ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
26•04•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(300) மனிதனே புனிதன் —
கார்த்திகை நட்சத்திரம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்றைய தினம் எங்களுக்கு ஆனந்தமாக இருந்தது. அத்துடன் நிம்மதியான ஒரு மனநிலையில் இருந்தோம். நமது சுவாமியைத் தேடினேன். குளத்திற்குச் செல்லும் வழியில் ஐயிறை தேவி ஆலயம் உள்ளது. அங்கு நமது சுவாமி தரையில் அமர்ந்திருந்தார். நல்ல தேஜஸ் உடைய பெரியவர் கல்வி ன் மீது அமர்ந்து, நமது சுவாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். சுவாமி மிகவும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். பெரியவர் இடி போன்ற குரலில் சிரித்துக் கொண்டிருந்தார். அருகில் மிக வித்தியாசமான வளைவுடன் கூடிய கம்பு ஒன்று அருகில் கிடந்தது. எங்களுக்கு அவர் யாரென்று தெரியாததால், மரியாதை நிமித்தம் தூரமாக வணங்கி விட்டு, குளத்திற்கும் செல்லும் பாதையில் இறங்கிச் சென்றோம். எங்களின் பணிகளில் ஆழ்ந்து போனாலும் என் மனதில் அந்தப் பெரிய வரும், அவரது தேஜஸ் மிகுந்த அழகும், வட்டம் போல் மேலே வளைந்த கம்பும் எனது நெஞ்சை விட்டு அகலவே இல்லை. வெகு நாட்களுக்குப் பின்னர் சுவாமி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். எனக்கு வந்த பரவசம் கண்டு கண்டித்தார். “சக்தி இழப்பும் தேவைதானா? எதனையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும் ” என்று கூறிய அவர் எனக்கு சமாதானமும் சொன்னார். சுவாமி அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டேன்.
எங்களுக்கு சுவாமி போதித்தது குருகடாட்சம் பெறும் வழியை! “கார்த்திகை நட்சத்திரத்தை எண்ணி, வைராக்கியமுடன், மனம் உருகி, ஏக்கமுடன் பிரார்த்தனை செய்து வருபவர் களுக்கு, குருவின் கடாட்சம் நிச்சயம் கிடைக்கப் பெறுவர். இறையருள் தனது கருணையை அவர்கள் மீது காட்டுவார். தாங்கள் பெறும் அருளைப் பெருக்கிடவும், ஓர் உபாயமாகிய பரிகாரத்தினால் பெற்றிட முடியும். அது என்னவென்றால் கார்த்திகை நட்சத்திரம் துவங்கி 27 நட்சத்திரங்களின் தினச் சுழற்சியில், கார்த்திகை நட்சத்திரம் துவங்கி கார்த்திகை நட்சத்திரம் வரையிலும் பரிகாரம் காணவேண்டும். பரிகார ஜெபம் ” ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம் . ”
கார்த்திகை நட்சத்திரத்தில் குரு கடாட்சம் பெறும் வழி முறை:
மஞ்சள் நூல் சுற்றிய வெண்கலக் குடத்தில் கிணற்று நீர் விட்டுக் கலசம் அமைக்க வேண்டும். கலசத்திற்கு உத்திராட்சமாலை அணிவிக்கவும். அதன் முன்பு ஓர் தட்டில் விபூதி இட்டு பச்சக்கற்பூரம் கொண்டு ஜோதி ஏற்றி 108 குரு மகா மந்திரம் ஜெபம் செய்ய வேண்டும்.
பிறகு கலச நீரில் குளித்து விடவும். இப்படியாக 27 நட்சத் திரங்களில் தினப்படி கலசநீராடி வரவும். 27 நட்சத்திரங்களில் முறையாக இதனைப் போன்றே உள்ளன்புடன் செய்பவர்களுக்கு குரு கடாட்சம் சித்திக்கும். ”
குரு கடாட்சம் தவிர மற்றும் என்னென்ன பலன்கள் “கார்த்திகை நட்சத்திரம் குரு கடாட்சம் ” பூஜை தரும் என்பதைத் தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் கூறி அருளினார்கள். “இந்தப்பரிகாரம் செய்பவர்களுக்கு நிர்வாகம் சிறக்கும். செல்வவளம் ஏற்படும். பணியாளர்கள் குறிப்பறிந்து பணி புரிவார்கள். குடும்பக் கலகம், ஊர்க்கலகம் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை, சந்தோஷம் நிலவும். விரதம் இருந்து கடைப்பிடித்து வருபவர்கள் புலனடக்கமும், சொற்பலிதமும் கிடைக்கப் பெறுவர். துன்பங்கள் அனைத்தும் நீங்கிப் புகழ் ஏற்படும். இறையருள் மீது ஆராத பற்றுதல் உண்டாகும். சிவனடியார்கள் சாபம், பூத்தோஷம் விலகி விடும். இக்கலச நீரில் வெண்தாமரை மலர் இட்டுக் கஷாயம் செய்து சாப்பிட, தலைச்சூடு நீங்கி விடும். கலசநீரில் செந்தாமரை மலர் இட்டுக் கஷாயம் செய்து குடிக்க ஹிருதய வலித்துன்பம் அகன்று போகும். சூடு தணிந்து நலம் பிறக்கும்.”
ஞானியின் பக்குவத்தைப் பெற்று குருவருளால் வாழ்ந்து வரும் திரு. பாஸ்கரன் குருக்கள் இன்னும் தனது நினைவுகளாக நமது சுவாமி அவர்களிடம் அறிந்தனவற்றைக் கூற விருக்கின்றார்.நன்றி!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.