என்ன செய்தாலும் நீயே துணை!

138

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•11•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம், பொள்ளாச்சி.

(152) மனிதனே புனிதன் —
என்ன செய்தாலும் நீயே துணை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“என்ன சுவாமி! குடும்ப வேலை வெட்டிகளைப் பார்க்காமல் ஏதோ சாமியார் ஆகலாமுன்னு பாக்கறீங்களாமே! உங்களுக்கு ஏனுங்க இந்த ஆகாத வேலை? நீங்க கெட்டுப் போறதுமில்லாம, நிம்மதியா இருக்கற உங்க குடும்பத்தையுமா சீரழிக்கப் பாக்கறீங்க? உங்கப்பா உங்களால மனசு நொந்துபோயி, எங்ககிட்ட வந்து சொல்லிப் புலம்பராரு பாரு! உங்க மனசுல அப்படி என்னதான் நெனச்சுகிட்டு இருக்கீங்க? பெரியவங்க மனசு நொந்தா நாம நல்லா இருக்க முடியுமுன்னு நெனைக்கறீங்களா ? எல்லாந் தலையெழுத்துடா சாமி தலையெழுத்து! இவ்வளவு தெய்வ பக்தியக் குடுத்த கடவுளே, இந்த ஆளுக்குப் புத்தியக் குடுக்கப் படாதா?” என்று ஆளாளுக்குக் கிராமத்தில், சுவாமிக்குப் புத்தி சொல்ல வந்து கடைசியில் தங்களுக்குத் தாங்களே புத்தி சொல்லிக் கொண்டு போவது, அன்றாட நிகழ்வாகிப் போனது.

வயல் வெளிகளுக்குப் போனாலும், அங்கேயுள்ள கடைகளுக்குச் சென்றாலும் சுவாமியின் தியானத்தைக் கண்டித்து உபதேசம் சொல்லுபவர்கள் பெருகினார்கள் . ஆரம்பத்தில் இது பொதுவானதாக இருந்தாலும், போகப்போக இதுவே கேலியும், கிண்டலுமாக ஆயிற்று. சுவாமியும் அவரின் துணைவியாரும் ஒரு துணிச்சலான முடிவுக்கு வந்தனர். அதற்குக் காரணமும் நமது சுவாமியின் குருநாதர்தான்.வாழ்வில் என்ன நடந்தாலும், எத்தனை இன்னல்கள் வந்தாலும், இறைவா நீயே எங்களுக்குத் துணை என்று இருந்தனர். சுவாமியைப் பிரசண்ட விநாயகர் கோயிலில் வைத்து சந்தித்த போது ஒரு வார்த்தை கூறினார். அது, “அறிவாளியும், அன்புடையவனும் துணிச்சல் மிக்கவனும், பொறுமையுடன் காரியம் சாதிக்க எண்ணுபவனும், குருவருள் பெற்றவனும், இறையருளால் வாழ்பவனும் ஆகிய
ஒருவனுக்குத் துக்கம் என்பதே கிடையாது! புன்னகைக்கக் கற்றுக் கொள்” என்பதுதான்.

தினப்படி காலை ஏழு மணிக்குச் சூரியனைப் பார்த்தபடி கணவன், மனைவி இருவரும் தியானத்தில் அமர்ந்து கொள்வார்கள். அருகில் நோட்டுப்புத்தகம், பென்சில் இருக்கும். தியானம் நிறைவு பெற்றதும் ஆகாயத்தைப் பார்த்து ஏதாவது கூறுவார். சுவாமியம்மா மீனாம்பாள் நாச்சியார் சுவாமி சொல்வதை அப்படியே எழுதிக்கொள்வார்கள். அற்புதமான பாடமாக அது இருக்கும்! அதைப்போன்றே மாலையில் தியானத்தில் அமர்ந்து கிடைக்கும் பாடங்களை எழுதிக் கொள்வார்கள். அவைகள் “ஞானச்சுடர்” என்கின்ற தலைப்பைப் பெற்று, நூற்றுக்கணக்கான பாடல்கள் நான்கு வரிகள் கொண்டு திகழ்கின்றன! இதனைப்பற்றி சுவாமி அவர்களிடம் கேட்டேன்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button