காட்சி தந்த குருதெய்வம்.

178

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

26•12•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(179) மனிதனே புனிதன் —
காட்சி தந்த குருதெய்வம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“ஸ்ரீ ஈஸ்வர பட்” என்ற நாமத்தைப் படிப்போர், கேட்போர் அனைவரது துன்பங்களும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து, வேறு இருக்கவே முடியாது! வரட்டாற்றின் கரையில் தவத்திரு.நடராஜா சுவாமியின் ஜீவனத்திற்கு, சற்குருநாதரின் நாதரின் உத்தரவின் பேரில், விவசாய பூமி ஒன்றை வாங்கி உழவுத் தொழில் செய்து வந்தார் பிரதமசீடர். சற்குருநாதரின் பிரிவுக்குப் பிறகு, பட்டினி கிடந்தாவது தமது இன்னுயிரையும் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அங்கு இருந்து வந்த திரு.நடராஜா சுவாமி அவர்களின் கனவில் ஸ்ரீ ஈஸ்வர பட் தோன்றினார்.

“என்னைப் பார்க்க வரவில்லையா?” என்ற வினாவைக் கேட்டதும், அறிவு விழிப்படைந்து, துக்கம் நீங்க எழுந்து சமாது வைக்கப்பட்ட இடத்தை நோக்கி ஓடத் துவங்கினார். அங்கு சமாதுவில் வாசனை மிக்க பத்தி எரிந்து கொண்டிருந்தது! விளக்குகள் ஒளிவீசிக் கொண்டிருந்தன! சமாதுமீது புஷ்பங்கள் வாறி இறைக்கப்பட்டுக் கிடந்தது! முறைப்படியான வழிபாடுகள் நடத்தப்பட்டிருந்தது கண்டு தவத்திரு. நடராஜா சுவாமி திகைத்துப் போனார்! சற்று முன்தான் பூஜை நடை பெற்று இருந்தது. ” யார் அந்த நபர்? நாமும் இனிக் தொடர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும்” என அவர் மனது கூறியது. மறுநாள் பூஜைகள் பொருட்களுடன் அங்கு சென்றவருக்கு, சமாது அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்து இருந்தது. பூஜைகள் செய்பவரைக் கண்டு பிடித்து, அவர் யார்? என அறிந்து கொள்ள எண்ணம் கொண்டார்.

தினமும் திரு.நடராஜா சுவாமி அதிகாலையிலோ, மதியமோ, மாலைப்பொழுதோ அல்லது இரவு நேரமோ, எந்த நேரத்தில் சென்றாலும் சுமார் ஐந்து நிமிடங்கள் முன்னதாக ம் படையல் பூஜைகள் சிறப்பாக நடந்து விட்டிருக்கும்! இந்த மர்மத்தைக் கண்டு பிடிக்கத் தகுந்தபடி, நல்ல நண்பர்களுடனும், சற்குருநாதரின் பக்தர்களுடனும் சென்று, அருகில் இருந்த சுடுகாட்டினுள் மறைவாக அமர்ந்து கொண்டார்கள். யாரும் தென்படவில்லை. மூன்று நாட்கள் இரவும், பகலும் ஆட்கள் மாறி மாறி கவனித்தும் யார் எனப் புலப்படவில்லை. சிறிது கண்ணயர்ந்தாலும் உடனே பூஜை நடந்து விடும்.

மூன்று நாட்கள் சென்று பூஜை செய்வது யார் எனக்கண்டு அதிர்ந்து போயினர். தொடர்ந்து சுடுகாட்டில் மூன்று நாட்கள் குடியிருந்த பிறகே விடியற்காலையில் நான்கு மணிக்கு ஒரு உருவம்
சமாதுவை நோக்கி மெல்ல மெல்ல வந்து கொண்டு இரூந்தது. தவத்திரு.நடராஜா சுவாமி மெல்ல எழுந்து அமர்ந்தார். விளக்குகள் ஏற்றப்பட்டு, நறுமணமுள்ள வாசனைப் பூக்கள் தூவப்பட்டது. மெல்ல மெல்ல விளக்கு வெளிச்சத்தில் உருவம் புலனாகியது. திரு.நடராஜா சுவாமி அவர்களுடன் வந்தவர்களும் பார்த்தனர். ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குருநாதரின் சுவாமி தனது சமாது பீடத்திற்குத் தானே பூஜைகள் செய்தபடி நின்று கொண்டு இருந்தார். தவத்திரு. நடராஜா சுவாமி, தமது கண்களால் காண்பதை நம்பாமல், கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு வியப்புடன் பார்த்தார். பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. உடன் வந்து சுடுகாட்டில் துணை வந்த நபர், தனது ஆவலை அடக்க முடியாமல் எழுந்து நின்று “சுவாமி, சுவாமி ” என கூக்குரல் இட்டு விட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button