கஞ்சமலை சித்தரின் நண்பர்கள்.

231

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•04•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(296) மனிதனே புனிதன் —
கஞ்சமலை சித்தரின் நண்பர்கள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவர்களுடன் தவ வாழ்வில் ஈடுபட்டிருந்த திரு. பாஸ்கரன் குருக்கள் தனது அனுபவ உண்மைகளை நினைவு கூறுகிறார். ” அப்போது ஓர் அழகிய வாலிபன் ஒருவர், நாங்கள் நிழலுக்கு ஒதுங்கியுள்ள பாறையின் அருகே வந்து நின்றார். அவரது தோற்றம் எங்களுக்கும் ஒரு விதத்தில் அச்சம் தருவதாகவே இருந்தது. கிழிந்த அரைக்கால் டவுசர், மேலே கிழிந்து போன அழுக்குப் படிந்த சர்ட். அந்த சர்ட்டில் பொத்தான்கள் மாற்றிப் போட்டிருந்தது. அழுக்குடன் புழுதியும் படிந்த பொன்மேனி. கையில் பெரிய காகிதப் பொட்டலம் ஒன்றை வைத்திருந்தார். மலைப் பாதையில் செல்பவர்களில் சிலரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளால் வைது கொண்டி ருந்தார். சிலர் மீது தமது காகிதப் பொட்டலத்தில் இருந்த பொரியை எடுத்து வீசித் திட்டி விரட்டினார். பலர் பயந்தபடி விலகிச் சென்றபடி இருந்தனர். எங்களுக்கு இப்போது மேலும் ஒருவிதமான அச்சம் உண்டான காரணமாக பாறையின் அருகே ஒட்டி நின்று கொண்டு, நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களைப் பார்த்தோம். ஏகாந்தமான இடங்களில் தவத்தில் அமரும் பழக்கம் கொண்ட அவர் அமர்ந்த உடனே சிலை போலக் காணப் பட்டார். இப்போது அந்த வாலிபன் பார்வை நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி மீது விழுந்தது. மெல்ல அவரை நோக்கி நகரத்துவங்கினார். எனது மனம் திக்திக்கென அடித்துக் கொள்வதும் நன்றாகக் கேட்டது. பலமாகச் சிரித்துக் கொண்டே நமது சுவாமி அருகில் சென்று, ‘விழித்துக் கொள்வாய்! எழுந்திருந்து மலைப் பாதைக்கு வந்து சேர்வாய்’ என மிரட்டும் தொனியில் கத்தினார்.”

“நமது சுவாமியின் கண்கள் மெல்ல விழிக்க அன்புடன் கருணைப் பார்வை பார்த்தார். அந்த வாலிபனும் சுவாமியிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அது தெய்வீக ஆன்மிக விஷயங்கள் பற்றியதாக இருந்தது. அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள்? என்பதை அறிய எனது மனதில் ஏக்கம் உண்டானது. காரணம் எனது காதில் போகநாதர், நீல வண்ணஒளி, இளமையின் ரகசியம், பிறைச் சந்திரன், சுவாச மந்திரஜெபம் என்ற வார்த்தை கள் காதில் விழுந்தது. இது போதாதா எனது ஞானதாகம் தீர்வதற்கு? பெறுமையாக இரு, நமக்கு நல்ல விஷயங்கள் கிடைக்கும் என்று எனது மனதிற்கு ஆறுதல் படுத்தினேன். நல்ல ஆன்மிகப் பாதையில் வழி நடத்தும் சித்தர் மெருமக்களுக்கு நன்றி கூறினேன். அவர் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களை சரியான நல்ல மலைப் பாதைக்கு அழைத்து வந்தார். ‘ஏன் நின்று விட்டீர்கள்? வாருங்கள் போகலாம்’ என்று எங்களுக்கு வழிகாட்ட முன்னதாகச் சென்றார். நான் சுவாமி அவர்களிடம் இவர் யார் சுவாமி? என்று கேட்டேன். உடனே முன்னதாகப் புறப்பட்ட அந்த அழகிய வாலிபன் திரும்பி நமது சுவாமி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். சுவாமி அந்த வாலிபரிடம், ” தம்பி, நீ என்ன செய்து கொண்டிருக்கின் மாய்?” என்று புன்னகை மாறாமல் கேட்டார். அதற்கு அவர்,” மக்களுக்கு அதிர்ஷ்டத் தையும், செல்வத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டி ருக்கிறேன்” என்று கூறினார். “நீ இந்த மலைக்குத் அடிக்கடி வருவாயா?” என்று சுவாமிகள் வினவினார். அதற்கு அந்த வாலிபர், “நான் எப்போதும் இங்கேயேதானே உள்ளேன் ” என்றார். எனக்கு இப்போது புரிந்து விட்டது. இருவரும் பரிபாக்ஷையில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உடனே ஞாபகத்திற்கும் வந்து விட்டது. நமது சுவாமி அந்த வாலிபரிடம், ” உனது கையில் என்ன பொட்டலம்?” என்றார். வாலிபனோ, ” இதுவா, இது பொரிகடலைப் பொட்டலம். இது எனக்கல்ல, என் நண்பர்களுக்கு” என்றார்.

“அங்கு உனது நண்பர்கள் நிறைய இருக்கிறார்களா? ” என்று சுவாமிகள் கேட்க, அவ்வாலிபன், “நிறைய நண்பர்கள் இருக்கிறார் கள். என் வருகைக்காகக் காத்துக் கொண்டி ருப்பார்கள். என் நண்பர்கள் யாரென்றால், எறும்புகள், வண்டுகள், பூச்சிகள், பறவைகள் இவர்கள்தான்” என்று சிரித்தபடியே வேகமாகச் சென்றவர், நின்று, திரும்பி நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமியைப் பார்த்து விட்டுத் தான் நின்ற இடத்தில் இருந்து, ” யாம் கூறிய பிறைச்சந்திர நீலவொளியை வாசியில் பிரகாசி! வெளி விடும் சுவாமி பாதத்தில் இருக்கிறது மெய்” என்று பலமாகச் சிரித்த படியே அவ்வாலிபர் வேகமாகச் சென்று மறைந்து போனார். திடீரென்று அவர் மலையின் உச்சியில் தோன்றி, “வாங்க வாங்க” என்று இடிக் குரலில் சிரித்தார். அவர் சிரித்த சிரிப்பு மலை முழுவதும் எதிரொலித் தது. நாங்கள் நமது சுவாமியிடம், “அவர் யார் சுவாமி? தங்களிடம் அவர் என்ன கூறினார்? ” என்று ஆவலினால் கேட்டோம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம் !

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button