ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
13•11•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(136) மனிதனே புனிதன் —
கடுமை மிகுந்த சோதனை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களின் திருமணத்திற்கு முன்பு ஒரு முக்கிய சம்பவம் நடைபெற்றது. உண்மையில் அது சுவாமியின் குடும்பத்தையே அழித்துவிட எண்ணி, பெரியப்பா குடும்பத்தினர் செய்த மிகப்பெரிய சதிவலை. நெஞ்சத்தைப் பதறச் செய்யும் அந்த நிகழ்ச்சிகளையும் அறிந்து கொள்வோம்.
வயல் அறுவடை முடிந்து நெல்லை அரிசி மில்லுக்குக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வீட்டு உபயோகத்திற்காக எடுத்து வைத்த நெல் மூடைகள் வீடு வந்து சேர்ந்தன. சுவாமியின் தாயார் திருமதி.பாப்பம்மாள் அவர்கள் உறவினர்கள் பேச்சைக் கேட்டு உள்ளூர் மில்லுக்கு நெல் இருபது மூடைகள் அனுப்பி வைத்தார்கள்.
குருநாதரின் எதிர்ப்பாளர்கள் தம்பன வசியன் குடும்பத்தார் என்றும் தீய சக்தியின் செயலுக்குக் கட்டுப்பட்டவர்கள். குருநாதருக்கும், அவர் தம் உண்மைச் சீடர்களுக்கும், இன்னல்கள், தொல்லைகள் விளைவிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டவர்கள். அவர்களின் செயற்பாடு மில்அதிபரின் மகன்களையும் அவர்கள் வசமாக்கி வைத்தது. “அரிசியைக் குருணையாக அரைத்துவிடு. அதை மண்ணில் கொட்டி விடு”என்ற ஆணைக்குக் கட்டுப்பட்டு அப்படியே அரைத்து அதனையும் மண்ணில் கொட்டி விட்டனர். ஆரம்ப காலத்தில் தீமையாளர்களின் கை ஓங்கித்தான் வந்திருக்கிறது. அரிசி மூடைகளக் கேட்பதற்டுச் சென்ற ஆட்களையும் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினர். இனி கலகம் ஆரம்பம் என்று தீமை சக்தியாளர்கள் மகிழ்ச்சி கொண்டனர்.
இந்நிகழ்ச்சி நடந்த மறுநாள் மில் அதிபரின் மகன்களில் இருவர் போதைவஸ்த்துவைச் சாப்பிட கிராமம் வந்திருக்கின்றனர். போதை தலைக்கேறத் தடுமாறிக் கொண்டிருந்தவர்களை மாலை நேரம் சுமார் ஏழுமணிக்குத் தம்பன வசியன் குடும்பமே அவர்களை அடித்துத் துன்புறுத்தி மண்டையைப் பிளந்து விட்டு, “‘சுவாமியின் குடும்பத்தினர் மீது கையை நீட்டினால் , இது தான் உங்களுக்குக் கதி” என்று நம்பவைத்து விட்டு ஓடிவிட்டனர். இந்நிகழ்ச்சி பெரிய புயலாக மாறியது. கிராம மக்களின் ஒற்றுமையைக் குலைத்து இரண்டு பிரிவுகளாக ஆக்கி விட்டது.
கால வெள்ளம் இறைவனின் தீர்ப்பை நிதானமாகவே, அதுவும் வலிமையாக, கொண்டு வந்து சேர்ந்த பொழுது தம்பனவசியனின் குடும்பத்தார் அடைந்த இன்னல்களுக்கும், இழப்புக்களுக்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. நன்மை, தீமைகள் இரண்டையுமே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை இயற்கை பாட போதனைகளாகவே தந்து கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் தனது சுயநலத்தின் காரணமாக அதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். தவறு செய்பவனை ஞாயப்படுத்திப் பேசும் குணத்தன்மைகள் இக் கலியில் வளர்ந்து விட்டது.
மில்அதிபரின் அவர்களுக்குப் பொள்ளாச்சியில் அசைவ உணவு விடுதி ஒன்று பிரபலமாக இருந்தது. அவரின் மூன்று மகன்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் உண்மைகள் தெரியாததால்,
தங்களை இக்கொடுமைக்கு ஆளாக்கியது சுவாமியின் குடும்பத்தினர் தான் என்று நம்ப வைத்தனர். புரளியைக் கிளப்பி தகுந்த ஆட்களைக் கொண்டு தம்பனவசியனின் குடும்பத்தினர் கிராம ஜனங்கள நம்ப வைத்தனர். தாங்களே அடி,உதைகளைத் தந்து விட்டு, அந்த மூன்று சகோதரர்களையும் தங்களின் வீட்டிற்கு அழைத்துப் பலமான விருந்து கொடுத்து உபசரித்து,”நாங்கள் உங்கள் பக்கம் தான். தகுந்த அடியாட்களை அழைத்து வந்து அக்குடும்பத்தை முடித்து விடுங்கள்” என்ற தைரியத்தையும் ஓதிவைத்தனர். உடன் பிறந்தே கொல்லும் வியாதியும், உறவும் என்ற வாசகத்தை மீண்டும் புதுப்பித்தனர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.