? கெடுவான் கேடு நினைப்பான்” எனக் கூறினர். இதைக் கேட்டு ஓடிவந்த தம்பன வசியனின் குடும்பத்தார் பொது ஜனங்கள் மீது ஆவேசமாக வார்த்தைகளால் தாக்குதல் நடத்தினர். சுவாமியின் குடும்பக் குழந்தைகளை, ” அடித்தே கொன்று விடுவோம், ஊரை விட்டு எங்கேயாவது ஓடிப்போய் விடுங்கள். ஊருக்குள் உதவிகள் செய்து வரும் உங்களைத்தானே இந்தக் கேடுகெட்ட ஜனங்கள் விரும்புகிறார்கள்! எங்கள் மீது துளியும் பயம் இல்லாமல் போய் விட்டது. இவன் களை அடித்து நொறுக்க வேண்டும்” என்றது மின்றி எல்லோரையும் ஆபாசமாக வார்த்தைகளால் சாடினர். தம்பனவசியனின் வீட்டுப் பெண்களும் வந்து ஏசி விட்டுச் சென்றனர். அன்று முதல் தொட்டு சுவாமியின் குடும்பத்தை எங்கு கண்டாலும் வார்த்தைகளால் சுடுவது என்று தீர்மானம் செய்து அதனை அரங்கேற்றி வந்தனர். வலுத்தவனின், அடி உதை களுக்குப் பயந்த மக்களில் பலர் , சிலம்பம் விளையாடுபவர்கள், வாணாவீச்சு வீசுபவர்கள், செம்படவர் ஜனங்கள் என ஊர் இரண்டுபட்டு விட்டது.
தாங்கள் செய்த சதிவேலையின் ரகசியம் அம்பலப்பட்டு விட்டதால் வந்த அவமானம், ஆத்திரமாக மாறி பைத்தியம் பிடித்தவர்கள் போல நடந்து கொண்டனர். தெய்வங்க ளையும் ஏசினர். அராஜகம் தலை விரித்து ஆடியது. பிற மதத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தம்பனவசியனின் ஏவலினால் தினமும் போதையில் வந்து தெருவில் நின்று ஏசத்துவங்கி னார். என்ன செய்வது? என்று அறியாத குழந்தைகள் தினமும் பயந்து நடுங்கினர். சுவாமி “கற்பூர ஆழி” ஒன்றை தயார் செய்து, வீட்டுத் திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து ஜெபம் செய்யத் துவங்கினார். 108 கற்பூரங்களைக் கொண்டு செய்த ஆழிஜெபம் பலன் தந்தது. அவரவர் செய்த பாவவினை களுக்கு ஏற்ப இறைவன் கொடுத்த தண்டனையை அனுபவிக்க வேண்டிய சூழல் ஒவ்வொருவருக்கும் ஏற்படத் துவங்கி விட்டது. ஊரில் இப்போது அமைதி ஏற்பட்டு விட்டது. இந்த சமயத்தில் பவானி தியான சங்கத்தை விட்டு அதன் தலைமை குரு, தனியே ஆஸ்ரமம் அமைக்கும் ஆவலுடன் வெளியேறி விட்டார். வெளியேறும் போது தனது கைக் கட்டைவிரலைத் தரையில் வைத்து வட்டமாக சுற்றித் தேய்த்து சிலருக்கு அகால மரண சாபத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். துணியை சரியாக சலவை செய்யாத சலவைத் தொழிலாளி ஒருவர், எதிர்த்துப் பேசிய காரணத்தால் கட்டைவிரலைத் தரையில் தேய்த்து, “பிடி சாபம், உனக்கு அகாலம் சம்பவிக்கும்” என்றதால் பயந்து நடுங்கின அவர் அகால மரணத்தையே தழுவினார். ரசமணி செய்தே தீருவது என்று வலம்புரி சங்குகளை வாங்கி வந்து, உரலில் இட்டு இடித்துத் தூளாக்கி, நெருப்பில் இட்டுக் காய்ச்சிய போது அந்தப் பணியில் ஈடுபட்ட பெண்கள் அதன் வெப்பவேகத்தில் பாஷாணப் பொருட்களின் நீராவி கண்ணில்பட்டுக் கண்களை இழந்து போயினர். அவரது தவறைச் சுட்டிக் காட்டிய பெண்களில் சிலர், பைத்தியம் பிடித்ததும் அல்லாமல் “நான் பைத்தியம், நான் பைத்தியம்” என்று புலம்பச் செய்தது தான் உச்சகட்ட நிகழ்ச்சிகளாகியது. சில முக்கிய உள்ளூர் பிரமுகர் குடும்பத்தினர் இடங்களை தானம் செய்து ஆஸ்ரமம் அமைக்க உதவினர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.