குரு பத்தினிககு மிருகசாபம்!

150

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•02•2017,
திங்கட்கிழமை?
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(242) மனிதனே புனிதன் —
குரு பத்தினிககு மிருகசாபம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“குரு பத்தினி தனது கணவன் ஆதி குரு நாதரைக் கடுங் கோபத்தில் சாடினாள். தெய்வங்களுக்குத் தன் வகையில் சாபம் தந்து, அவர்களை உங்கள் விஷயத்தில் தலையிடாதிருக்கக் கட்டுப்பாடுகள் விதித்தவரே! இயற்கையின் இயல்பை அறிந்த நீர், உமது மனைவியின் குணத்தையும், உன்மீது நான் கொண்ட எனது தீராத காதலையும், என் உடலைத் தகிக்கும் மோகத்தையும் ஏன் நீர் உணர்ந்து கொள்ளவில்லை? மனம் ஒவ்வாத காரியத்தைச் செய்யக்கூடாது என எனக்குக் கூறுகிறீர்கள். மனைவியை கெளரவிக்காத நீர் எனது விவேகக் குறையைச் சாடுகிறீர். தைரியத்தையும், மக்களுக்கு நீதியையும் போதிக்கும் நீர் கூறும், சமூக நன்மைகளுக்கு மாறுபாடாக ஏதாவது நான் செய்து விட்டேனா? தாய்மைக்காக ஏங்கிடும் எனது மனக் குறையை நீரும் பொருட்படுத்தவில்லை. பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும். மாமியும் ஆதரவாக என் மனக்குறையைக் கேட்டு, ஆறுதல், தேறுதல் கூற விரும்ப வில்லை. எனது மனதில் உள்ளதை யாரிடம் சென்று கூறுவது? வீண் பேச்சுப் பேச வேண்டாம், ஆனால் மனப் புகைச்சலுடன் வாழ முடியுமா? காரியத்தில் பயனின்றி நான் தலையிட விரும்ப வில்லை. போதும் இந்த மெத்தனம். என்னை எனது பண்டு நாட்டிற்கு அனுப்பி வையும் என நாவினால் சுட்டாள் குரு பத்தினி.” ஞானச்சுடராய் விளங்கும் தவத்திருமதி. பொன்னம்மாள் பாட்டி அவர்கள் சற்று நேரம் கதையை நிறுத்தி விட்டுத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். பிறகு சிறிது நேரம் தியானம் இருந்தார். கண்விழித்து மீண்டும் ஆதி குரு நாதனின் மாயா அன்னையின் முன்னால் நிகழும் நிகழ்வுகளைப் பற்றித் தொடர்ந்து கூறலானார்.

” மற்றவர்கள் நலவாழ்வு வாழவேண்டும் என்று எண்ணமுடைய ஆதி குரு நாதன் அவர்களது மதிப்பையும், அறவழியில் செல்லாத மக்களுடைய, தனது கருத்தின் ஒப்புதல்களையும்,
சீடர்களுடைய பாராட்டின் பெருமைகளையும் விரும்பி விட்டான் என எண்ணித் தனது கருத்தை, அவர் மீது தனக்குள்ள அவநம்பிக்கையை பகிரங்கமாக வெளியிட்டு விட்டாள். இங்கு நடை பெறும் சச்சரவுகளின் கூக்குரல் கேட்டு விருந்துண்ட மக்கள் மீண்டும் வந்து கூடி விட்டனர். ஆதி குரு நாதனின் குரல் இப்போது பலமாக ஒலித்தது. சினத்தின் சாயல் கலந்து நாபியில் இருந்து சாபமாக வந்தது.
” பைரவியே கேள்! உலக நன்மை வேண்டியே வந்த நான் பிறருடைய எண்ணம், சொல் , செயல் பற்றிய கவலையின்றிக் கடமையாற்றி வந்தேன். ஆனால் என்னுடைய செயல், சொல், எண்ணம் ஆகியவற்றை எந்தவிதப் குற்றமும் இன்றி காத்து வந்திருக்கின்றேன். நமக்குப் புதியதாயினும் இந்த உலகத்தின் இயல்பான தர்மத்தில், இன்ப துன்பங்களைச் சமமாகவே கருதி வாழந்திருக்கிறேன். அ றிவுள்ள அனைத்து ஜீவன்களும் ஒரு தாய் மக்கள் என்று கருதுகிறேன்.”

“ஆனால் நீயோ அதற்கு மாறுபட்டு விட்டாய். சாட்சியங்கள் உரைக்கின்றாய்! சத்தியத்தை மறந்து விட்டாய்!
மற்றவர்கள் மீது உனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறாய். பிறருடைய ஆதரவைக் கருதி உன் சுதந்திரத்தையும் சந்தோஷத்தையம் இழந்து விட்டாய். ஆறுதல் தேடி மனதின் அமைதியைக் தொலைத்திருக்கிறாய்! இறை சக்தியின் பேரின்பத்தை மறந்து, மறைவில் அனுபவிக்கும் சிற்றின்பத்தை விரும்பி ஆசைப்பட்டவளே! சீச்சீ, நீ நாயாகப் போகக்கடவாய்! எந்த சிற்றின்பத்தை நாடினாயோ, வீதியில் பலர் காண அதனை அனுபவித்து மகிழ்வாய். சிறுவர்களிடம் கல்லடி பட்டுத் துயருருவாய். உனது பசிக்கு இரவில் மீந்துபோன கஞ்சியை மக்கள் கொடுக்க நீ உண்பாய். அதுவும் கிடைக்காத போது மலக்கழிவுகளை உண்டு ஜீவித்து இருப்பாய். வசதி மிக்க இடங்களில் நாய் ஜென்மம் எடுத்தாலும், விலங்கிட்டுக் கூண்டுகளில் அடைத்து வைப்பார்கள். உனக்கு உத்திரவு எந்த நொடி நேரத்தில் கிடைத்தாலும் பண்டுநாடு சென்று விடுவாய். அதுவரையில் இந்த சாபத்துடன் தெருவில் அலைந்து கொண்டிருப்பாய் என சாபம் இட்டு விட்டார்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button