ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
10•10•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(93) மனிதனே புனிதன் —
கருடன் கால் விலங்கு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கருடன் திடீரென தனது அருகே வந்து அமர்வதும், தான் போகும் இடமெல்லாம் அது வந்து அருகே அமரந்து கொண்டு, குரல் கொடுப்பதும் விந்தையாக இருந்தது! வயிற்றுச் சின்னவன் பயந்து கருடனை விரட்டினாலும் அது போவதில்லை! களத்து மேட்டின் மரத்தடியில் அவர் ஓய்வாக உட்கார்ந்து கொண்டதும், கருடனும் அவருடன் ஒட்டி அமர்ந்து கொண்டது. இப்போது பயம் விலகிவிட கருடனை கவனித்துப் பார்த்தார். கருடன் கால்களில் தாயத்துடன் கூடிய சில பொருட்கள் கம்பியினால் கோர்த்து கால்விலங்கு போல் பூட்டப் பட்டிருந்தது. உடனே பரபரப்பானார்!
கருடன் மீது அனுதாபம் வந்து விட்டது. கருடனை எடுத்து மடியினில் வைத்து அதன் கால்விலங்கை எடுக்க முயன்றார். கருடன் வலியினால் தீனக்குரலில் கத்தியது. எப்படியோ அதனை உடைத்தும் விட்டார். பெரிய மகன் சாப்பாடு எடுத்துக் கொண்டு சைக்கிளில் அப்போது வந்திருந்தார். தகப்பனார் கருடனுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக அவரும் நினைத்து விட்டார். வயிற்றுச் சின்னவன் கருடன் காலில் கட்டப்பட்ட கால்விலங்கை அவிழ்த்துத் தனது இடது கையில் கட்டிக் கொண்டார்.
நல்ல ஆகிருதியான உடம்பு கொண்ட அவர் சட்டென எழுந்து நின்று, கைகள், தலையை ஒருமாதிரி ஆட்டியபடி தீனக்குரலில் கத்தியபடி குதிக்க ஆரம்பித்தார். அருகில் வந்த மகளையும் எதிரியை விரட்டுவது போல் விரட்டிக் கொண்டு வந்தார்.தகப்பனாருக்கு ஏதோ ஆகி விட்டது என்று எண்ணி பயந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக ஓட்டிப்போனான். அவரும் புரியாதவாறு ஏதேதோ பேசிக் கொண்டு மகன் பின்னால் விரட்டிப் போனார்.
நாகப்பா வா என சுவாமியை அழைத்தாரல்லவா? சுவாமியின் கண்களும் அவரின் கண்களும் கலந்தன. சுவாமி குழைந்த பார்வையால் அவரைப் பார்த்துத் தனது குருநாதரை எண்ணியதும் அவருள் மாற்றம் ஏற்பட்டது. வலசம்மா அதற்குள் வந்து விடவே அவர்களை விரட்டிப்போய், தானும் விழுந்து அடிபட்டுக் கொண்டார். அந்த அதிர்ச்சியில் குணம் பெற்றாலும் விரைவில் இறைவன் திருவடி நிழலில் ஐக்கியம் பெற்றுக் கொண்டார். அதற்கு முன்பு எல்லோருடைய அன்பு க்கும் பாத்திரமானார்.
நமது சுவாமியின் கிராமத்தில் தேனீக்களினால் இரண்டு நாட்களாக எந்த வேலை களுக்கும் யாரும் போகாமல் பயந்து இருந்தனர். கிராம பந்த் என்று அதனைச் சொல்லிக் கொண்டனர். சுவாமி குருநாதர் எண்ணத்தில் ஆற்றங்கரை நோக்கிப் போனார். சுவாமி வீட்டின் வளர்ப்பு நாய் ஜாக்கி அங்கு படுத்திருக்கும். உசேன் அதற்கு ஆட்டுப்பாலைக் கிண்ணத்தில் ஊற்றிச் சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தார். சுவாமியைப் பார்த்ததும் உசேனின் கோபமும் பறந்து போய் விட்டது.
“எஙகே போறப்பா? அந்தக் கிழவனப் பார்ககத்தானே? உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? ” என்று உசேன் கேட்டதும் சுவாமி, “உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ” என்றார். உடனே சுரீர் எனக்கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட உசேன் அழுதார். சுவாமி சமாதானம் சொன்னார். “நேத்தைக்கு வந்த கிழவன் உனக்குப் பெருசாப் போச்சா? நாம சின்ன வயசிலேர்ந்து ஒண்ணாமண்ணாப் பழகிட்டு வாரோம். நான் அந்தக் கிழவன நறுக்குனு நாலு வார்த்தை கேக்காம விடமாட்டேன்.வா போயி அந்தக் கிழவனப் பார்ப்போம்” என்று சுவாமி கையைப் பற்றி நொண்டியபடி இழுத்தார்.
பிறகு, “சித்த இரு. என்னதான் இருந்தாலும் தம்பி அவரு உனக்கு வேண்டப் பட்டவர். வெறுங்கையுடன் போனா அவ்வளவு நல்லா இருக்காது. கருப்பட்டி எள்ளுமாவு இடுச்சு வச்சிருக்கோம்.வா எடுத்துட்டுப் போயி திங்கக்குடுப்போம்” என்று இரண்டு மூன்று பெரிய உருண்டைகளை வாழை இலையில் பொதிந்து எடுத்துக் கொண்டார். அவர்கள் வீட்டில் மோர் சாப்பிடுவதால் தயிர் கடைந்த வெண்ணெய் ஒன்று தண்ணீரில் போட்டு இருந்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
தனது வளர்ப்புத் பிராணிகளுக்குத் திருமணம் செய்து வைத்ததாக உசேன் கூறினார். அது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது
சுவாமி சிரித்து விட்டார். சுவாமிக்கும் புரிந்து விட்டது. தன்னை யார் திருமணம் செய்யப் போகிறார்கள்? என்ற ஆதங்கத்தில் உசேன் இந்தத் திருமணம் செய்து வைத்து மனதிற்கு ஆறுதல் தேடுகிறார் என்பதுதான்! உசேன் மீன்பிடிக்கும் தூண்டிலை எடுத்துக் கொண்டார்.சுவாமி அதைப் பார்த்ததும்,”அட எல்லாம் பொண்ணு மாப்பிள்ளை விருந்துக்குத்தான்” என்று சொல்லிக் கொண்டே, மண்புழு தோண்டி எடுக்கச் சிறு கனமான கம்பியை எடுத்துக் கொண்டார்.
சுவாமி சற்குரு நாதரின் ஞாபகமாகவே எதுவும் பேசாமல் மெளனமாகப் பின்னால் சென்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
-ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.