எப்படியாவது காப்பாற்று!

195

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•12•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(157) மனிதனே புனிதன் —
எப்படியாவது காப்பாற்று!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாட்டுத்தீவன வைக்கோல் வாங்குவதற்குக் மாட்டு வண்டிகளில் கேரளா சென்றிருந்தனர் தமிழக விவசாயிகள். சில வண்டிகளில் பாரம் ஏற்றிய பிறகு, மதிய உணவாகக் கொண்டு சென்றிருந்த கட்டுசாதத்தைச் சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு, அங்கிருந்த ஆலமரத்தின் நிழலில் ஓய்வாகப் படுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்னின் அழுகுரலை எல்லோரும் கேட்டிருக்கின்றனர். ஆனால் அழுகைச் சத்தம் எங்கே இருந்து கேட்கிறது என்பதுதான் அவர்களுக்குப் புரியாமல் அதனை அலட்சியப்படுத்தி விட்டனர். அவர்களில் ஒருவருக்கு மயக்கம் வந்தது. அவரை ஓய்வாக இருக்கும்படி கூறிவிட்டு மற்றவர்கள் வைக்கோல் பாரம் ஏற்றச் சென்று விட்டனர்.

மயக்கமாகப் படுத்துக் கிடந்தவர் நல்ல ஆன்மிகவாதி. அவருக்குத் தெரிந்த பூஜைகளைக் கொண்டு இறைவனை வணங்கி வருபவர். தெய்வங்கள் மீது பாடல்கள் பாடி வழிபடுபவர். மயக்கம் போன்ற நிலையில் அவருக்குக் கனவொன்று வந்தது. அக்கனவில் ஓர் அம்மன் சக்தி தோன்றியது. “என்னை ஒரு மந்திரவாதி தனது கட்டுக்குள் வைத்திருக்கின்றான். அவன் சொல்லும் ஏவல் வேலைகளுக்கு என்னை ஏவி விடுகின்றான். அவன் சொல்லும் வேலைகளைத் செய்தால் மட்டுமே எனக்கு நைவேத்தியம் தருகின்றான். மற்ற எல்லா நேரமும் அவன் கட்டுக்குள் அடைபட்டு வாடுகிறேன். என்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல இது நல்ல தருணம். காரணம் அவன் ஏதோ வேலை நிமித்தம் வெளியூர் சென்று இருக்கின்றான். நீ படுத்திருக்கும் மரத்தின் மீதுள்ள துவாரத்தில் தான் என்னை வைத்துள்ளான். நீ என்னை எடுத்துச் சென்று நீரினுள் வைத்து விட்டால் கண்டிப்பாக அவனால் என்னை நெருங்க முடியாது. அதன் பிறகு என்னை வழிபட்டால் உனக்கு எல்லா நன்மைகளையும் செய்து தருகிறேன். எப்படியாவது என்னைத் தீயவனிடம் இருந்து காப்பாற்றி அழைத்துச் செல். என் இழந்த சக்திகளைப் பெற உதவு” எனக் கூறியது.

அவரும் மயக்கம் நீங்கி எழுந்தார். கனவு அதிசயமாக இருந்தது. நம்பிக்கை வராமல் குழப்பமாக இருந்தது. “தான் கனவில் கண்ட மரமும் தன் கண் முன்னால் நிற்கிறது. ஏதோ வாசனை வித்தியாசமாக உள்ளது. சரி இது உண்மைதானா என்று பார்த்து விடலாம்” என்று தனக்குள் பேசிக் கொண்டார். மிகப் பெரிய மர்மாக அது இருந்தது. மரத்தைச் சுற்றி வந்து தேடினார். மரத்தின் அடிபாகத்தில் எந்தவித துவாரங்களும் இல்லை. சோர்வாக அமர்ந்து விட்டவர், இயல்பாக மரத்தைத் தலையை உயர்த்தி, மீண்டும் ஒருமுறை கண்ணோட்டம் விட்டார். மரத்தில் கைக்கு எட்டும் உயரத்தில் முரடுதட்டிப் போன ஓர் சிறிய கிளையின் மீது மரத்தை ஒட்டியபடி பெரிய துவாரம் இருப்பது கண்ணுக்குப் புலனாகியது. மனதில் உத்வேகம் தோன்றியது. மரத்தின் மீது ஏறி அக்கிளையிலேயே அமர்ந்து கொண்டு துவாரத்தினுள் பார்க்க, சிறிய அம்மன் சிலையும் மற்றும் ஏதேதோ எந்திரத் தகடுகள், நைவேத்திய மண் தட்டு எல்லாம் கிடந்தன. அம்மனை மனமுருகி வழிபட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button