ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
02•10•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(85) மனிதனே புனிதன் —
எல்லாம் நன்மைக்கே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோகுலகிருஷ்ணா பிறந்தது 08•08•1980, ரெளத்திரி வருடம்,ஆடி மாதம், 24 – ஆம் தேதி. கோவை குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரியில் காலை
08 மணி, வெள்ளிக்கிழமை தினத்தில்! சுவாமி நோன்பு இருந்து வந்த காலம் அது. தனது குருநாதர் உத்தரவுப்படி அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. கிராமத்தில் சுவாமி அவர்கள் இறையருள் சிந்தனைகள் கொண்டு தியானம் செய்வதும், வாழ்வதும், குழந்தைகள் நலியும் நேரம் அபிமந்தகரித்துக் குணமாவதும் காரணமாக, ஊராரின் மரியாதைக்குப் பாத்திரமாகி விட்டார். இப்படி வாழும் அன்பு உள்ளத்தைக் குடும்ப சொந்த பந்தங்களால் சகித்துக் கொள்ளவே முடியாமல் தவித்துப் போய் விட்டனர். பிறகு என்ன? இருக்கவே இருக்கிறது, சகுனி கலகம்! எல்லாமே திட்டமிட்டபடி காய்களை நகர்த்தி சுவாமியின் வாழ்க்கையைப் பகடை ஆடத்துவங்கி விட்டனர்.
மற்றவர்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்வதும், இட்டுக் கட்டி சுவாமி குடும்பத்தினர் மேல் அவப் பெயரை உருவாக்கி விடுவதும், எல்லாம் நடந்து விட்டால் கைகொட்டிச் சிரிப்பதும், மனதளவில் துன்பங்கள் தருவதுமான காரியங்களில் இறங்கி விட்டனர். சுவாமியின் தாயார் தான் மிகவும் துன்பத்தை
அடைந்தவர். சுவாமியின் சொந்தபந்தங்களில் அன்புடன் நடந்து கொண்டவர்கள் கொஞ்சம் பேர் இருந்தனர். அவர்கள் வெளியூர்களில் இருந்தனர்.
சுவாமியின் தகப்பனாருடன் பிறந்தவர்களால் எப்போதும் எந்த நேரத்திலும் துன்பம் வந்து விடலாம் என்ற நிலையே நிலவியது. ஊரில் எந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் நடந்தாலும் அது சுவாமி குடும்பத்தினரால் தான் நடைபெறுகிறது என்பதாகவே வதந்திகளைப் பரப்பினர். அவர்கள் செம்படவ இனக் குடும்பங்கள் இரண்டை வசப்படுத்திக் கொண்டு, சீமைச் சரக்குகள் வாங்கிக் கொடுத்து வதந்தி ஆட்களாக வைத்துக்கொண்டு துன்பம் தந்தனர்.
ஈரோட்டிற்கு நிலக்கடலை வியாபாரம் செய்து விட்டு சுவாமியின் தகப்பனார் வீடு வந்திருந்தார். வியாபாரப்பணம் வந்திருக்கும் என்று சொல்லி, வெளியூர் திருடனைக் கொண்டு கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து விட்டனர். சுவாமியின் தகப்பனார் கனவில், ‘நாளைக்கு வீட்டில் கொள்ளை போகும் ஜாக்கிரதை’ என எச்சரிக்கை விடப்பட்டது. அவர் கனவு பலதடவை பலிதமாகி இருந்ததால் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
மறுநாள் பெளர்ணமி. பின்புற மதிலுக்கு உள்பக்கம் தென்னை ஓலையால் பந்தல் இடப்பட்டு பெரிய வாசல் இருந்தது. மதிலையும், பின் வெளிப்புற வாசலையும் ஒட்டியபடி தண்ணீர் தொட்டியும், அதன் மீது மூடியாக நீளமான தகரத்தினால் முடப்பட்டிருந்தது. ‘ப’ வடிவ வீடு. மேற்குப்புறம் சிறிது உயரமான திண்ணையில் மீது நிலக்கடலை மூடைகள் போடும் குவிண்டால் சாக்குப் பைகள் அடங்கிய கட்டுக்கள் பத்து அடுக்கி வைத்திருந்தனர்.
சுவாமிக்கும் எச்சரிக்கை வநுதிருந்தது.
“திருடன் சிக்கி விட்டால் கூட்டத்தில் நின்று கொண்டு அவனைக் கொன்று விட ஏற்பாடு நடந்துள்ளது. ஜெயில் யோகத்தை அப்பனுக்கோ அல்லது மகனுக்கோ வழங்கி மகிழக் காத்துக் கொண்டுள்ளனர்.நீ திருட வருபவனை விரட்டி விட்டால் அவன் தப்பித்துக் கொள்வான்” இது குருநாதர் சுவாமிக்கு இட்ட உத்திரவு. சுவாமி வாசலில் படுத்துக் கொண்டு அடுப்பு எரிக்கும் விறகுக் கட்டைகளைத் தன்னருகே வைத்து உறங்குவது போல் படுத்திருந்தார்.திருடனும் மதில் மீது நிலவொளியில் தோன்றினான்.
சூழ்ச்சிகளும், சூதுவாது உள்ளவர்கள், தனது சொந்தக் காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள்., அவைகளை நிறை வேற்றிக்கொள்ளத் தந்திரமாகப் பேசுவார்கள். மற்றவர்களை அடக்கி ஆள முயன்று கொண்டிருப்பார்கள். அகங்கார குணத்துடன் நடந்து கொள்வார்கள். பிறர் பொருட்களைக் கவர்ந்து கொள்ளச் செயற்படுபவார்கள். இயற்கை சக்தியாகிய பிரபஞ்ச சக்தியும், ஏன் பராபரம் கூட இவர்களிடம் விரோதமாய் மாறிவிடும். தான் குற்றம் செய்து விட்டால் அதை மறுக்காமலும், மறைக்காமலும் ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு அதனைத் திருத்திக்கொள்ளவும் வேண்டும்.
நம்முடைய அடிப்படை எண்ணங்கள், அதனைச் சார்ந்த உணர்வுகள், நமது வார்த்தைகளும், அதன் செயல்களும் இவைகளைச் சிறப்புடன் அமைத்துக் கொள்ள
முயற்சிகள் செய்து வெற்றி பெற வேண்டும்.சிறந்த எண்ண உணர்வு களில் கருத்தாக விளங்கி வரவேண்டும். அப்படிப்பட்ட உத்தமனுக்கு இறையருள் துணையிருந்து காப்பாற்றும்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.