எனக்கொரு லட்சியம்!

201

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

26•11•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(149) மனிதனே புனிதன் —
எனக்கொரு லட்சியம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்கள் தியானத்தில் அமர்ந்து விட்டு மிகுந்த சந்தோஷத்துடன் எழுந்து நின்றார். “நாகராஜன் வருங்கால நடப்பைத் தியானத்தில் அறிந்து கொண்டேன். நமது சற்குருநாதர் ராமாயணக் காலத்தில் மறைக்கப்பட்ட, தவம்புரியும் ஆஞ்சநேயரின் ஆஸ்ரமத்தையும், சித்தர்களால் பூஜிக்கப்பட்ட அற்புத பரிகார ஸ்தலம் பற்றிய உண்மை களையும் உணர்ந்து கொண்டேன். இனி கலியுகத்தில் நாடிவரும் மக்களுக்கு அநேக நன்மைகள் கிடைக்க சற்குரு நாதர் அருள்புரிய வேண்டும்.”

“இனி, மக்களை தியானத்தால் சக்தி பெறும் மார்கத்தைத் தீவிரமாக்குவேன். ஊர்ஊராகச் சென்று ‘கலியில் மீட்சி பெறும் தியானத்தைப் போதிப்பேன்’. எனது உபதேசத்தைக் கேட்பவர்கள், ஆண்டவன் அருளால் மீட்சி பெறுவார்கள். இனி என்னையும் குருவாக மதிக்காமல் தூற்றுகின்ற ஜனங்கள் உருவாகி விடுவார்கள். இதனை எனது தியானத்தால் அறிந்து கொண்டேன். இனி நீயும் ஜாக்கிரதையாக வார்த்தைகள் பேசி வர வேண்டும். இனி சித்தர்கள் தவம்புரிந்த இடம் 2004 -ம் ஆண்டில், பொள்ளாச்சி அருகே நமது குருநாதர் அருளால் அது வெளிப்பட்டே தீரும். அதற்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றார் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது லட்சியம் ஒன்று உள்ளது. அது வெளிப்படும் வரை, உங்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்ன? செய்வீர்களா!” என்று கேட்டுக் கொண்டார்.

நமது சுவாமியும், நமது குருநாதருடைய சித்தம் அதுவானால் அப்படியே ஆகட்டும்” என்றார். தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் பரிவுடன் நாகராஜன் சுவாமி தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். பிறகு அவர், “உங்களைப் பற்றியும் சற்குரு நாதர் அவர்கள் கூறியுள்ளார். 2000 -ஆம் ஆண்டில் நீங்கள் வெளிப்பட்டே தீர வேண்டும் என்பது இறையருள் சித்தம். அதுவரையிலும் மறைந்திருந்து காரியம் ஆற்றவேண்டும். ஆகட்டும் வாருங்கள் போவோம்” என்று புறப்பட்டார். குருநாதரை எண்ணி ஞானகுருவின் உள்ளம் உருகியது.

நமது நாகராஜன் சுவாமியும், தவத்திரு. வேணுகோபால சுவாமியும் உரையாடியபடி சந்தோஷமாக வருவதைக் கண்டு, அன்றைய தினம் தூற்றியவர்கள் ஆச்சரியம் கொண்டனர். நமது நாகராஜன் சுவாமியும், தவத்திரு. வேணுகோபால சுவாமியும் அன்றைய இரவு முழுவதும் தியானத்தில் அமைதியாக அமர்ந்து விட்டார்கள். ஞானகுரு முகத்தில் அன்று ஒளிப் பிரகாசம் அதி அற்புதமாகத் துலங்கியது.

மறுநாள் காலையில் சங்கத்தின் தலைவர் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். அவரது பேச்சு மிகவும் அருமையாக அன்று அமைந்தது. தனது அரசியல் வாழ்வு பற்றியும், ஆன்மிக வாழ்வு பற்றியும், தான் செய்து வரும் தியானம் பற்றியும் விரிவாகப் பேசினார். இக்கலியின் பிடியில் இருந்து ஜனங்களை மீட்க வேண்டும், அதற்கு ஒவ்வொருவரும் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்றார். மனம் திறந்து வெளிப்படையாக அவர் பேசிய ஞானக் கருத்துக்கள் சபையில் அன்று எல்லோருக்கும் பிடித்து இருந்தது. அன்று அதைப் பற்றிய பேச்சாகவே ஞான அன்பர்களிடையே நல்ல கருத்து நிலவியது.

பிறகு சங்கப்புத்தகத்தில் இருந்து பல பாடங்கள் படித்துக் காட்டப்பட்டது. அடுத்து வெளியிடப்படும் புதிய நூலில் அற்புதமான விஷயங்கள் நிறைந்திருப்பதாகச் சொன்னார்.
அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு மாதேஸ்வரன் கோயிலுக்கு ஞானகுருவுடன் எல்லோரும் வழிபடச் சென்றார்கள். வழிபாட்டிற்கு உரிய எல்லாப் பொருட்களும் கொண்டு சென்றனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button