ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
24•04•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(298) மனிதனே புனிதன் —
காந்தப்பாறை மர்மம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கஞ்சமலை உச்சியில் உள்ள மரத்தினடியில் இருந்த மேடை மீது அமர்ந்திருந்தோம். பால் போன்ற நிலவின் ஒளியில் மலையின் ரம்மியமான தோற்றம் மனதில் ஒருவிதமான மயக்கத்தைத் தோற்றுவிக்க தியானத்தில் ஆழ்ந்து போனோம். கண்விழித்தபோது நிலவொளி யில் பாதைகள் நன்கு துலங்கின. காந்தப் பாறைக்குச் செல்லும் பாதையில் நமது சுவாமி எங்களை அழைத்துப் போனார். அங்கு செல்ல புதர்களின் நடுவே ஓர் ஆள் செல்லும் அளவிற்குப் பாதை நன்கு புலனாகியது. எங்களுக்கு அந்தக் கடுங்குளிரில் வியர்வை பெருக்கெடுத்தது. ஒர் அதீதமான வெப்பம் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது. பெரிய சரிவில் இறங்கிச் சென்றோம். அந்த நேரத்தில் அகல் விளக்கு ஒன்று சுடர் விட்டுப் பிரகாசித் துக் கொண்டிருப்பது சிறிது தூரம் முன்பாகவே தெரிந்தது. ஒரு வளைவைக் கடந்ததும் விளக்கு ஒளியைக் நன்றாக் கண்டோம். இன்னும் ஒன்று, வெப்பக் கதகதப்பு நீங்கி நடுக்கும் குளிர் காற்று வீசத்துவங்கி விட்டது. என்னால் குளிரைத் தாங்க இயலாது போனது. பாதுகாப்பு உடுப்புகள் இருந்ததால் ஒருவாறு சமாளித்துக் கொண்டேன். ஓரிடத்தில் சுவாமி நின்று விட்டார். இடது புறத்தில் மூன்று பெரும் பாறைகள் நின்றன. அவைகளின் நடுவில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நிழல் போன்ற உருவங்கள் பாறையின் அப்புறத்தில நின்று கொண்டிருந்தன. கண்களில் இருந்து குழல் விளக்கை் போன்று வெளிச்சம் வந்ததால் சற்று அதிர்வாக எனக்கிருந்தது. ஜடாமகுடதாரிகளான அவர்கள் உயரமாகத் தெரிந்தனர். கண்களைக் கசக்கித் தேய்த்துக் பார்த்த போது ஏதும் தென்பட வில்லை. மனதின் பிரமையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் பார்த்தது என்னவோ உண்மை. நமது சுவாமியைப் பார்த்தேன். அந்த திசையில் தனது வணக்கத்தை அவர் செலுத்திக் கொண்டிருந்தார். எனக்கு அது வியப்பைத் தந்தது! மெல்ல மெல்ல தெய்வீக உண்மைகளுக்குள் நான் அழைத்துச் செல்லப்படுவதை உணர முடிந்தது. சுவாமி கூறினார், ” நமக்கும சிறிது நேரத்தை ஒதுக்கித் தந்து விட்டு விலகி நிற்கின்றார்கள். அதோ காந்தப்பாறை! அதில் அமர்ந்து விட்டு வாருங்கள்.” சரிவில் இருந்து மேலே ஏறிச் செல்ல வேண்டும். பிரயாசைப் பட்டு அதன் மீது ஏறிக்கொண்டு அமர்ந்தேன். அவ்வளவு தான் தெரியும். எதையும் உணர முடியாத அந்தகாரத்தில் மூழ்கிப் போனேன். எனக்கு உணர்வு வந்தபோது மரத்தடி மேடையில் நாங்கள் அமர்ந்த நிலையிலே யே இருந்தோம். உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருந்தது. நடந்ததெல்லாம் கனவா? இதனைப் பற்றி நமது சுவாமிகள் விளக்கம் கூற மறுத்து விட்டார். “பாஸ்கரா இந்த உலகில் ஒவ்வொருவரும் தனது அனுபவத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். எல்லாமே அவரவர்களைப் பொறுத்தமட்டில் அவைகள் உண்மைதான். வீண் குழப்பத்தை விட்டுவிடுங்கள் ” என்றார். கஞ்சமலையில் ஸ்ரீ காலாங்கி நாதர் தரிசனம் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த தவத்திரு. ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களுக்கு நன்றி. எனது மனதின் சஞ்சலம் சமாதானம் அடையும் நேரமும் விரைவில் வந்தது. அதற்குக் காரணமும் சுவாமி தான். சுவாமி அவர்களின் கிராமத்து வீட்டில் பசுபதியுடன் சென்ற போது தான் எனக்கு பதில் கிடைத்தது.
ஐவர் மலையில் தங்கியிருந்து நமது சுவாமி தவத்தில் ஈடுபடப் போவதாக எங்களுக்கு நம்பிக்கையான தகவல் கிடைத்தது. அப்போதெல்லாம் சுவாமி அவர்கள் செல்லும் இடங்களில் பக்தர்கள் கூடிவிடுவர். காரணம் ஞான தாகம் உடையவர்களுக்கு ஊற்றாக இருந்தது தான். எங்களது வேலைப் பளு காரணமாக மூன்று நாட்கள் அவருடன் தங்கி, தியானமும், பிரார்த்தனைகளும் நடத்தினோம். இப்போது இருக்கும் வசதிகள் எல்லாம் ஐவர்மலையில் அப்போது இல்லை. நாங்கள் சென்ற சமயம் கடுங்குளிரான நேரம். மலையின் மீது காற்று மிகவும் வேகத்துடன் வீசும், அத்துடன் மிக அதிகமாகக் குளிரும். நான் பனியன் அணிந்து அதற்கு மேல் இரண்டுசட்டைகள் அணிந்து போர்வை போத்தியபடி இருந்தேன். எல்லோரும் தனித்தனியே ஏகாந்த தியானத்தில் இருந்தோம். அங்கு சுவாமி எப்போதும் தலையில் பெரிய டவல் ஒன்றைத் தலைப் பாகை போல் அணிந்து இருந்தது வித்தியாசமாகத் தென்படவே, அது பற்றிய விளக்கம் கேட்டேன். “இங்கு அநேக ஆத்மாக்கள் தவம் புரிய வரும் இடம். தவம் பூர்த்தியாகாமல் போய் இருக்கலாம். மீண்டும் தவப்பூர்த்திக்கு மற்றவர்களிடம் இருந்து சக்தியை ஈர்த்து எடுத்திட வாய்ப்புக்கள் அதிகம். இங்கு உயிருடன் சமாதி ஆனவர்கள் அநேகம் பேர். பிடரிக் கண்ணிலிருந்து சக்தியை உறிஞ்சிக் கொள்பவர்கள், அதிலும் அமானுஷ்யத்தில் அதிகமாக உள்ளனர். பொதுவாக வீட்டை விட்டு வெளியிடங்க ளில் தபசு செய்பவர்கள், தலையில் துண்டோ, தலைப் பாகையோ அணிவதால் சக்தியை நாமறியாமல் கவர்வது தடுக்கப்படும்” என்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.