ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
09•01•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(193) மனிதனே புனிதன் —
கூழைக் கணக்கப்பிள்ளை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிராமத்தில் சில்லறை வியாபாரம் செய்து வரும் கூழைக்கணக்கப்பிள்ளை(பெயர் யாருக்கும் தெரியாது) என்பவர், தேனீர் சாப்பிட தம்பனவசியன் கூட்டத்தார் நடத்தி வந்த ஹோட்டலின் முன்னால் நின்று கொண்டிருந்தார். திரு.சிங்கத்தேவர் ஊர்வலத்தை அவருக்கு முன்னால் நிறுத்திவிட்டு, விழித்தது விழித்தபடியே இருக்கும் திரு.சிங்கத்தேவரை உட்காரச் செய்தனர்.மாரியம்மன் வேஷம் போட்ட வாலிபரும் அரக்கன் வேஷம் போட்டிருந்த திரு.கருப்பண்ணனும் மீன்பிடி தொழிலுக்கு திரு.சிங்கத்துடன் செல்பவர்கள். அவர் இருக்கும் நிலையைக்கண்டு, கையில் பிடித்தபடி ஆடிக்கொண்டே வந்த ஆயுதங்களைக் போட்டு விட்டு, “சிங்கண்ணா” என்று அலறியபடியே அருகில் ஓடி வந்தனர்.
வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் திரு.சிங்கத்தேவருக்கு நண்பர் பட்டாளம் அதிகம். அவரிடம் சிலம்பம் கற்றுக் கொள்ள, எப்போதும் விருப்பமுடன், அநேகர் காத்துக்கொண்டு இருப்பார்கள். திருமதி.செவிட்டு முத்து அம்மா அரக்கப்பரக்க ஓடி வந்தவர், தனது வீட்டுக்காரரைச் சுற்றி எத்தனை பேர் மரியாதை கொடுக்கிறார்கள் என்று நினைந்து, அவரைப் பார்த்து, “என்ன முழிப்பு வேண்டிக் கிடக்கிறது. வா சோறு திங்கப் போகலாம்” என்று கையைப்பற்றி இழுத்தார். உடலெங்கும் கரிபூசி அரக்கன் வேஷம் போட்டிருந்த திரு.கருப்பண்ணன் தனது முறுக்கி விட்ட பெரிய மீசையுடன் அருகே வந்து விபரத்தைச் சொல்லும் முன்பே, அவரைக்கண்டு பயந்து தனது புருஷனைச்சுற்றிச் சுற்றி ஓடத்துவங்கினார். பார்பர் திரு.சுந்தரம் மனைவி திருமதி. காவேரி அங்கு ஒப்பாரிவைத்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் தான் உண்மை நிலவரம் புரியவரத் தனது கணவன் தன்னை மோசம் செய்துவிட்டு இறந்து விட்டார் என்று தரையில் உருண்டு அழ ஆரம்பித்து விட்டார்.
கூழைக் கணக்கப்பிள்ளை அவர்களுக்கு விஷக்கடி வைத்தியம் தெரியும். நல்ல நிபுணரும் கூட! தனது கைப்பையில் எப்போதும் தயாராக வைத்திருக்கும், விஷக்கடி மருந்தை வெற்றிலைச் சான்றிதல் கலந்து, கிட்டிப் போயிருந்த பற்களைத் திறந்து வாயினுள் மருந்தைப் புகட்டி விட்டார். அதற்கு உடன் இருந்தவர்கள் உதவி செய்தனர்.
மண்குடத்தின் வாய்ப்பகுதியை தலைமீது வைத்து, மாரியம்மன் கொண்டு வந்த அக்கினிச் சட்டியை, அதன்மீது வைத்து விட்டனர்.கண்கள் திறந்தது திறந்தபடி இருக்க , வாய் பிளந்து பற்கள் முழுவதும் தெரிய, அக்கினிச் சட்டியைத் தலைமீது வைத்திருக்க, விறகுகள் போடப்பட்டு அது கொழுந்து விட்டெரியப் பார்பவர்களைத் திரு.சிங்கத்தேவர் பயமுறுத்திக் கொண்டிருந்தார்.
குழந்தைகள் அனைவரும் பயந்து அங்கிருந்து ஓடி விட்டனர். தனது கணவனுக்கும் சிகிச்சை நடப்பதைக்கண்டு புரிந்து கொண்ட திருமதி.முத்துஅம்மாள் சுதாரித்து எழுந்து தனது நிலைக்கு வெட்கியபடியே கூட்டத்தை விட்டு வெளியே வந்தார். நேரே நமது நாகராஜன் சுவாமி தவம் செய்து கொண்டிருக்கும் இடத்தை அடைந்து, அழுது கொண்டே தன்னுடன் சேர்த்து சாமி கும்பிட வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அங்கு வந்த சிறு குழந்தைகள், “சிங்கத்தப் பாம்பு கொத்தீருச்சு “என்று கூச்சல் போட்டனர். சுவாமி அவர்கள் திருமதி.முத்துஅம்மாள் அவர்களுடன் ‘கள்ளிச் செடி ஆத்தா’ இருக்குமிடம் மரியாதை யின் நிமித்தம் போனார். அங்கு சென்று பார்த்தால், கள்ளிச் செடி பிரமாண்டமான மரமாக வளர்ந்திருந்தது.பிரார்த்தனை இடம் தூய்மையாக இருந்தது. “உங்கள் கணவனைத் காப்பாற்றித் தரும் படி அங்கேயே வேண்டிக் கொள்கிறேன்” என்று சைகையில் கூறிய நமது நாகராஜ் சுவாமி ஆத்ம சுத்தியுடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கொரு மாற்றம் நடை பெற்றது. உன்னிப்பாய் கவனித்தால் மட்டுமே அது புரியவும், தெரியவும் வரும் ஆற்றல் சக்தி!
அமானுஷ்ய சக்திகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவ்விடத்தில் மின் காந்த அலைகள் திடீரெனப் பரவியதை அறிந்து கொள்வது அவசியம். பிறகு அதன் வேகம் மட்டுப்பட, மின்சாரத்தைத் தன்னுள் அடக்கிய காந்த சக்தி நிதானமாக நம்மை ஆக்ரமிக்க, மனம் லயமாகத் துவங்கி விடும் சமயத்தில் ஜாக்கிரதை உணர்வு ஏற்பட வேண்டும். அப்போது நாவசையாமல் பிரார்த்தனை செய்து விட்டால், அது உடனே நடை பெறும் சக்தி ஆற்றலாக, அமானுஷ்யசக்தி மாற்றி விடும். அவ்விடத்தே அதுதான் இதுவரை திருமதி.முத்து அம்மாளிடம் நடைபெற்று வந்துள்ளது. காரிய பலிதமும் ஆகியுள்ளது. கள்ளிச் செடியின் மீது சிறிது நேரம் தோற்றம் தந்த உருவம் திருமதி.முத்து அம்மா அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ள, அவரது ஆன்மாதான் என்று தெளிவாக நமது நாகராஜ் சுவாமி அவர்கள் அறிந்து கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.