குரு எப்போது குருவாகிறார்?

224

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•05•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(314) மனிதனே புனிதன் —
குரு எப்போது குருவாகிறார்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“தவம்” என்று சொல்வதை அறிவை வளர்க்கும் ஞானக் கல்வியும், அதனுடைய போதனையும் என்று உலக மக்களை நேசித்த நாகர் என அழைக்கப்படும் நாகராஜ ஞானியின் வாக்காகும். ஒரு மனிதன் இறைவனை அடைவதற்கும், இறைவன் மனிதனை நாடி வருவதற்கும், பக்தன் இறைவனை இறைஞ்சி அழைப்பதற்கும் உறுதுணையாக இருப்பது புனிதம் மிகுந்த ஞானக் கல்வியும் அதனை உள்ளத்தில் போதனைப் படுத்திய ஆசானின் ஆசீர்வாதம் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது இறைவனின் அனுக்கிரகம் என்னும் கங்கையில் பாவங்களைப் போக்கி, மனிதனைப் புனிதனாக மாற்றி விடுகிறது. அப்படிப்பட்ட புனிதத்தைத் தரும் இறை சக்தி, உலகத்தில் மானுடம் வாழ் வாங்கு வாழவே மனிதத் தேவைகளைப் போதனையாக்கி வழி காட்டியது. புனிதமான நூல்களையெல்லாம் தந்து அருளியது. தர்மத்துடன் வாழவும், உண்மை எனும் சத்தியத்தைக் கடைப் பிடிக்கவும், தவங்களை முறையாகத் செய்து வரவும், தன்னடக்கத்துடனே உலகில் இருக்கவும், அமைதி எப்போதும் உள்ளத்தில் வீற்றி ருக்கவும், வேள்விகள் செய்து இயற்கையின் இயல்பைப் பாதுகாக்கவும், மானுடம் என்றும் அறிவின் திருவாக விளங்கவும் நல்லடியார்களை உலகினுக்குத் தந்து அவர்கள் வாயிலாகப் புனிதநால் கல்வி யையும், உபதேசங்களையும் வழங்கியுள்ளது. நன்றி. — ஸ்ரீ ஈஸ்வர நீதி.

மனிதர்களின் அநேக தேவை களில் மிகவும் முக்கியமான தேவை, அறிவின் வளர்ச்சி
களுக்கு உதவும் பொக்கிஷமான நூல்களே ஆகும். இத்தகைய ஞான நூல்களை மக்களுக்கு வழங்குவதில் பிரசித்தி பெற்றவர் திரு.SSM.சுப்பிரமணியம் ஐயா என்றால் மிகையாகாது. அவரது சேவையை ஆன்மிக உலகம் உள்ளளவும் போற்றி வாழ்த்தும் என்பது உண்மை. பவானி தியான சங்கத்தில் தங்களது வாழ்க்கையையே ஆன்மிக சேவைக்கு ஒப்படைத்து விட்ட ஞானத்திரு.R.B. அவர்கள் தங்கள் ஞான சங்கத்தில் குருவாக இருப்பவரின் நடவடிக்கைகளினால் சிறிது அச்சம் கொண்டு விட்டார். காரணமே இல்லாமல் கோபப்படும் அவரது செயல் கண்டு, நம்பாமல் மனதில் சிறிது சந்தேகம் கொண்டார். சங்கத்தில் குருவைக் காண வரும் அன்பர் பெருமக்கள் தியான சங்கத்த வரை அந்நியர் போல் பழகுவது கண்டு மனதில் வேதனை கொண்டார். இதனை நமது நாகராஜன் சுவாமி பவானி நகரில் தங்கியிருந்தபோது மனம் விட்டுப் பேசிய வார்த்தைகளில் இருந்து அறிந்து கொண்டார். ஞானத்திரு.R.பாலசுப்பிரமணி அவர்கள் எண்ணமும் அப்படியே பலித்து விட்டது. அதனை நிரூபணப்படுத்தக் குற்றாலத்தில் ஆன்மிக தியான விழா வந்தது.

குற்றாலம் விழாவானது பவானி தியான சங்கத்தில் யார் யாராரெல்லாம் இருக்கின்றார் கள் என்பது புரிந்தது. பவானி ஞான சங்கத்தை விட்டு, சங்க குருவுடன் வெளியேறிச் செல்பவர்கள் பற்றிய உண்மை கள் வெளிச்சத்துக்கு வந்தது. அங்கு குற்றாலத்தில் நடந்த நிகழ்ச்சியில் நமது சுவாமி கலந்து கொள்ள இயலவில்லை. காரணம் நமது சுவாமியின் குடும்பத்தில் நடந்து வந்த சூழல் தான் காரணம். ஆனால் அங்கு குற்றால விழாவில் ஒரு முக்கிய கேள்வி கேட்கப்பட்டது. அது, “குரு எப்போது குருவாகின்றார்?” என்பதுதான். கேள்வியைக் கேட்டவர் பவானி தலைமைச் சங்க நிர்வாகி தவஞானி திரு. R.B அவர்களின் துணைவியார் திருமதி.ராஜம்மாள் பால சுப்பிரமணியம் ஆவார். இந்தக் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல முன்வர வில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு சிறுமி சபையில் எழுந்து நின்று, “இதற்குரிய பதிலை நான் கூறலாமா? ” என்று கேட்டாள். எல்லோரும் சிறுமியின் துணிவை எண்ணி வியந்து, அவள் பதிலுக்காகக் காத்திருந்த னர். அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர். தவத்திரு.SSM.ஐயா அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தார். இந்தச் சிறுமி திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். ஓரிடத்தில் நடை பெறும் எந்த நிகழ்வாயினும், அதனை வீட்டில் தியானத்தில் அமர்ந்து, அதனை அப்படியே எடுத்துச் சொல்லும் ஆற்றல் கைவரப் பெற்றவர்.
அவசியம் அவர் கூறிய பதிலைத் தருகிறோம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button