ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
09•05•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(313) மனிதனே புனிதன் —
குரு நாதரின் உத்தரவு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ சற்குரு நாதர் நமது சுவாமி அவர்களைச் சந்திக்கச் சேத்துமடை, தேவிகுளம் காளியம்மன் கோவிலுக்கும் கீழ் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் உப்பாற்றைத் தேர்ந்தெடுத்தார். இந்த உப்பாற்றின் கரையில் ஆன்மிகப் பிரசித்திபெற்ற காளியம்மன் திருவிளையாடல் புரிந்து உணவுப் பஞ்சத்தைப் போக்கிய இடம் இதுதான். இங்கே சற்குருநாதர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். எதிரில் உள்ள உருவம் நமது சுவாமியின் கண்ணுக்குப் புலனாகவில்லை. அவர் பேசி முடிந்த பிறகு நாகராஜன் சுவாமி முகத்தைப் பார்த்து, “உனக்கு என்ன ஐயப்பாடு? எனக்கு எதிரில் உள்ள நபர் உனது கண்களுக்குத் தெரிய வரவில்லை. அப்படித் தானே! ” என்றார். நமது சுவாமி, “அதுவல்ல ஐயனே, எனது கண்களால் அதனைப் பார்ப்பது எப்படி? அதனைத் தெரிந்து கொள்ள விருப்பமாக உள்ளேன்”என்றதும் சற்குருநாதர கடகடவென சிரித்தார். “இது தெரியவில்லை, எல்லாம் மனத்தின் செயல்தான். அறிவற்றதாகிய உடலுடன் மனம் சேர்ந்தால்தான் அதற்கு இன்போ, துன்பமோ உணர்வுகள் உண்டாகும். எல்லாம் மனத்தின் செயல் உண்மைகளே! மனம் அல்லாமல் நமது உடலை வேறு ஏதாவது பாதித்து விடுமா? தனது செயலைச் செலுத்தி உடலை இயக்கும் சக்தி யாகச் செயற் கொள்ள மனதிற்குள் பரிபூரண சுதந்திரம் எப்போதும் உண்டு! அதற்கு நிகழ் காலம் தான் மனதின் செயலின் காலமாக உள்ளது. கடந்த காலமோ, எதிர் காலமோ மனதினை அணுகாது. ஆனால் கடந்துபோன நிகழ்ச்சி கள் நமது மனதிற்கு வருவதற்கு என்ன காரணம்? நாம் கடந்ததை எண்ணுவதால் அவைகள் நிகழ்கின்ற எண்ணமாக வடிவம் கொண்டு விடும். மனதினுள் வந்தபிறகு நம்மிடம் உள்ள தியான ஆற்றலை உபயோகப் படுத்திப் பஞ்சேந்திரியங்களால் அனைத்தையும் உணர முடியும்.”
“மகனே நாகராஜா, அமானுஷ்ய சக்திகள் பயந்த சுபாவம் கொண்டவர்களின் மேல் அதிக ஆதிக்கம் செய்வார்கள். பயந்தவர்களின் உடலுக்குள் நுழைந்து விட்டாலோ, உடலை வைத்து தங்களது நிறைவேறாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஒருவன் உடலுக்குள் அந்நிய அமானுஷ்யம் உட்புகுந்து விட்டால், அவனது செயல்கள் முடங்கிப் போகும். அமானுஷ்ய மே ஆதிக்கம் செய்யும். தியானம் செய்வதால் நமது உடலுக்குள் அந்நிய ஆத்ம சக்திகள் உள்நுழையாது. காரணம் மனதின் ஆற்றல் பலப்பட்டு இருப்பதால் அவை விலகிச் செல்லும். நீ இவைகளை அறிய தியானத்துடன், 27நட்சத்திரசக்தி ஆற்றல்களை உணர்ந்து கொள்ள வேண்டும். விரும்பினால் அவைகளைப் போதனைப் படுத்துகிறேன்” என்றார். மேலும் கூறினார், ” மகனே பஞ்சாக்கினி தவம் செய்யும் சித்தர்கள் அதே தவத்தைக் கால் மாறி ஆடுதல் தவம் செய்வார்கள். இந்த தவத்துடன் 27 நட்சத்திரங்களின் சக்திகளை இணைத்து சகல காரிய சித்தி களையும் பெற்று விடுவார்கள்” என்று ஆக்கம் தந்து ஆசி கூறினார். பிறகு நமது சுவாமி அவர்களின் குடும்பத்தி னர் செயற்பாடுகள் பற்றியும், நமது சுவாமி எடுக்க வேண்டிய முடிவுகள் சிலவற்றையும் பேசினார். சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், “மறைக்கப்பட்ட ராமாயணக் காலத்திய, பள்ளி கொண்ட ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலத்தை, நிர்வாகித்து வரப் போகிறாய் ” என்று ஞாபகப் படுத்த மறப்பதேயில்லை!
இன்னும் சிறிது காலம் கிராமத்தில் வாழ்ந்து வர வேண்டும் என்றும், அவர்கள் ஏதாவது தீமையை விளைவிக்க எண்ணும் போது பவானி குமாரபாளையம் அழைத்துச் செல்கிறேன் என்றும் கூறினார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பவானி போவதென்பது சுவாமியின் உத்தரவு. ஞானகுரு வேணுகோபால சுவாமி பவானி ஆல்பத்தை விட்டு வெளியேறப் போகிறார் என்றும், சங்கத் தலைவர் போன ஜென்மத்தில் ஓர் யோகியாக வாழ்ந்தவர் என்றும், மீளாத்துயரம் அவரைத் தாக்கக் காத்திருக்கின்றது என்றும், எனது உத்தரவு வந்ததும் புறப்படத் தயாராக வேண்டும் என்றும் அவரது தீர்க்க தரிசனம் வெளிப்பட்டது. அந்த சமயத்தில் குற்றாலத்தில் மிகப்பெரும் தியான மாநாடு ஒன்றினுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.