கூட்டு உயிரின் சேஷ்ட்டைகள்!

214

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•03•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(253) மனிதனே புனிதன் —
கூட்டு உயிரின் சேஷ்ட்டைகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவனால் படைக்கப்பட்டு உலகில் உண்டாக்கப்படுகின்ற, உருவாகின்ற எதுவுமே அழிந்து போகாது அல்லது அழிக்க முடிந்திடாது. மனித உடலாகட்டும், வேறு எந்தப் பொருளாகட்டும் அவைகள், கால வெள்ளத்தில் அழிவது போன்று விகாரநிலைப் பட்டு, உலகத்தில் தோன்றியுள்ள மற்ற பொருட்களில் சேர்ந்து, மீண்டும் இங்கேயே பயன்பாட்டுக்கு வந்து விடும். திரும்பவும் அவைகளின் உருவமும் கால வெள்ளத்தில் மாறி மாறி, மாறுபாடு அடைந்து மற்றொரு பொருளாக மாறுபடும். இப்படியே இறைவன் அவைகளை எத்தனையோ யுகங்களாக தொடர்ந்து உலகில் பயன்பாட்டில் இருக்க வைப்பதே சிருஷ்டியின் அதிசயம்தான். இதனைப் போன்றே மனித ஆத்ம உடலும், மனித உடலைச் செயல்படுத்த ஒவ்வொரு அங்கங்களிலும் வாழும் உயிர்த் தொகை களும், சுருக்கமாகச் கூறினால் உடலில் வாழும் கூட்டு உயிர்களும், மற்ற பொருட்களில் இருந்துதான் உண்டாகின்றன. அழிக்க முடியாத இவைகள் ஊழூழிக் காலங்கள், உருமாறிக் கொண்டும், உருவாகிக் கொண்டுமிருக்கும்.

இவைகள் இறைவன் கட்டளைப்படி தனது வழியில் கால வெள்ளத்தில் சென்று கொண்டே உள்ளன. ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளாக, காலவெள்ள விதிப்படி, நியாயமான வழிகளின்படி, இயற்கையின் இயல்புப்படிச் சென்று கொண்டிக்கின்றன. இறைவன் ஆணைப்படி செல்லும் அதன் போக்கை, எவராலும், எந்தச் சக்தியாலும், தனது இஷ்டப்படி யெல்லாம் மாற்றி அமைக்க நிச்சயம் இயலாது. தமது வழியில் அவைகள் சென்று கொண்டே இருக்கும். வழி மாறாது இறைவனது தருமவழியில் அனைத்தும் நடை பெறுகின்றன. இறைவனால் ஒரு பொருள் எதற்காகப் படைக்கப் பட்டதோ, அதற்கு இசைவாகவே இறைவனால் உண்டாக்கப்பட்ட இயற்கை சக்தியும் அப்பொருளை வளர்த்து வரும். அதுதான் இறைசக்தியின் நன்மை வழியாகும். ஒன்றினுக்கு ஒன்று உதவியாக வும், நன்மைகளைச் செய்து வளரும் படியாகத்தான் இறைவனின் படைப்பு அமைந்துள்ளது. இது மனித சமுதாயத்திற்கும் இறையாண்மையின் கடமை வழியாகும். பராபரமாகிய இறைவனின் கட்டளையை கடமை வழியாகக் கர்மாவை கடைப்பிடித்து, ஆண்டவன் மீது நம்பிக்கை கொண்டு, வாழ்ந்து வருபவர்கள் இறுதியில் தெய்வீக நிலையை அடைந்து வாழ்கிறார்கள்.

மற்றவர்கள் மனித உடலில் வாழும் ஜடப் பொருட்கள் என்பது ஞானியர்களின் கருத்தாகும். பராபரத்தின் மீது நம்பிக்கை அற்ற இவர்களால், உலகில் அநேக இடையூறுகள் ஏற்படுமாம்! உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மனிதரில் மனிதனாக வாழும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தொல்லைகளை ஏற்படுத்துவதாகும் என்பது ஸ்ரீ ஈஸ்வர நீதியாகும். காரணம் அவைகள் மனிதர்களுக்கு ஆசையைத் தூண்டி, இறைசக்தி யிடம் இருந்து விலக்கித் தீமை சக்திகளிடம் சேர்ப்பித்து விடுகிறது. உலகில் ஆசையைத் தூண்டி விடும் பொருட்களால், மனித உள்ளத்தின் சக்தியைப் பாதிக்கச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பொருட்களால் மனிதனின் சுபாவமே மாறிப் போய்விடுகிறது என்பது கற்றுணர்ந்தவர்களும், இறை நம்பிக்கை உடையவர்களும் கூறிச்சென்ற அனுபவ உண்மையாகும்.

அறிவில் சிறந்த பெரியோர்களே இந்தப் பொருள் ஆசையினால் வீழ்ந்துபட்டுள்ளார்கள். ஆசையினால் உள்ளம் பாதிப்படையும் போதுதான் ஆன்மாவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பிறகு உடலில் வாழும் பஞ்சேந்திரியங்களின் கூட்டு உயிர்கள், ஆசை யின் உச்சத்தில் கூச்சலிடச் செய்து விடுகின்றன. பக்குவ வயதில் ஆசையினால் கூட்டுஉயிர்களால் உடலில் ஏற்படும் உணர்ச்சிகளை வெளியே காட்டாமல், அடக்கியோ, மறைத்தோ தற்காலிகமாகச் செய்து விட முடியும். ஆனால் பக்குவமற்ற குழந்தைகளினால் பொருட்களால் உண்டாகும் உள்ளத்தின் ஆசைகளை மூடி மறைக்க முடியாமல், உடலில் கூட்டு உயிர்களின் ஆவேசக் கூச்சலினால், ஆசையின் உந்துதல்களினால், அக் குழந்தைகள் தரையில் உருண்டு, கூச்சலிட்டு, அடம்பிடித்து அழுகின்றார்கள். அக்குழந்தளை குணம் பெற வைக்கக் கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யும் போது உடன் அமரவைப்பது, வீட்டில் விளக்கின் தீப ஒளியைக் காணச் செய்வது என வழி காட்டினால், நிச்சயமாக நலம் பெறுவார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button