ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
19•02•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(234) மனிதனே புனிதன் —
எதிர் சாபத்தில் குரு நாதன!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“ஏ, ஆதி குரு நாதனே! பராபரத்தின் கட்டளைப்படி இப்பூவுலகு வந்தீர். மாக்களாகத் திரிந்த மனிதப் பிராணிகளுக்கு அறிவு புகட்டி, வாழ்வு முன்னேற்றம் தருவது உமது பணியல்லவா? அதற்குப் பொறுமையும், மன்னிக்கும் மனமும் மிக அவசியமானது என அறிவீர். நீரோ பந்த பாசங்களில் கட்டுண்டு மயங்குகிறீர். அதனால் உமது குடும்பத்தை சோதனைக்கு உள்ளாக்கினோம். சோதனை யின்றி எவர்தான் வெற்றி பெறுவார்? வித்தைகளின் வழியில் லட்சியத்தை அடைய நினைப்பவர்களுக்குச் சோதனை என்பதே, அவர்கள் கற்ற கலவியின் திறமையை வெளிப்படுத்தவே! நம்முடைய கடமைகள் என்பது இவ்வுலகில் அ றிவுள்ள பிராணிகளாக மாறிய மனிதர்களுக்கு நன்மைகளைச் செய்வதும், அறியாமல் பிழை புரியும் அவர்களைப் பொறுத்து மன்னிப்பதுமாகும். அறிந்த பிறகு பிழைகளைத் தெரிந்தே செய்வது தான் குற்றமாகும். இனி எங்களுடைய எதிர் சாபத்தையும் நீர் கேட்க வேண்டும். எந்த பந்த பாசங்களில் கட்டுண்டு உண்மையை உணராமல் தெய்வங்களைச் சபித்துவிட்ட, ஏ ஆதி குரு நாதனே கேள்!”
“இப்பூவுலக மாந்தர்களுக்கு உள்ளன்போடு வித்தைகளைக் கற்றுக் கொடுக்கும் குருமார்களே! உங்களது சீடர்கள் உங்களுக்குக் குரு துரோகம் செய்வார்கள். வித்தை சொல்லிய குருவை நிந்திப்பார்கள். குருவின் மனைவி, மக்களுக்கு அடாத செயல்களும் புரிவார்கள். எங்களது இந்த சாபத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள, ஏ ஆதி குரு நாதனே நீரே வழிவகைகளைக் கண்டு பிடித்துக் கொள்வீர்களாக! பக்தர்கள் எங்களுக்குத் தரும் அவிஸை நாங்கள் பெறுவதற்கும் பரம்பொருள் காட்டிய அநேக வழிகள் உண்டு! அந்த மார்கத்தைத் தடுக்க யாராலும் முடியாது. ஏ, வித்தைகளின் காவலனே! குருத்துரோகிகள் பெருகுவார்கள். வித்தைகளை – இனிக் காப்பாற்றிக் கொள்வீர். நாங்கள் வருகிறோம், நன்றி எனக் கூறிச் சென்று விட்டார்கள்.”
“வித்தைகளைத் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஸ்ரீ விநாயகப் பெருமாளை நோக்கி தனது கடுந்தவத்தை ஆதி குருவானவர் ஆரம்பித்தார். சகல பூதகண நாயகரும், வேறு எந்த தெய்வீக சக்தி களுக்கும் கட்டுப்படாத தீய சக்திகளைத் தனது கட்டுக்குள் கொண்டு வருபவரும், அவைகளுக்கு ஆணையிட்டு விலக்குபவரும், மற்றவர்களைக் கேலியும், கிண்டலும் செய்து வந்து விட்ட சந்திர தோஷத்தையும், அதனால் ஏற்பட்டு விட்ட மன நிம்மதி இழப்பையும் நீக்குபவரும், கேது தோஷத்தை விலக்கி வாழ்வில் முன்னேற்றத்தைத் தருபவரும்,
சிவலிங்கத்தைத் தனது கரங்களில் ஏந்தி தெய்வ நிந்தனையால் வந்த சனி தோஷத்திற்குப் பரிகாரம் அருள்பவரும், பஞ்சாட்சர மூலிகை வேர்களினால் ஒளஷதம் தந்து ஆரோக்கியம் காப்பவரும், குரு தோஷத்திற்கும், சாபத்திற்கும் பரிகாரம் அருள்பவரும், நீரினால் ஏற்படும் கண்டங்களைத் தீர்ப்பவரும், நெருப்பை நீரினால் இணைத்தவரும், அஜபா மந்திர மூச்சினால் யோகியர்க்கு அருள் புரிபவரும், தாய் தந்தையைத் தனது முதல் தெய்வமாய்ப் போற்றுபவரும், ஞானக்கனி பெற்ற நாயகரும் ஆகிய விக்ன விநாயகரைத் தனது இதய கமலத்தித்தில் இருத்தி, கணநாதரின் சத்திய, தர்மப் பாதார விந்தங்களை விடாமல் பற்றிக் கொண்டு, ஆதி குரு நாதன் அற்புத தபசு இருந்தார்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.