கந்துவட்டி செய்த சதிச் செயல்!

229

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

24•03•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(267) மனிதனே புனிதன் —
கந்துவட்டி செய்த சதிச் செயல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காடா நெசவுக்குப் பெயர் பெற்ற அந்த ஊரில் முக்கால் பங்கு ஜனங்கள் கிறிஸ்தவர்கள். இரண்டு மிகப்பெரிய தேவாலயங்கள் அங்கே இருந்தன. வட இந்திய வியாபாரிகள் வந்து நேரடிக் கொள்முதல் செய்யும் அளவிற்கு ஊர் பிரசித்தி பெற்றது. அக்காலத்தில் கள்ளச் சாராய வியாபாரம் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் இருந்து நமது வியாபாரி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், மது போதையில் தள்ளாடி வருபவர்கள் மீது மோதாமல் வீடு செல்ல முடியாது. இந்தப் பேர்வழிகளை் பிடிக்க காவல் துறையினர் வந்தால் அருகில் திறந்திருக்கும் ஏதாவது கடைகள் அல்லது வீடுகளில் பதுங்கி மறைந்து தப்பி விடுவார்கள். அநேகம் பெண்கள் அந்தப் பாதையில் செல்ல அஞ்சுவார்கள். கள்ளச்சாராயத் தொழிலை மறைக்க மெயின் பஜாரில் கந்து வட்டிக்கடையை அந்தக் கள்ளச் சாராய வியாபாரி நடத்தி வந்தார். தியானத்தின் வல்லுநர்கள் மது வியாபாரிக்கு உரிய மரியாதை செலுத்தினாலும், அந்த நபர் இவர்களை மதிக்காமல், இவர்கள் செய்யும் கூட்டுப் பிரார்த்தனைகளைக் கேலியும், கிண்டலும் செய்து வந்தார். அவரிடம் கந்து வட்டிக்குக் கடன் பெற்றவர்கள் பாடு சொல்லி முடியாது. அது அவர்களது தொழில் அது போகட்டும். ஆனால்,

நமது அப்பாவி வியாபாரிக்கு வலிய வந்து, கடன் தந்து தொழிலை அபிவிருத்தி செய்யச் சொல்லி வற்புறுத்தினார். பணம் தந்து தனது தாராள மனதை கந்து வட்டி காட்டிக் கொண்டார் அவரும் பணம் பெற்று வியாபாரத்தில் போட்டார். கடைப் பணம் எப்படிக் காணாமல் போகிறது? என்பது அவருக்குப் புரியவே இல்லை. சந்தைக்கு சாமான்கள் வாங்க வரும் அவரது சகோதரிகள், சிறிது நேரம் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ய உதவுவார்கள். அந்த சமயம், தங்களுக்குத் தேவையான பணத்தை அவர்களே எடுத்துக் கொள்வார்கள். இதனாலும், கடினமான கந்து வட்டியினாலும், வியாபாரி கடன் சுமையால் துவண்டு போனார். அதற்குள் அவரது மூன்றாவது மகளுக்கு மூளைக்காய்ச்சல் கண்டிருந்தது. குழந்தையின் பெரியம்மா பாசத்துடன் வெள்ளலூர் கூட்டிப் போய் நாட்டு வைத்தியம் பார்க்க, இரண்டு கண்களும் பார்வையை இழந்து விட்டது. அந்நாளில் மூளைக்காய்ச்சல் என்பது அபூர்வம். விஷயம் தெரிந்தவர்கள் ஒரு பல் வெள்ளைப் பூண்டை அடிக்கடி முகர்ந்து பார்த்தால் மூளைக் காய்ச்சல் என்பது குணமாகி விடும். பார்வை இழந்த பெண் குழந்தைக்குப் பார்வை வர ஞானகுரு.தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களைச் அழைத்துச் சென்று தியானத்தில் இருந்த அன்பர்கள் காட்டினார்கள். அங்கு சிறப்பாகக் கூட்டு தியானம் நடைபெற்றது. ஞானகுரு காட்டிய தியானம் வழியை இன்று வரையிலும் அக் குடும்பத்தினர் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

“கண்களின் பார்வை முழுவதும் போய் விட்டது. இனிமேல் இந்தக் குழந்தையைக் குடும்பத்தினர் பாதுகாத்து வரவேண்டும். ஆனால் தியானம் கற்றுக்கொண்டால் பிறவாப் பெரு நிலையை அடைந்து விடுவார்” என்று ஞானகுரு ஆசியருளினார். கந்து வட்டியின் பார்வை அப்பாவி வியாபாரியின் வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டைக் கொடுத்த பணத்திற்கு எழுதி வாங்கி விட எண்ணினார். அதற்காகப் குறி சொல்லும் மாந்திரீகனை நாடினார். அவனது ஆலோசனைப்படி முன் கதவு க்கு அருகில் உள்ள பூஜை அறைக்கு நெருப்பு வைத்தார். அவரது ஆள் ஒருவன் பழைய துணியில் எண்ணெய் ஊற்றித் தீ வைத்து, ஆள் அரவம் அற்ற நேரத்தில் ஜன்னல் வழியே பூஜை அறையில் வீசினார். பூஜை அறையில் உள்ள மரசாமான்கள் பற்றி எரிந்தன.
தக்க சமயத்தில் நெருப்பு அணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை குறி சொல்பவனை அப்பாவி வீட்டிற்கு அனுப்பி, “இங்கு குடியிருந்தால் சர்வநாசம் விளையும். வந்த விலைக்கு விற்று விட்டு வேறு இடம் பார்த்துச் சென்று விடுங்கள் ” என்று வீட்டுப் பெண்களை பயமுறுத்தினார். பழனி முருகன் மீது பாரத்தைப் போட்டு விட்டு அமைதியானார்கள். அதுவும் அதிக நாட்கள் நீடிக்க வில்லை.

மாந்திரீகன் ஆலோசனைப்படி இரவு நடு ஜாமத்தில், கோழியின் கழிவுகள் மற்றும் ரத்தத்தை, வீட்டின் முன்புறத்தில் வாயில்படிகளில் கொட்டி விட்டுச் சென்று விடுவார்கள். அதிகாலையில் தெருவில் நடந்து செல்பவர்கள் கண்டு பயந்து விலகும் அளவிற்கு அது கோரமாக விளங்கியது. தினம்தோறும் கோழியின் கழிவுகள் கொட்டப்படுவதும், குறைந்த விலைக்கு வீட்டை விலை பேசுவதும் தொடர்ந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்!


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button