ஓம் சக்தி ஒளியின் ஆசீர்வாதம்!

244

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•05•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(322) மனிதனே புனிதன் —
ஓம் சக்தி ஒளியின் ஆசீர்வாதம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு ஆன்மிக பத்திரிகையில் முக்கியமான குறிப்பு ஒன்று வெளியாகியது. மிகப் பிரச்சித்தி யும், பிரபலமுமான, கோடானு கோடி பக்தர்களைப் பெற்றிருந்த, மேன்மைமிகு ஓம் சக்தி அம்மா அவர்கள் தமது சக்தி ஒளி பத்திரிகையில், பவானியில் உள்ள தியான சங்கத்தைப் பற்றிய கட்டுரையைப் பெருமை யுடன் எழுதியிருந்தார். “மனதுக்குள் இருக்கும் மனோசக்தியை தியானத்தின் மூலம் பயன்படுத்தி உண்மை களை அறிந்து கொள்ள முடியும் என ஆங்கிலேயர் ஒருவர் நிரூபித்துள்ளார். அதே போன்று தமிழ்நாட்டிலும், பவானியைத் தலையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சத்தியத்தின் சக்தி நிலை தியான சங்கமானது , இறைவனை ஒளியாக எண்ணி தியானம் செய்திடப் போதித்து வருகிறது. திரு.வேணுகோபால சுவாமி என்பவர் அங்கு தியானம் கற்றுத் தருகிறார். அதன்படி தியானம் செய்தால் தெய்வீக தொடர்பில் காட்சிகள் கிடைக்கிறது. உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். ” மேல்மருவத்தூர் ஓம் சக்தி தவத்திரு. பங்காரு அடிகளார் அவர்கள் தமது சக்தி ஒளி ஆன்மிக பத்திரிக்கையில் தான் அப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

அப்படி முக்கியத்துவம் வாய்ந்த அந்த அமைப்பை உடைத்து ஞான குருவை அங்கேயிருந்து வெளியே கொண்டு சென்று ஆதாயம் தேடுவதற்கு ஒரு சாரார் திட்டமிட்டுக் காரியம் செய்து வந்தனர். அதன்படியே ஞானகுருவின் ஆசைகளும் நிறைவேறியது. ஞானகுரு அவர்கள் 1987 -ம் ஆண்டு மே மாதம் “உயிரே கடவுள் ” என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூலில் தான் பவானி சத்தியத்தின் சக்தி நிலை தியான சங்கத்தில், தவத்திரு.SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்களின் ஆதரவுடன் தங்கியிருந்ததாக, ஒரு வார்த்தை கூடக் குறிப்பிட வில்லை. மாறாகக் குமார பாளையத்தில், அவினாசியப்பன் என்பவர் ஆதரவுடன், பண்டரி கோயில் என்ற பஜனை மடத்தில் தான் தங்கியிருந்து மக்களுக்குச் சேவைகள் செய்து கொண்டிருந்த தாக அதை மட்டுமே எழுதியுள் ளார். நடுநிலை தவறாக் கொள்கை எங்கே? மன்னிக்கும் மனம் வேண்டும் மானுடர்க்கு என்ற ஞானப்பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.ஆனால் ஓம் சக்தி தவத்திரு. பங்காரு அடிகளார் அவர்கள், ஞானகுரு பவானி சத்தியத்தின் சக்தி நிலை தியானசங்கத்தில் தங்கியிருந்து, தியானம் போதித்து வருகிறதாக குறிப்பிடுகிறார். பக்தி யோக மார்க்க உருவ வழிபாடுகள் நடத்தி மக்களுக்கும், தெய்வத் திற்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்திக் காட்டிய ஓம் சக்தி ஆத்ம ஞானியும் அவரே!

குருவிடமும், பக்தர்களிட மும் இத்தகைய முரண்பாடுகள் தேவைதானா? வழிகாட்டி மரம் சரியான வழியைப் காட்டா விட்டால் நம்மைப் போன்று நம்பி வரும் ஆன்மாக்களின் கதி?
பகுத்தறிவுப் கொள்கையில் இருந்து வந்தவர் தவத்திரு.SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள். பிறகு தியான வழியை நன்கு அறிந்து, தெளிந்து, நன்மை, தீமை எனும் இரு வழிகளிலும் அனுபவ ஞானத்தைப் பெற்றவர். பூசலநாயனார் தனது மனக் கோயிலில் இறைவனை எழுந்தருளல் செய்தது போன்றே சற்குருவை தனது இதயத் தாமரையில் எழுந்தருளச் செய்து ஆராதனைகள் செய்து வந்தவர். கலசம் வைப்பது, அதனுள் காசுகள் இடுவது, சூரிய தியானம் செய்து கலசத்திற்குச் சக்தி அளிப்பது, எந்திரத் தகடுகள் வைத்து வழிபடுவது இவற்றை தியான சங்கத் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. “இறை சக்தி யை உள்ளத்தில் இருத்தித் தியானிப்பதைத் தவிர மற்றவை தேவையில்லை” என்ற ஆத்ம ஞானக் கொள்கையில், அத்வைத மார்க்கத்தில் உள்ளத்தைத் செலுத்தி, எங்கும் இருக்கும் இறைவன் எனது உள்ளத்திலும் இருக்கிறார். அது போதும் எனக்கு! தவம் செய்தே பிரம்ம சக்தியாகிய சர்வேஸ்வரனை அடைந்து விடுவேன் என்ற வைராக்கியத்துடன் தியானம் செய்து வந்தார்.

பக்தி மார்க்க வழியே சென்று தியானம் செய்து இறைசக்தியை் பெற்று விட வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஞானகுரு, தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள். பாமர மக்கள் எடுத்த எடுப்பிலேயே தியானத்திற்கு வந்து விட மாட்டார்கள். மெல்ல மெல்ல பக்தி மார்கத்தில் இருந்து தான் ஞான மார்கத் திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தியானத்தில் அமர்ந்து காட்சிகள் காண வேண்டும் என்ற புதிய கொள்கை ஒன்றை வகுத்து, எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைத்து, அதனைச் செயல்பட வைத்து, பக்தி, ஞான யோகத்திற்கு இணைப்பை ஏற்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றவர் ஞானகுரு என்றால் மிகையாகாது. அவருக்கு நன்றி சொல்ல அனைத்து தியான அன்பர்களும் கடமைப் பட்டுள்ளோம்.தியானத்தில் காட்சிகள் கிடைக்கும். அதனைக் கண்ட பிறகு அந்தக் காட்சிகளுக்கு உண்டான விளக்கங்களைப் பல விதங்களில் எடுத்துச் சொல்லி, நமக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விடுவது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button