கனவா நனவா இது எதனால்?

219

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•09•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(78) மனிதனே புனிதன் —
கனவா நனவா இது எதனால்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு முறை டாக்டரின் தாயாரிடம்,” நீங்கள் எனது குருநாதரைச் சந்தித்து இருக்கின்றீர்கள்” என்று சுவாமி கூறினார். அதற்கு அவர்கள்,” என்னுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்” என்றவர் அது பற்றிய விபரத்தைக் கூறினார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள நடைப்பயிற்சி சாலையில், ஒரு மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது திருடன் ஒருவன் இவரது கழுத்தில் இருந்த தஙக நகையைப் பறிக்க முயன்றிருக்கிறான்.

கழுத்து இறுகியதால் வலி தாளாமல், இரண்டு கைகளாலும் கழுத்து சங்கிலியைப் பிடித்தபடி தரையில் அமர்ந்து விட்டார். “குருநாதா காப்பாற்றுங்கள்” என்று சப்தமிட்டுள்ளார். எதிரில் சற்குருநாதர் கையில் கம்புடன் வருவதைக் கணடு, பயந்து போன திருடன் அதிர்ச்சி அடைந்து ஓடிவிட்டானாம். பிறகு வீட்டிற்கு வந்து குடிக்க நீர்அருந்தித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, தனது வீட்டினரிடம் நடந்ததைக் கூறினார்கள், எல்லோரும் குருதேவருக்கு நன்றி கூறினார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகமான நம்பிக்கை கொண்டு தியானம் தொடங்கி விட்டார்.

நமது சுவாமி அவர்களை மகாலிங்கபுரத்தில் இருக்கும் தங்களது இல்லத்திற்கு வருமாறு டாக்டர் திரு.ராஜசேகரன் அவர்கள் தாயார் அழைத்திருந்ததால் கொஞ்சம் பன்னீர் திராக்ஷைப் பழங்கள் வாங்கிக் கொண்டு சுவாமி போயிருந்தார். அதனை ஏற்க மறுத்த அவர்கள், ” இப்படி வீணான அனாவசிய செலவுகள் செய்யக்கூடாது” என்று கூறினார்கள். ” மற்றவர்களின் தேவை அறிந்து செலவு செய்ய வேண்டும். தான தருமங்கள் செய்யலாம்” என்றும் அறிவுரை கூறிவிட்டு தனது குடும்பத்தினர் பற்றியும் சுவாமிடம் கூறினார்.

நான்கு பையன்களில் பெரிய மகன் ஜவுளித் தொழில் செய்வதாகவும், மற்றும் மூன்று மகன்களும் டாக்டர் தொழில் புரிவதாகவும் கூறினார்கள். தனது ஒரே மகளை தியானக் கூட்டத்தின் தலைவர் திரு. ராமசாமி அவர்களுக்கு மணம் முடித்திருப்பதாகவும், அவர்கள் வீடு பொள்ளாச்சி கடை வீதியில் உள்ளதாகவும் கூறினார். நாங்கள் எல்லோரும் தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களைக் குருவாக ஏற்றுக் கொண்டு தியானம் செய்து வருவதாகவும், தியான சங்கத் தலைமையகம் பவானியில் உள்ளது என்றார்.

“எங்களின் குரு பக்தர்களைச் சந்திக்கச் சுற்றுப் பயணம் வரும் போது, இங்கு எங்கள் இல்லத்திற்கு வருகை தருவார். நீங்கள் அவரை அவசியம் சந்திக்க வேண்டும். உங்களுக்கு தியானத்தில் எந்த சந்தேகங்கள் இருந்தாலும் விளக்கம் தருவார்” என்று கூறிவிட்டு விடை கொடுத்தார். அப்போது அவர்கள்,” அப்பா அன்று சவண்டம்மா கோயிலில் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் யாரப்பா? பார்த்தால் கையெடுத்துக் கும்பிடச் தோன்றியது” என்றார். அவர் ஒரு மாமனிதர் என்று சுருக்குச் சொல்லி சுவாமி விடைபெற்று பெற்றார்.

பிரசவத்துக்கு திருமதி. மீனாம்பாள் நாச்சியார் பிறந்தகம் சென்றிருந்தார். பாட்டியிடம் தியானக் கூட்டம் பற்றிய செய்திகள் எல்லாம் சுவாமி கூறிவிட்டு ஒரே சம்பவம் திரும்பத் திரும்பக் காட்சியாக வருவது பற்றியும் சொன்னார். அவர்கள் அதற்கு,” உனக்கு முன் ஜென்ம நினைவுகள் காட்டப் படுகிறது. அதனைத் தெரிய அதிக ஆர்வம் காட்டாதே. தெரிவதை எல்லாம் எழுத்தில் எழுதி வைத்துக் கொள். பின்னால் அது உபயோகப்படும் ” என்றார்கள். சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வரர் பற்றிய பேச்சுக்களை அதிகமாகப் பேசிக் கொள்வார்கள்.

பழனியில் இருந்து திருமதி. குப்பம்மாள் அவர்கள் சுவாமி வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஈஸ்வரபட்டா சமாதிக்கு வரச்சொல்லி அழைப்பார்கள். சந்தர்ப்பம் வாய்த்தால் வருவதாக சுவாமி தனது பெரியம்மா மகளிடம் கூறி வந்திருக்கிறார். “சமாதியில் என்ன நடை பெறுகிறது?” என்று சகோதரியிடம் கேட்டார். அதற்கு, “ஞாயிற்றுக்கிழமை இரவு அருள்வாக்குக் குறி சொல்வார்கள்.தொப்பி சிகரெட் வாங்கிப்போய் சமாதியில் ஊதுவத்தி மாதிரி கொளுத்தினால், புகை புகை யாக வரும். ஆனால் சிகரெட் வாசனை வீசாது. மூலிகை அல்லது விபூதி மணம் வரும். நடராசு சுவாமி எலுமிச்சை கனி வைத்து, ஈஸ்வரபட்டா சாமியைக் கூப்பிடுவார். கனியில் எம்மகளுக்குக் காட்சி கொடுப்பார். அந்த சமயத்தில் யார் என்ன கேள்வி கேட்டாலும் எம்பொண்ணு சரியான பதிலைக் கேட்டுச் சொல்லும். வந்து தான் அந்த அதிசயத்தப் பாரேன்!” என்று விளக்கம் தந்தார்.

பாட்டி அவர்கள் சுவாமியிடம்,” இதுபற்றி உனது குருநாதர் அபிப்பிராயம் கேட்க நினைக்கிறாயா? தயை கூர்ந்து கேட்டு விடாதே. மகான்களின் செயலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். நீ தியானத்தில் அமர்ந்து எண்ணமற்று இரு ” எனக் கட்டளையிட்டார். நமது சுவாமி தனது குருநாதரை சந்தித்த போது மனநெகிழ்ச்சியில் இருந்து விட்டார். அவரிடம் எதையும் கேட்கத் தோன்றாது, மெளனமாகி விடுவார்.

(வரலாறு தொடரும்)
நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button