கோகுல கிருஷ்ணா

214

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15.09.2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(68) மனிதனே புனிதன் —
கோகுல கிருஷ்ணா.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமியின் பாட்டி பொன்னம்மா அவர்கள், சுவாமி வீடு திரும்பியதும் தனியே அழைத்து, “உனது குருநாதனைச் சந்தித்தாயா?” எனக் கேட்டார். ஆம் என்று கூறியவர் பாட்டியிடம், “நான் சந்நியாசம் கொள்ள எண்ணினேன். ஆனால் எனது மனைவியும் சந்நியாசம் பற்றிய கருத்தில் வலுவோடு இருக்கிறார்கள், பார்த்தீர்களா? ” என்று சந்தோஷமாகக் கூறினார்.
பாட்டி,”ஆகட்டும், குருநாதர் என்ன சொன்னார்?”
சுவாமி, “வாரிசுகள் பற்றியும், அகத்தியரின் ஏட்டில் பதிவு செய்துள்ள கோயில் பற்றியும், அதை வெளிப்படுத்தத் தாம் வந்ததாகவும் கூறினார்” என்றதும், பாட்டி பொன்னம்மா அவர்கள் சுவாமி முகத்தையே பார்த்துக்கொண்டு கொண்டிருந்தார். பிறகு சுவாமி, “பாட்டி நான் ஒன்று கேட்பேன் , நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது ” என்றதும்,” அப்பா நீ கேட்க வருவது அவசரக் கல்யாணம் எனக்கு ஏன? என்பது தானே?” எனப் பாட்டி கேட்டதும் வியந்துதான் போனார்.

சுவாமி உடனே, “என் மீது உங்களுக்கு நம்பிக்கை அற்றுப் போனதற்கு என்ன காரணம்? விளக்கம் தேவை.சொல்லுங்கள” என்றார். பாட்டி சிரித்தார்.
“அப்பா உன்மீது குற்றமில்லை.
தெய்வ நம்பிக்கை, ஒழுக்கம், பண்பாடு மிக்கவன். உனக்கு அவப்பெயரை உண்டு பண்ணப், பெண்கள் சிலர் முயற்சித்து வருவதை நாங்கள் அறிவோம். நீ அதனை அறியும் வாய்ப்பு உனக்குத் தெரிய வந்தாலும் அதைக் கண்டு கொள்ள மாட்டாய்! அதனால்தான் இந்த திருமண ஏற்பாடு! போதுமா?” எனக் கேட்டார். “மீனாம்பாளிடமும் எல்லோரும் சற்று கடுமையாக நடந்து கொண்டதற்குக் காரணமே, அவளுக்கு இல்லறத்திலும், கணவன் மீதும் அன்பு உண்டாக்கவே அவளை வெறுப்பது போல் வீட்டினர் நடந்து கொண்டனர். மீனாம்பாளும் புரிந்து கொண்டு விட்டதால் இனி எல்லோரும் ஒற்றுமையாக, சந்தோஷமாக இருப்போம்” என்றார்கள். அப்படியே எல்லாம் கடவுளின் அருளால் இனிதாக நடைபெற்றது.

அந்த ஆண்டே தாய்மைப் பேற்றை அடைந்தார் மீனாம்பாள் நாச்சியார் அவர்கள்! சுவாமியின் குருநாதர் கோகுல கிருஷ்ணா பிறப்பான் என்று கூறியது அப்படியே நடைபெற்றது. கிராமத்தில் ஒவ்வொரு பெளர்ணமி நாளும் சிறு குழந்தைகளுக்காக, எல்லார் வீட்டில் இருந்தும் உணவு சமைத்து எடுத்து வந்து, ஆடிப்பாடி மகிழ்ந்து உணவுகளை எல்லோரும் பங்கிட்டுக் கொண்டு உண்ணும் நிகழ்ச்சி, கிராம ஒற்றுமைக்காக நடை பெற்று வந்தது. இது வெளியூர் மக்கள் குடி வந்த போது சிறுகச்சிறுக மாறி விட்டது. மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் தாய்மைப் பேறு அடைந்த பிறகு, சுவாமி வீட்டினர் மீது அபிமானம் உடைய மக்களால் பெளர்ணமி வழிபாடு துவங்கியது.
அந்தக் கால சமயத்தில் கிராம வழக்கப்படி அந்த ஊரில் இருந்து திருமணம் செய்து கொடுத்த பெண்கள், தங்களுடைய கணவனை பிறந்த வீட்டிற்கே அழைத்து வந்து, குடியேறி வாழும் பழக்க வழக்கம் போலவே சுவாமி அவர்கள் வீட்டிலும் நடை பெற்றது. மூத்த சகோதரி, “தனதுமாமியார் வைது விட்டார்கள். அதனால் கணவனுடன் இனி இங்குதான் இருக்க வந்து விட்டேன்” என்றார்கள். பெற்ற தாயின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம். தனது அணி பலம் பெற்று விட்டது என்ற பூரிப்பு. மகளை வாயார வாழ்த்தி வரவேற்று உபசரித்தார். தனது மருமகளைப் பார்த்து, “நீயும் என் மகனுக்கு ஏதாவது தொழில் செய்து தரும்படி உனது பெற்றவர்களைக் கேட்டு, உனது ஊருக்குக் கூட்டிப் போனால் நாங்கள் இங்கு நிம்மதியாய் இருப்போமல்லவா?” என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு சுவாமியின் துணைவியார், “அப்படிச் செல்லும் பழக்க வழக்கம் எங்களில் கிடையாது. புகுந்த வீட்டில்தான் வாழ்வேன். அதுதான் என்னைப் பெற்றவர்களுக்கும் தரும் மரியாதை” என்று கேட்டு விட்டதால் கருத்து வேற்றுமை உண்டாகும் எனக்கருதி, வழக்கப்படி திருமதி மீனாம்பாள் மெளனமானார்கள்.

அந்த கிராமத்தில் இன்னும் ஒரு அமானுஷ்யத்தைப் சம்பவம் அப்போது ஏற்பட்டது. அதனால் கவனம் எல்லாம் அங்கே திரும்பி விட்டது. அதனைச் சொல்லி விட்டு பிறகு சுவாமி வரலாறு பார்ப்போம். ஆற்றின் பெரும் வெள்ளம் ஏற்பட்டு சுவாமி நீந்தி அக்கரைக்குச் சென்றதை வரலாறு முன் பகுதியில் படித்தோம் அல்லவா? அந்தப் பெருவெள்ளம், வயல் வரப்புக்களையும், பெரிய பெரிய மரங்களையும், ஆழியாறு அணைக்கட்டில் கரையோரம் போடப்பட்ட மிகப் பிரமாண்ட சிமெண்ட் குழாய்களையும் வெள்ளத்தில் அடித்து கொண்டு வந்தது. குழாய்கள் உடைந்து கம்பி வலைகள் தெரிய, அவைகள் சரியாக அம்பல நாயக்கர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன பாப்பாத்தி மடுவில் ஆழ்ந்து கிடந்தது. சுவாமிக்கு அம்பல நாயக்கர் அமானுஷ்ய நடமாட்டம் அங்கே இருப்பதாகத் பலர் பேசிய கதையை உண்மையானதுதானா என்கிற ஆவல் ஏற்பட்டதால், தனது ஸ்நானாதி இத்தியாதிகளை நிறை வேற்ற தமது குளியல் இருப்பிடத்தை பாப்பாத்தி மடுவில் ஏற்படுத்திக் கொண்டார்.

தனது அருமையான காலை இழந்து விட்ட கோவிந்தனும், சுவாமியுடன் தைரியமாக அங்கு வந்து குளிக்கச் துவங்கினான். அவனும் மிகுந்த தைரியசாலி. பேய் உலவுகிறதோ இல்லையோ, கோவிந்தன் எந்த நேரமானாலும் உலவி வந்தான். அவனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை அறவே இல்லாதவன். அம்பல நாயக்கர் ஆவியைப் பார்த்து அவரிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என்று இருக்கிறேன் எனச் சொல்லிப் புன்னகை செய்வான். ஆனால் அது அவனுக்கு ஈடேறவில்லை. சுவாமி அந்த நினைப்பை உதறிவிட்டுப் பொள்ளாச்சியில் நடைபெற்ற பெற்று வந்த தியானக் கூட்டத்திற்குச் சென்று வரலானார். இனி கோவிந்தனையே அதிர்ந்து போகச் செய்த ‘அந்த’ அமானுஷ்யத் தகவலுடன் சந்திக்கிறேன்.நன்றி! வணக்கம்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button