ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
13•03•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(256) மனிதனே புனிதன் —
கதவில் மோதிய பொருள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி வாழ்ந்த கிராமத்தில் வாழந்தவர் தையல் தொழிலாளி. இவர் மிகவும் உயரமாக இருந்ததால் கிராமக் குழந்தைகள் ‘ நெட்டக்கால் டைலரண்ணா ‘ என்று அன்புடன் கூப்பிடுவர். அந்தப் பட்டப் பெயர் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. பேரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்க மாட்டார். இவரைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறோம்.
இந்த அறிமுகம் எதற்கு என்றால் இந்த டைலர் அவர்கள் ஒரு ஆபத்துதவியாக வந்து சேர்வது தான். எதைப் பற்றியும் அவர் பொருட்படுத்த மாட்டார். அநேக பிரக்யாதிகள் பெற்ற நம்ம டைலர் சமயத்தில் சுவாமியின் குழந்தைகளுக்கு உதவ வருகிறார் பாருங்கள்!
மகாலிங்கபுரம் தவயோகினிப் பாட்டி திருமதி.சுந்தரம்மாள் அவர்களைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து சந்திர மெளலீஸ்வரன் தினமும் தியானத்தில் அமர்ந்து வரலானார். சிறிய குழந்தைகள் தியானம் செய்யக்கூடாது என்று சிலர் கூறுவார்கள். இயற்கையின் இயல்பை அவர்கள் நன்கு உணர்ந்து கொள்ளாமல் அப்படிக் கூறுவார் உண்டு. சற்குருநாதர் இயக்குகிறார்; அவரது ஈர்ப்பினுள் வந்தவர்கள் தவத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கு அறிவியல் விளக்கங்கள் எல்லாம் கேட்கலாம்! ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராத சில விதி விலக்குகளும் உலகில் உண்டு. இதனை அனுபவஞானம் என்று கூறினாலும், சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் வெறும் வாய்ப்பேச்சில் ஞானம் பேசுபவார்கள். அப்படியே சந்தர்ப்ப வசத்தால் தியானம் செய்து வந்தாலும், அகங்கார குணத்துடன் கூடிய ஆணவ மாயை இருளை விட்டு வெளியே வராமல் அதன் சுகத்தில் தனது காலத்தை ஓட்டுபவர்களாக இருப்பர்.
நமது சுவாமி அவர்களுடன் சேர்ந்து சந்திர மெளலீஸ்வரன், தியான அறைக்குள் வந்து தியானம் செய்து வரலானார். அது அவரது சொந்த விருப்பத்தின் பேரில் தான் நடந்தது. நமது சுவாமி சற்குரு நாதரின் கட்டளையைச் சிரமேற் கொண்டு தவத்தில் ஈடுபட்டு வந்தார். தன்னைச் சுற்றிலும் என்ன நடந்தாலும் அதனைப் பற்றிய சிந்தனையின்றி, தனது லட்சியத்தில் தங்கு தடையின்றி சென்று கொண்டிருந்தார். ஆனால் குழந்தைகள் அப்படி இருக்க வில்லை. காரணம் அவர்களுக்கு ஏதோ ஒரு கட்டளை சற்குரு நாதரால் இடப்பட்டிருந்தது. அதனை அவர்கள் மீறக்கூடாது என்ற வைராக்கியத்துடன் நடந்து கொள்வதை கடமையாகக் கருதினார்கள். பக்குவத்தைப் பற்றிய விவாதம் இங்கு எடுபடவில்லை! ஒரு லட்சிய நோக்கோடு சுவாமி குடும்பத்தில் பாட்டியுடன் சேர்த்து ஐவரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எழுதப்படாத சட்டமாகி இருந்தது! இதன் பின்னணி அவர்களுக்கு ஆரம்பத்தில் புரியாமல்தான் இருந்தது. அதனைப் புரிந்து கொண்டபோது அவர்களால் அது பற்றி ஏதும் கூற இயலவில்லை. தெய்வீக உண்மைகளை உணர்ந்து கொண்டு சேவை மனப் பான்மையுடன் இது வரையிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
நமது சுவாமி அவர்கள் தியான அறைக்குள் மனமொன்றி தவத்தில் இருந்தார். சந்திர மெளலீஸ்வரரும் மெதுவாக தியான அறைக்குள் வந்து வழக்கப்படி அவரும் தியானத்தில் அமர்ந்திருந்தார். வெகுநேரம் சென்று மெல்லத் கண் விழித்த மெளலி, “அப்பா, சாமி கூப்பிடுகின்றார்” என்றார். தியான நிறைவிற்குப்பின் கண்களை விழித்த நாகராஜன் சுவாமிக்கு பூஜை அறையில் யாரும் தென்படாததால், மெளலியைப் பார்த்தார். மெளலி சுடர் விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கை் சுட்டிக் காட்டினார். ஆச்சரியமான உண்மையும் கூட! விளக்கின் சுடர் ஒளியில் சற்குரு நாதரின் அருள்மிகு தோற்றம் காட்சியானது. அப்போது கதவை தட்டும் ஓசை கேட்டது. விளக்கில் இருந்து சற்குரு நாதரின் குரல் மெளலியை எச்சரித்தது. அதனைச் செவிமடுத்த மெளலி எழுந்து சென்று, மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தவுடன் அலறினார். மெளலியின் அலறல் சப்தம் கேட்டுக் கண்களை விழித்த நாகராஜன் சுவாமி அவர்கள் மெளலியை ஏறிட்டுப் பார்த்தார். மெளலி மீண்டும் அலறியபடி தியானம் அறையின் கதவை வேகமாக மூடி விட்டார். கதவில் ‘டொம்’ என்ற சப்தத்துடன் ஏதோ வந்து வெளியே விழுந்தது. நமது சுவாமியின் அருகில் மெளலி வந்து அமர்ந்து கொண்டார். பயத்ததில் அவர் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.