சக்தி பெற்ற ஆன்மப் பசு.

210

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

19•10•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(102) மனிதனே புனிதன் —
சக்தி பெற்ற ஆன்மப் பசு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குரு நாதரின் எண்ணமுடனே சுவாமியின் பிரயாணம் நடை பெற்றது. மிருகங்களின் சுயமரியாதை சீண்டப்படும் போது ஏற்படும் போராட்ட வாழ்வில் அவைகள் தன் இன்னுயிரை இழக்கத் துணிகின்றன. ஆலயங்களில் காட்டப்படும் நந்தி சிவனை நோக்கி அமைக்கப்பட்டு, இறை சித்தத்தில் ஆன்ம லயமாக்கக் காட்டப்படும் பாட போதனைகளைப்பற்றி வாழும் ஆத்மாக்கள், உலக நலன் வேண்டி வாழ்வதும் மதிப்புக்குரிய விஷயம் தான்! இதிலும் இறை சிந்தனை செய்வதிலும், தியானிப்பதிலும் கூட சுயமரியாதை தென்படுகின்றது.

இதில் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சகலத்தையும் படைத்தது இறை சக்தி! இப்பூவுலகில் சகல ஜீவர்களையும் உண்டு பண்ணி, அவர்களுக்கு வாழும் வழிகாட்ட அநேக ஆற்றலும், அறிவும் பெற்ற தெய்வீக சக்திகளையும் படைத்துக் காத்து வளர்த்து வந்தது இறை சக்தி! பூமியை உருவாக்கி அதில் அற்புதமான மனித அறிவு ஜீவன்களையும் படைத்து வாழ வைத்திருப்பது ஏன்? என்ற கேள்விக்கு விடை பகர்ந்தார் யார் உண்டு?

மனிதர்கள் வாழ்வின் மீது அக்கரை கொண்ட இவர்கள்(தேவதைகள்) இயற்கையை ஆட்டிப்படைக்க வல்ல சக்தியை இறைவன் இவர்களுக்கு வழங்கியுள்ளார். இவர்கள் இறைவன் கட்டளைப்படி நடந்து மனிதர்களைத் தங்கள் வசத்தில்
வைத்திருப்பார்கள்! இவர்களை இறைசக்தி, ஒலி எனப்படும் நாதத்தின் ஆற்றலிலும், ஒளி எனப்படும் பிரகாசம் பொருந்திய சக்திக்குள்ளும் கட்டுப்பாட்டில் இறைசக்தி வைத்திருக்கும்! இயற்கையின் ஆற்றலைப் பெற்ற இவர்களை மனிதன் தனது பக்தியினாலும், மந்திர ஜெப ஒலியினாலும், தீப வழிபாட்டினாலும், ஹோமங்களினாலும், தியான, தவங்களினாலும், அன்னதானங்களினாலும் , இவர்களிடமிருந்து அருளாசிகளையும், காரிய வெற்றியையும் பெற முடிந்திடும். அதற்கு நம்பிக்கையும், ஈடுபாடும் நேர்மறையான எண்ண ஜெபமும் தேவை!

இதெல்லாம் மனதின் மாட்சிதான். மனதை இயக்கும் போதெல்லாம் செயல்படுவது அறிவு தான். மனம் கடந்த நிலையை மனிதன் அடையும் போது, தான் யார்? என்பதை உணர்த்துகின்ற சக்தியைத்தான் பேரறிவு என்றும் இறைவனது சொரூபம் என்றும் காட்டியதும் அல்லாமல் தன்னையும் இறைசக்தி வெளிப்படுத்திக் கொண்டுதான் உள்ளது. அதனை தெய்வீகநிலை பெற்றவர்கள் மட்டுமே அறிவர்! மன இயக்கத்தில் செயல்படும் அறிவானது, மன இயக்கத்தைச் செயல்படாமல் நிறுத்தி விட்டால் அது பேரறிவாக மாறி விடுகிறது. அப்படிப் பெற்றுவிட்ட அவர்களைத்தான் ஞானியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். பேரறிவாகிய, ஞானதீபமாகிய, இறை சக்தி அவர்களிடம் வெளிப்பட்டுப் பிரபஞ்சத்தின் ஞான ஆற்றலை, உலக மக்களும் பெற உதவுகிறது.

நமது சுவாமி நஞ்சன்கூடு என்ற ஸ்தலத்தில் தியான எண்ணமுடன் அமர்ந்திருக்கின்றார். ஒரு வயோதிகப் பெரியவர் முழுக்கை சட்டை அணிந்து சிவப்புக்கரை உடைய வஸ்திரம் ஒன்றை குறுக்கே அணிந்த படி சுவாமி அருகில் அமர்கின்றார். சுவாமியைப் பார்த்துப் புன்னகைக்கின்றார். சிவந்த உதடுகளின் மீது பெரிய முறுக்கு மீசை கம்பீரமாக இருக்கிறது. அப்போது சுவாமி யுடன் பயணித்தவர் ஆனைமலை வியாபாரி, சிறிய வயதானாலும் இனிமையாகக்” கோயிலுக்குள் போகலாம் வாருங்கள்” என சுவாமியை அழைக்கிறார். சுவாமி செல்லும் போது அந்தப் பெரியவரும் உடன் வருகின்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button