ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
23•02•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(238) மனிதனே புனிதன் —
ஏ ஆவியே மாமியை விட்டு ஓடு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“மாந்திரீகத் துறையின் மகா வல்லுனர்களை ஊர் மக்கள் அழைத்து வந்தனர். சகல விதமான பதார்த்தங்களை ஊரார் தயாரித்து ஆதி குரு நாதன் வீட்டிற்குள் கொண்டு வந்தனர். சகல விதமான பூஜைகளும் போடப்பட்டு, திருச்சாத்துப் போடுவதற்கு உலக்கைகள், கழிகள், பிரம்புகள் சகிதம் கூடி அனைத்திற்கும் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாமி மாத்திரம் இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை. எல்லோரும் வாயில் கதவுப் பக்கம் பார்வையைச் செலுத்தி, ஆளுக்கொரு கம்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு, தங்களின் பயத்தை மறைந்தபடி, உரத்த குரலில் பேசிக்கொண்டும், தங்களுக்குத் தாங்களே மனதை தைரியப்படுத்திக் கொண்டும் இருந்தனர். பாவமென வயோதிக மாமியைப் பற்றி யாரும் சிந்திக்க வில்லை. மாமியின் அறைக் கதவு மெல்லத் திறந்தது. குரு பத்தினிக்கு மாமியின் மீது மட்டுமே சந்தேகம் இருந்து வந்தது. அதனால் அவளின் பார்வை மட்டும் மாமியின் அறையைப் பார்த்தபடி இருந்தது. நொடி நேரத்தில் பட்சணங்களை எடுத்து மறைத்து ஸ்ரீ கணபதிக்கு அர்ப்பணம் செய்து விட்டு, அதே நொடி நேரத்தில் தனது அறைக்குள் சென்று கதவைத் சாத்திக் கொண்டார் மாமி. இந்த மாயா ஜாலத்தைக் கண்டு வாயடைத்து, விக்கித்துப் போனாள் மருமகள் பைரவி.”
“கதவு சாத்தப்படும் சப்தம் பலமாகக் கேட்டு விட்டதால், எல்லோருடைய கவனமும் வீட்டினுள் திரும்பியது. அனைவருமே ஆவென்று வாய் பிளந்தனர். சகல பட்சணங்களும் பக்ஷிக்கப்பட்டு அனைத்துமே மறைந்து போய் இருந்தது. பயத்தில் அனைவரும் நடு நடுங்கிப் போயிருந்தார்கள். யாரோ ஒரு மாயாவி ராக்ஷதன் ஆதி குரு நாதனின் வீட்டிற்குள் இருந்து கொண்டு, அதி பயங்கரமான காரியங்கள் செய்து வருகின்றான் என முடிவிற்கு வந்து, ஒவ்வொருவராக மெல்ல வீட்டிற்கு வெளியே வந்தவுடனே, அவர்கள் உணவு வகைகளைப் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் வெளியே வந்து விழவும், பயந்து அனைவரும் ஓடிப்போய் விட்டனர். இனி உள்ளே இருப்பவர்கள் மாந்திரீக விற்பன்னர்கள் மட்டுமே! மாமியின் அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கே ஸ்ரீ கணபதியினால் உருவாக்கப்பட்ட மாயா சக்தி, மாமியின் வடிவில் படுத்திருக்க
தங்களின் வித்தைகளை அந்த மாயா சக்தியின் முன்பு காட்டினர். ஏதும் பலிதமாகாமல் அதற்கு மாற்றாக ஒவ்வொருவரும் தங்களது சக்தியை இழந்து கொண்டிருந்தனர். சக்திகள் இழந்ததால் செயலற்றும் போயினர்.மாயா மாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர். மாமி வழக்கம் போல தனது அறைக்குள்ளேயே இருந்தார்.”
“ஆவணி மாதம் முதல் வாரம் ஆதி குரு நாதன் இல்லம் திரும்பினார். தனது தாயார் இல்லம் திரும்பியதில் மெத்த மகிழ்வு கொண்டார். ஆனால் குரு பத்தினி ஏதும் கூறாமல் மெளனத்தையே கடைப்பிடித்து வந்தாள். தனது மாமியின் செயல்கள் அவளை மேலும் மேலும் கோப அக்கினியை வளர்த்து வந்தது. ஆதி குரு நாதனின் நிலையோ முற்றிலும் மாறுபாட்டை அடைந்தது. தாயினிடத்தில் இருந்து வரும் உபதேசம் மொழிகள் அவருக்கு மிகுந்த ஆற்றலை வளர்ப்பதாக இருந்தது.
அத்துடன் *இரவில் செய்து வரும் தியானத்தில் குரு கோளின் தொடர்பில் சக்தி ஈர்க்க வேண்டும் என்றும், அத்துடன் ஸ்ரீ ஞான கணபதி உபாசனையும், கல்கி அவதாரம் வால் நட்சத்திர சக்தியின் அருள் பெற வேண்டும் எனக்கூறி தியானம் வழி முறைகளையும் அன்னை கற்றுத் தந்தார். இதனால் சகல சக்திகளையும் ஈர்க்கும் ஆற்றல் ஏற்படும் என்று விளக்கம் கூறினார். மற்றும் ஒரு உண்மையைச் தனது மகனுக்குக் காட்டி விளக்கினார்.'”
” *வியாழன் கோள் மண்டலத்தின் அருகே ஏற்படும் கல்கி வால்நட்சத்திரம் பிரளய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கோள் சனி. சனிக் கோள் தனது மண்டலத்தைச் சுற்றிலும் ஒளி வட்ட வளையம் அமைத்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். வியாழன் கோள் சக்தி ஈர்ப்பு தியானம் செய்பவர், தியான நிறைவில் சனிக் கோளை எண்ணுவதால் பாதுகாப்பு சக்தியும் கிடைக்கப் பெறும். மற்றவர்களுக்கு உபதேசம் செய்து வருபவன் கண்டிப்பாக இந்த தியானத்தில் தேர்ச்சி பெறுவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் சனி ஆதிக்கம் அற்றலைக் குறைத்து விடும். எனவே சனி நமக்கு நன்மையைத் தரும் என நேர்மறைப் பிரார்த்தனையும் செய்வது அவசியம்.”
“இப்படி ஒரு அன்னையை அடைய என்ன புண்ணியம் பெற்றேன்? என்று மனதுக்குள் கொண்டாடி மகிழ்ந்தார்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.