ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
19•11•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(142) மனிதனே புனிதன் —
கெடுவான் கேடு நினைப்பான்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அமாவாசை அன்று ஸ்ரீ ஈஸ்வர குருநாதர் அவர்கள் தம்பன வசியன் என்பவன் ஜென்மாந்திரத் தொடர்பு உடையவனது குடும்பம், இந்த ஜென்மத்திலும் கேடுகள் செய்யசுவாமி எண்ணி, அவருடைய சீடர்கள் பலருடைய குடும்பங்களுக்கும் அங்கங்கே பிறந்து துன்பங்கள் தந்து வந்தார்கள். நமது நாகராஜ் சுவாமி குடும்பமும், சாத்தானின் மக்களால் அநேகக் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். அதற்கு ஏதாவது செயுதிட வேண்டும் என்று சற்குருநாதர் அவர்கள் தீர்மானித்தார்கள்.
அமாவாசை இரவு ராஜ கணபதி என்று சற்குரு நாதரால் அழைக்கப்பட்ட பிரசண்டவிநாயகர் கோயிலில் வைத்து சில விளக்கங்களை நமது நாகராஜ் சுவாமி அவர்களிடம் கூறினார். கிராம மக்களுக்கும், சுவாமி குடும்பத்தினர் எல்லோருக்கும் துன்பங்கள் கொடுத்த தம்பன வசியன் குடும்பத்தார் அனைவரும் எப்படி இறைவனால் தண்டிக்கப்படப் போகிறார்கள் என்பதைக் காட்டினார். அவைகள் அப்படியே நடை பெற்றன. கடும் வியாதிகளினாலும், துர்மரணங்களினாலும், அநேகம் பேர் இறந்தனர். இறைவனது நீதியினால் நரகவாதையைப் பலர் அனுபவித்து வந்தனர். அதனை எழுத்தில் பதிவது என்பது அறிவுடமை ஆகாது.
மாதேஸ்வரன் மலைக்குச் சென்று தவத்திரு.வேணு கோபால சுவாமி அவர்களைச் சந்தித்து, ஞான விளக்கங்கள் பெற்று வரலாம் என்று, தியானக் கூட்டம் நடத்தி வந்த தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள் கூறியிருந்தார். சுவாமிக்குப் பிரயாண செலவு செய்யப் பணம் கிடைப்பதில் தான் பாடாக இருந்தது. மகனுக்குப் பணம் கொடுத்துப் பழக்கமில்லாத தகப்பனாரிடத்தில் கேட்டால் வைதுவிடுவார். சுவாமியின் துணைவியார் அவரது தந்தை கைச்செலவுக்குத் தரும் பணத்தைச் சேமித்து வந்தவர் கொடுத்து உதவினார். நல்ல வழி செல்ல உதவிகளும் வரும் என்பது போல் ஆயிற்று. நமது சுவாமியும், தவயோகினியும், அவர்களின் மூத்த குமாரர் திரு.சண்முக சுந்தரம் அவர்களும் பவானி சென்று அங்கிருந்து மாதேஸ்வரன் மலைக்குப் புறப்பட்டனர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.