ஐயனின் பரோபகார சேவைகள்.

229

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

24•05•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(328) மனிதனே புனிதன் —
ஐயனின் பரோபகார சேவைகள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தமது சற்குருநாதனை அமுது உண்பதற்கு எழுந்தருளச் செய்ய வேண்டி உத்தரவு பெற வந்த திரு.சின்னய்யன், அந்த அறைக் குள் திருக்கைலாயக் காட்சியைக் கண்டு ஆனந்தப் பரவசமானார். இது அவனருளால் அவன் தாழ் வணங்கிக் கிடைத்திடும் அரிய காட்சியன்றோ? திரு.சின்னய்யன் தேன் குடித்த வண்டுபோல் ஆனார். சற்குரு நாதர் அருளாசியை வழங்கிக் கொண்டு அமர்ந்திருக்க, தேவாதி தேவர்களும், முனிவர் ரிஷிகளும், சகல பூதகணங்க ளின் வாழ்தொலியால் அகிலமே ஆனந்தம் உற்றது போல் தோன்றியது. தமது பதினைந் தாவது வயதில் காணுதற்கரிய கைலாயக் காட்சியை கண்டு களித்த, அன்னார் தம் புனிதத்து வத்தை எடுத்துரைக்க வார்த்தை களே இல்லை எனலாம். இப்போது கதவம் தானாகவே திறந்து கொண்டது. அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டி ருக்கும் வானியல் காட்சிகள் அவருக்குக் கிடைக்கப் பெற்றது. திடீரெனப் பெரிய ஒளி வெள்ளம் தோன்ற சகல காட்சிகளும் அதனுள் மறைந்து அறை நிசப்தமாகியது. அன்றிலிருந்து சிவசிந்தனையே கதி என்றாகிப் போனார். ஊராகும் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாகப் பேசத் துவங்கினர். இவரது இளமைப் பருவத்தில் பகவான் கிருபையில் ஆட்கொள்ள வந்தார். சிவனின் சிந்தனை மிகுத்து மாடுகளை ஓட்டிக் கொண்டு போனவர் கண்களில் ஓர் அழகிய சிவாலயமும், அங்கே அவரது சற்குருநாதர் இருப்பதையும் கண்டு, அவரது மலரடி தொழுது மகிழ்ந்தார். அங்கு சற்குருநாதர் அருளிய ஞான உபதேசங்களை ஏற்று உய்தார்.

சற்குருவின் உபதேசப் பொன்மொழிகள் :–
“எவ்வுயிர்களுக்கும், உண்மை யான தயவும், இரக்கமும், கருணையும், அன்பும் செலுத்தி வருவாய், அவை பிறப்பிறப்பைப் போக்கி, உன்னை இறைசக்தி யின் பேரருளுக்கு உரியவனாக் கும். பிறவா நிலையைத் தந்தரு ளும். எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்துவாய். எந்த விஷயங்களானாலும் சரி, பற்றற்றுத் தாமரைஇலைத் தண்ணீர் போல, உலக விஷயங் களோடு ஒட்டியொழுகி வருவதோடு, தனித்திருக்கவும்
பழகுவாய். நீ இவ்வளவு மிகுந்த பற்றுக் கொண்டிருப்பது நியாய மன்று. பற்று, பந்தமுடையோர் முக்தி நிலைக்குத் தகுதியாக மாட்டார்கள். ஏனெனில் அன்பும், பந்தமும் மனதின் வெவ்வேறு நிலைகளில் தோன்றுவனவா கும். பந்தமானது பிறப்பிறப்பா கிய தளையை ஏற்படுத்தி மரணத்தின் சுழற்சியில் ஆழ்த்தி விடும்.”

“சகல தத்துவங்களும் நம்மால் ஆளப்பட வேண்டும். ஆனால் தத்துவங்களால் நாம் ஆளப்படக் கூடாது. நமது வினை அறுந்து போனால் எல்லாத் தத்துவங் களையும் கடந்தவர்களாவோம்! தத்துவங்கள் கடந்தோர், ஒளிச் சுடராகி ஒளி உலகத்தைத் தரிசிக் கின்றார்கள். இறைவனில் நித்திய வாழ்வை அடைகிறார் கள். ஆகவே உனக்குள் தத்துவப் பரிசோதனை செய்து கால பந்தங்களில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்வாய்! நாம் முழுமையான சாதனை முயற்சிகள் செய்தால், மனம் பரிபூரண நிலைக்குத் சென்று கொண்டிருக்கும் வழியில், நினைப்பளவில் சித்துக்களை இயற்றும் ஆற்றல் பெறுகிறது. இதனை மெய்ப்பித்து உனக்குக் காட்டவே அன்று உனது வீட்டில் சில சித்து விளையாட்டுக்களைக் காட்டினோம். இந்த சித்து விளையாட்டு வித்தையினால் மனிதன் கடைத்தேற முடியாது. ஆத்மா இறையருளாக மாற முடியாது. சித்துக்கள் அனைத் தும் மனித முன்னேற்றத்தைத் தடை செய்யக் கூடியவை. இதனை உனது அனுபவத்தி னால் அறிந்து கொள்ளலாம். இதில் சிந்தையைச் செலுத்தி விடாதே. எவ்வளவு பெரிய அரிதான வித்தையாகிய சித்துக்களைக் காண வேண்டியது வந்தால் அவற்றால் வியப்படை யாமல், அதைச் சிறு துரும்பாக எண்ணுவாய். மற்றும் இல்லறத் திலிருந்து கொண்டே உன்னால் இயன்றவற்றை உலக மக்களுக்கு உதவிகள் செயவாய்.
உனது வாழ்வில் நன்மை, தீமை எதுவரினும் அவைகள் ஊழ்வினைகள் என்பதை உணர்ந்து கொள் வாய். உள்ளதில் சாந்தமும், பொறுமையும் கொண்டு இல்லறத்தை இனிமையாக நடத்து. இறுதியில் முக்தி நிலை அடைவாய்” என்று சற்குருநாதர் உபதேசித்தார்.

“இல்லறமாகிய உலகச் சூழலில் சிக்கி அவதியுறத் தமக்கு விருப்பம் இல்லை” என்று திரு.சின்னைய்யன் சற்குருவின் பாதம் பணிந்து பவ்யமாய் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அதற்குப் பரம்பொருளாகிய சற்குரு நாதர் கூறுவார், ” மகனே, சின்னய்யா கேள்! இல்லறத்தில் இருந்து தான் துறவற நெறிக்கு வரவேண்டும். எந்தவொரு விஷயங்களிலும் இறைவன் சிந்தனையோடு இல்லறத்தை நடத்தி வருபவனுக்கு, பற்றுக்கள் மெல்ல மெல்ல அவனை விட்டு நீங்கிப் போகும். அப்படிப் பட்டவன் முற்றும் துறந்த ஒரு தவயோகியை விடச் சிறந்தவன் ஆகின்றான். “இல்லறமின்றித் துறவறம் இல்லை. இல்லறமின்றி நல்லறம் இல்லை ” என்பது ஆன்றோர் வாக்கல்லவா? உலகினுக்குக் நன்மைகளைச் செய்து இல்லறத்தை நடத்தி வருபவன் மானுட உடல் நீங்கினாலும் புகழுடம்புடன் வாழ்வாங்கு வாழ்வது கண்கூடு.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button