ஒளி + ஒலி = காந்த சக்தி

305

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•10•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(100) மனிதனே புனிதன் —
ஒளி + ஒலி = காந்த சக்தி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்கந்தன் புராணத்தில் பிரம்ம தேவரிடம் கார்த்திகேயன் “படைப்பின் தன்மை” பற்றிய வினாவினைக் கேட்பார். “பிரணவம் கொண்டு சிருஷ்டி செய்கிறேன்” பிரம்மதேவர் பதில் கூறுவார்.
“பிரணவம் என்பது யாது? “–முருகர்.
“பிரணவம் என்பது ஓம் என்ற நாதம்”– பிரம்மன்.
“அந்த ஓம் என்பதன் பொருள்?” — முருகர்.
“ஓம் என்பது அ கார, உ கார, ம காரம்”– பிரம்மா.
“அந்த, அ, உ, ம என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்!” — முருகர்.
“முருகா சிருஷ்டியின் ரகசியம் வெளியிடப்படுவதற்கல்லவே!”– பிரம்மதேவர்.
“தகுதி உள்ளவனுக்குப் போதிப்பதுதான் முறை. எங்கே சொல்லும்!?” — முருகர்.
பிரம்மதேவர் எல்லாம் அறிந்தவர் மெளனம் சாதிக்க, படைக்கும் தொழிலை முருகனும் மேற்கொண்டார்.

‘ஓம்’ — என்பதன் உண்மைப் பொருளை சிவன் முருகனிடம் விளக்கம் கேட்கிறார். முருகர் அதனைச் சொல்கிறார்!

” சிருஷ்டிக்கு நாதமாகிய சப்தமும், விந்துவாகிய ஒளியும் தேவை. ஒளி தன்னுள் உற்பத்தி செய்வதைத் தானே கொண்டு சென்று பரவெளியில் ஊடுருவிப் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. ஒளியாகிய விந்தின் ஆற்றல் தனது நிலையில் அதிகப்படின், சிருஷ்டிக்கும் போது உண்டாகும் காந்தம் தனது நிலை கெட்டு மின்சார மாக மாறிவிடும். அதனால் ஜீவனின் நிலை கெடும்.”

“சப்தம் எனப்படும் ஒலித் தன்மை படைக்கப்படும் காலத்தில் அதிகப்படின் அதனின் காந்த புலமும் தன்நிலை கெட்டு மின்சாரமாக மாறுவதால் ஜீவன் அழியும்!”

“ஒலி, ஒளித் தன்மைகள் சம விகிதத்தில் இருந்தால் தான் சிருஷ்டிக்கும் செயல் காந்த சக்தியில் நிலை பெறும்!”

“ஒளி எனப்படும் விந்தின் சக்தி காந்தபுலத்தில் செயல் படும் போது சித்தம் என்ற ஆற்றலாக உருவெடுக்கும்!”

“ஒலி எனப்படும் நாதத்தின் சக்தி காந்த புலத்தில் செயற்படும் போது புத்தி என்ற ஆற்றலாய் வெளிப்பட்டுத் தான் ஆத்மாவாகப் பிரகசிக்கும்.”

“ஒளி எனப்படும் விந்து சக்தியுடன் ஒலித் தன்மையான நாதம் இணையும் போது ஜீவனுக்கு உயிர்த் துடிப்பு ஏற்பட்டு உயிராத்மாவாக மாறும்.”

“ஒலித் தன்மை அணுக்கள் தனக்கு ஒத்த ஒலி சக்திகளைச் சேர்த்து அணுக்கூடாக காந்த புலத்தில் இணையும். காரணம் செயலில் அதற்குத் தனக்கு ஒத்ததை ஈர்க்கும் ஆற்றல் அதில் உண்டாகும்.”

“ஒளித்தன்மையான விந்தணுக்கள் காந்த புலத்தில் செயற்பட்டு உயிர்த்துடிப்புடன் உயிர் என்ற இறையாக, ஒலி என்ற நாதசக்தியுடன் இணைந்து காந்த புலத்தில் உயிராத்மாவாக உருவெடுக்கும்”.

“சரீரம் பெற்றதும் ஒளித் தன்மை சித்தம் என்ற பெயரில் செயல்படும். ஒலித்தன்மை புத்தி என்ற பெயரில் தொழிற்படும்.”

“ஒலி, ஒளித் தன்மைகள் மிகுதிப்படாமல் இருந்தால் அறிவின் ஆற்றலாய் மாறும்.”

“ஒலி ஒளித் தன்மைகள் இணைந்து உயிராத்மாவாக மாறிய பிறகு ஒலியே உடலாகவும், ஒளியே உயிராகவும் செயல்படும்.”

“சரீரம் கிடைத்த பிறகு சித்தமும், புத்தியும் செயல்படுவதை உபதேசம் வாயிலாக குரு முகத்தில் மனிதன் அறிந்து கொள்கிறான்.”

“உலகில் குளிச்சி, வெப்பம் ஆகிய ஒலி, ஒளித் தன்மை அதிகப் படும் போது காந்த சக்தி மின்சார சக்தியாக மாறுவதால் ஜீவன் இழப்பு ஏற்பட்டுப் பாலை நிலங்கள் உண்டாகின்றன.”

“வானில் உறையும் தெய்வீக சக்திகளில் நன்மை, தீமை சக்திகளில் எதனை அடைய வேண்டும் எனப் பிரியம் கொள்பவர்கள் இந்த ஒலி, ஒளித் தன்மையின் சக்தியை உபயோகப் படுத்தும் வழிமுறைகள் ஆசான்களால் உபதேசிக்கப்படுகிறது.”

“இறைவனால் படைக்கப்பட்ட தெய்வீக சக்திகளைத் தொடர்பு கொள்வதும், வசீகரிப்பதும் நாதவிந்து சக்தியில் உண்டு.”

இன்னும் அநேக விஷயங்களைத் தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் தனது சற்குருவின் மூலம் அறிந்து கொண்டு எங்களிடம் கூறியதை எனது அறிவில் சிறிது தான் வெளிப்படுத்த முடிந்தது. நமது சுவாமி கூறியதை அப்படியே கூற எனக்கு இறையருள் துணை நிச்சயம் அனுகிரகிக்க வேண்டும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button