குருநாதரின் தீக்ஷை

232

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•06•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(365) மனிதனே புனிதன் —
குருநாதரின் தீக்ஷை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உண்மையை உணர்ந்து தியானம் செய்யும் மெய்யன்பர், அந்தப் பிரணவ மந்திரத்தின் சக்தி நாபிக் கமலத்தில் உதித்து, உடல் எங்கும் பரவுவதை உணர்ந்து கொள்வர். பிறகு அது மேல் நோக்கிப் பயணித்துச் செல்லும் போது ஆதாரங்களில் பற்றிச் செயல்படுவதை நன்றாக அறிந்து மென்மேலும் சாதனை புரிவர் . இந்த உண்மை யை சாதகர் உணர்ந்து கொள்வதில், ஒலி, ஒளி வடிவில் புருவமத்தி க்கு மேல் விளங்குகின்ற சந்திர மண்டலத்தில் தோன்றச் செய் தால், அது சிரசில் ஆகாய கேந்தி ரத்தில் கூடி விடும். அதனால் பேரின்பப் பெரு நிலை சித்திக் கும். மெய்யன்பர் தியான வேள்வியினால் தன்னை ஸ்ரீ ஈஸ்வரனுக்கு அர்ப்பணிக்கும் ஆகுதி மந்திரமே பிரணவமாகும்.
பிரணவம் எனப்படுவது சரீரத் தில் உள்ள ஆறு ஆதார அட்சரங் களை ஒன்றாக இணைக் கப்படு வதில் தான் உள்ளது. அதனை சாதனை புரியும் சித்தர்கள் சிரசில் உள்ள அறிவணுக்களைப் பக்குவமாக முறையில் வளர்ச்சி அடையச் செய்வார்கள். அதனால் அவர்களது மூளையில் உள்ள சூட்சுமப் பகுதியான மன மண்டலம் நன்றாக வளர்ச்சி அடைகிறது. மூளையின் சூட்சும பகுதி வளர்ந்து வருவதற்கு ஏற்ற முறையில் சூட்சுமம் உடலில் குணங்கள் வளர்ச்சி பெறுகிறது. ஆத்மனை ஒளி மயமாகக் கண்ட போதுதான் ஜீவன் ஒளி பெறும். அதனால் ஈஸ்வர கடாட்சத்து டன் தங்கள் உடலில் உயிரை நிலை நிறுத்திக் கொள்வார்கள்.

மூளையில் சூட்சுமப் பகுதி செயற் படுவதால் மூளையின் அணுக்கள் பரிசுத்தம் அடைகின் றது. இதனால் 1008 இதழ் தாமரை எனப் போற்றப்படும், சகஸ்ரதளம் மேல் நோக்கி செயல்படத் துவங்கி விடுகிறது. உலகாதயம் முழுவதும் மாற்றம் அடைந்து ஈஸ்வர அநுபூதி குணச்செயல்கள் சித்திக்கின்றது. மனித சரீரம் ஈஸ்வர சரீரமாக மாறி விடுகிறது. ஆத்மஞானத் தில் அனுபவ ஞானம் பெற்று அனுபவித்துக் கொண்டிருப்பார் கள். அவர்கள் ஈஸ்வர குமாரர் என்றே அழைக்கப்படுகின்றனர். சற்குருநாதர் தமது சீடனுக்கு உபதேசம் செய்திடும் முன்பு, இந்த மானிடப் பிறவியின் அருமை, பெருமைகளை எடுத்து உரைக்கின்றார்.வாழ்க்கையில் ஏற்படும் பற்பல சூழல்களைக் கடந்து செல்ல ஆலோசனைகள் தந்து உதவுகிறார். மெல்ல மெல்ல தெய்வீகப் பற்றுக்களை உண்டுபண்ணுகிறார். சமயநெறி களைப் போதித்து பிறவியை நீக்கி முக்தி நல்கும் வழிவகை களைச் சுட்டிக் காட்டி, வாழ்வின் பலபடிகளைக் கடந்து செல்ல வழி காட்டுகிறார். ஞான தாகத்தை ஏற்படுத்தி மனதை உறுதி நிலைப் படுத்துகி றார். நல்ல உணர்வுகளை தெய்வீக மாக மாற்றி அமைத்து பக்குவப் படுத்துகிறார். பிறகு தனது உபதேசத்தை சீடனது மனதில் பதிய வைத்து விடுகிறார். பக்குவப்படாத மனதில் குரு நாதரின் உபதேசம் பயன் தராது. பக்குவம் அடையாத சீடனது மனம் குற்றங்களுக்கும், தவறு களுக்கும் இடம் தந்து தனது முன்னேற்றத்தை அவனே தடை செய்து கொள்வான். நல்ல சீடனுக்கு குருவின் உபதேசத்திற் குப் பிறகு உள்ள நிலைகளில் உயர்வு ஏற்படும். அதன் தொடர்பு கொண்ட மெய்ப்பாடுகள் வெளிப் பட்டு, சீடனுக்கு மென்மேலும் அனுபவ நிலைகள் கிடைக்கப் பெறுகின்றன. தனது ஞானத்தால் ஆத்மாவையும், இறைவனையும் அதன் உண்மைகளையும் அறிந்து கொள்கிறான்.

குரு காட்டிய வழியில் எப்போதும் மனமானது அதில் பதிவுற்று நிற்பது அவசியம் எனச் சீடன் அறிந்து கொள்ள வேண்டும். நம்மை விட்டு நமது நிழல் பிரியாமல் இருப்பதைப் போன்றே, முன்புறம் நெற்றியில் உள்ள ஆக்ஞா பீடத்தையும், பின்புறம் உள்ள பிடரிக்கண்ணை யும் வெறுப்புணர்வு கொள்ளா மல், பொறுப்புணர்வுடன் கவனித்து வரவேண்டும். இது குருவின் சகாயத்தால் சீடன் சிரசைக் கடந்து செல்லும் உபாயமாகும். அது தவிர மனிதனின் மனதில் கீழான உணர்ச்சிகளுக்கு வலிமை எப்போதும் அதிகமாக இருக்கும். உண்மை ஞானம் என்னவென்று அறியாதவர்கள் கூட நல்ல உணர்ச்சிகளைக் கொண்டு மனதைப் பண்படுத்திக் கொண்டி ருந்தால் அவர்கள் கீழ்மை நிலை யை அடைய மாட்டார்கள். நல்லுணர்ச்சிகளை இவர்கள் பெருக்கிக் கொள்ள பல் வேறு பாவனைகளில் தெய்வீக உணர்வைத் தேடிக் கொள்வார் கள். இதனால் பக்தியில் முதிர்ச்சி நிலையை அடைந்து, தீய குணப் பண்புகளை விடுத்து நற்பண்புகளை வளர்த்துக் கொள்வார்கள். பக்தி என்பது நல்ல உணர்ச்சிகளைப் பெருக்கி இறைசக்தியை அடையும் வழி யாகும். இதனால் பக்தி மட்டுமே முடிவானது என்பது பொருள் அல்ல! பக்தி எனப்படுவது அது ஞானத்தை அடைவதற்குள்ள வாயில் என்பதுதான் பொருந் தும். இறைவன் மீது பக்தியில்லா ஞானத்தால் வீடு பேறடையும் வழியை அறிவதால் யாது பயன்?

இறைவன் ஜீவாத்மனுள் இருந்து கொண்டு இதய வெளியில் ஒளிப்பிரகாசமாய் ஒளியும் ஆத்மாவில் நிலை பெற்றுள்
ளான்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button