ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
25•04•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(299) மனிதனே புனிதன் —
ஐயிரை வாழிடம் ஐவர்மலை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திரு.பாஸ்கரன் குருக்கள் தனது வாழ்க்கை என்னும் அனுபவப் புத்தகத்தில், ஆன்மிகப் பக்கங்களை மீண்டும் படித்து தனது ஞாபகங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் :
ஐவர்மலையில் பகற்ப்பொழுதில் குரங்குகளின் அட்டகாசம் ஆரம்ப மாகிவிடும். யாத்திரீகர்கள் தூங்குவதற்கு தகரக்கொட்டகை ஒன்று இருந்தது. வானரப் படைகள் கொட்டகையின் தகரம் வேய்ந்த மேற்கூரையை பிய்த்து எடுப்பதற்கான முயற்சியிலும், மின்சார ஒயர்களைக் கடித்துக் துப்புவதிலும், மின்சார பல்பு களை எடுத்து உடைப்பதிலும் மிகுந்த ஆர்வத்தைத் காட்டிக கொண்டிருந்தன. பகற்பொழுதில் தியானம் செய்திட அமைப்பு உருவாக அவகாசம் தேவைப் பட்டது. ஆகவே பகற் பொழுது களில் ஆன்மிகம் பற்றியும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வானரப்படைகள் அமையுடன் இருக்க சமைக்கப் பட்ட நல்ல உணவுகள், நமது சுவாமி அவர்களின் ஆலோசனை யுடன் இரண்டு, மூன்று இடங்களில் வைக்கப்பட்டன.
இப்போது அவைகள் சாப்பிட்டு விட்டு அமைதியுடன் இருந்தன. இரவுக் காலம் துவங்கியதும் கண்கள் தெரியாததால் அவை இருப்பிடம் சென்று விட மாலை நேரத்தில் புறப்பட்டு விடும். இந்த வானரக்கூட்டம் ஒரு சமயம் நமது பக்தர்களுக்கும் செய்த உதவிகள் நம்பவே இயலாத ஒரு சம்பவம் தான். அது சுவாமியின் பாடங்களில் படித்து மகிழ்வீர்கள். நாங்கள் பகல் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றி பணி செய்து கொண்டி ருந்து விட்டு அனைவரும் உறங்கச் சென்று விட்டோம். இரவு மூன்று மணிக்கு நமது சுவாமியின் குரல் கேட்டு எழுந்து கொண்டோம்.
எங்களை அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு வரச் சொன்னார்கள். அந்தக் குளிரில் குளத்தின் நீர் எப்படி இருக்கும்? குளித்தால் உடம்பு விரைத்து விடும். நான் தயங்கியபடியே நின்றேன். என்னைப் பார்த்த சுவாமிகள், “இது என்ன வேஷம்? போர்வையை எடு. ஆடைகளைக் களைந்து குளித்து விட்டு வா ” என்றார்கள்.
நான், “மிகவும் குளிராக இருக்கிறது சுவாமி ” என்றேன்.
” குளித்து விட்டு வா, குளிர் போய் விடும். கார்த்திகை நட்சத்திரம் பார்க்க வேண்டும். அதுவோர் வானியல் பாடம் ” என்றார்கள். ஒரு வழியாகக் குளித்து விட்டு குளிர் நீங்கிய நிலையில் மலையின் தென் பகுதியின் உச்சியில் கணபதி கோயில் ஒன்று உள்ள பகுதிக்கு அழைத்துப் போனார். பாதைகள் கிடையாது. சரிவான பாறை மீது ஏறிச்சென்றோம். மேலே செல்லச் செல்லக் காற்றின் உக்கிரம் தாள முடியாதபடி இருந்தது. ஆளைச்சாய்த்து விடும் அளவினுக்கு அதன் வேகம் இருந்தது. கணபதியின் கோயிலை நெருங்கும் வரை நான் தவழ்ந்தபடியே சென்றேன். குளிர்ந்த நீரில் குளித்து விட்டுச் சென்றதால் குளிர் எனக்குப் பழகி விட்டது. தலையில் துண்டு கட்டிக் கொண்டு அமர்ந்து இருக்கிறோம். காற்று முகத்தில் பலமாக வீசி உதடுகளை அசைத்துக் கொ ண்டிருக்கிறது. சுவாமி அருகில் அமர்ந்து உடலைச் சமன் படுத்தி டும் யோக வித்தையை சொல்லிக் கொடுத்து, அதனை நாங்கள் சரிவரச் செய்கின்றோமா எனக் கவனித்தபடியே இருக்கிறார்.
குளிர் நீங்கி உடல் சமநிலைக் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. பிறகு, தலை உச்சியில் இரண்டு விரற்கடை அளவு உயரத்தில் தேவஜோதி மலரைச் சுடரொளியாக எண்ணத்தில் செலுத்தி சிறிது நேரம் அமைதி யாக கவனிக்கச் சொன்னார். அதன் பிறகு பிடரியில் முகுளத் தின் மேல் புறமாக உள்ள நெற்றிக் கண்ணில் கவனத்தைச் செலுத்தத் சொன்னார். பிடரிக் கண்ணில் நிலை பெற்றிருந் தோம். சுவாமி அவர்கள் பிடரிக் கண்ணில் இருந்து அகப்பார்வை யை சிரசின் உச்சியில் அதன் மேல் இரண்டு விரற்க்கடை உயரத்தில் இருக்கும் தேவஜோதி மலரின் மீது தியான நினைவைச் செலுத்தச் சொல்லி அமைதியாக இருக்கச் சொன்னார். கவனம் உச்சியில் வைத்த உடனே ஓர் நிம்மதியான தியான ஈர்ப்பில் ஆழ்ந்து போனோம். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தோம் தெரியவில்லை. சூரியன் தோன்றி வெகு நேரம் சென்றே கண்விழித்தோம். நமது சுவாமி அவர்களை அங்கு காண வில்லை.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.