ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
20•08•2016,
சனிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(47) மனிதனே புனிதன் —
எதிர்மறை எண்ணத்தைக கட்டுப்படுத்துதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனித வாழ்வில் இன்பங்களும், துன்பங்களும் மாறிமாறி வந்து கொண்டே இருக்கும்! எப்போதும் சுகவாழ்வில் மூழ்கிக் கிடக்க முடிந்திடாது. உழைப்பும் – ஓய்வும், சுகமும் – துக்கமும், வெயிலும் – நிழலும், சங்கடமும் – சந்தோஷமும் உள்ளதுதான் வாழ்க்கை. மனம் ஒரு பக்குவம் நிலைக்கு வந்து விட்டால் எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை வந்து விடும்.இதற்கு உரிய பயிற்சியே குரு ஈஸ்வராலயத்தில் பக்தன் எளிதாகப் பெறுகின்றான். இது வாழ்க்கையில் புரட்சி ஏற்படுத்தும், தன்னை உணரும் மகாயாகம் என்பதே பொருந்தும்.
நல்ல உள்ளம் படைத்தவர்களை, சத்திய தர்மத்தைக் கடைப் பிடிப்பவர்களை, நோயுற்று ஆதரவற்ற நிலையில் இருந்தால், அவர்களைக் காப்பாற்ற வேண்டியது மனித தர்மமாகும்! இதனால் இறைவனின் கருணைக்கு ஆளாக முடியும். அன்பைப் காட்டிலும் சிறந்த பொருள் வேறொன்றும் இல்லை.
ஒரு நாள் அதிகாலையில் எழுந்து கேரளா செல்லும் பஸ்ஸில் சித்தூர் வழியாக புது நகரம் என்ற ஊருக்கு அழைத்துப் போனார் மணி. அவர் ஏற்கனவே அங்கு சென்று விசாரித்து வந்து இருந்ததால், உணவு எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் வரச் சொல்லி இருந்ததால் சுவாமி அப்படியே சென்றிருந்தார். புதுநகரத்திற்கு வடக்கு திசையில் பசுஞ்சோலைகள் அடர்ந்த இடத்தில் குறுகிய பாதையின் வழியாக நடந்து சென்றார்கள். அங்கு ஒரு தோப்பினுள் அழகிய பெரிய வீடும், அங்கே மக்கள் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். சுவாமிக்கு அந்த இடம் வித்தியாசாகர் தென்பட்டது. ஆவி ஆத்மாக்களின் நடமாட்டத்தைக் கண்டார். அவைகள் சுவாமியைக் கடந்து செல்லும் போது அவரைப் பார்த்து விட்டுப் போயின.
சற்று நேரத்தில் சுவாமி அவர்களைப் பூஜாரி அழைத்தார். மணி அவர்கள் சுவாமியைக் கூட்டிக் கொண்டு அங்குள்ள பூஜை அறைக்குள் போனார்கள். மரத்தினால் செய்யப்பட்ட மதுரை வீரன் சிற்பம் கம்பீரமாக குதிரை மீது இருந்தது. செப்புத்தகடு பதிக்கப் பெற்ற பெரிய பலகையின் மீது காவி ஜிப்பா வேஷ்டியில் கம்பீரமாகப் பூஜாரி அமர தீமை சக்திகளின் கொடுமைகளை உலக மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்து, இறைவன் நல்ல வழிகளைக் காட்டி இருக்கிறான். மனிதர்கள் அதைக் கடைப் பிடித்து வாழ வேண்டும். தீமை வசம் உள்ள ஒருவன் இறைவனின் மெய்யன்பர்களுக்குத் துன்பமும், வருத்தமும் ஏற்படுத்தும் தீமையான காரியங்களைச் செய்வானாகில், நாமும் பதிலுக்குப் பதில்; தீமைக்குத் தீமை என்னும் காரியச் செயல்களில் இறங்கி விடக் கூடாது.
சமுதாயத்திற்கும் தீமையின் கொடுமை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளும்படி செய்திட அது வழியுமல்ல!
முறையானதுமல்ல! தீமைகளை எதிர்த்துப் போராடுவதில் கூட நேர்மையும், தர்மமுமாகிய
நல்ல வழிகள் அநேகம் இருக்கின்றன. யாருக்கும் எந்தவிதத் தீங்கும் நேரிட்டது விடக்கூடாது என்பதே நமது விருப்பமாக இருக்க வேண்டும்.
அழிவின் பாதை சிறந்தது அல்ல. இறைவனின் படைப்பை அழிக்க விரும்பும் தீமை சக்திகளுக்கு அது கொண்டாட்டமான செயலாக அமைந்து விடும்.
மெய்யன்பர்களாகிய நாம் நமக்குப் பிறர் செய்யக்கூடாது என்று நினைப்பதை, நாமும் அவர்களுக்கு அதையே செய்து விடக்கூடாது. மறந்தும் தீங்கை மற்றவர்களுக்கு விளைவித்து ஆண்டவனின் கொள்கைக்கு மாசு கற்பிக்காமல் இருக்க வேண்டும்.
நன்மை செய்யும் இறையடியார்களுக்கு இறைசக்தி நன்மையே செய்து விடுகிறது. தீமைகள் புரிவோர்க்கு இறைவன் கலியுக முடிவில் அவர்களுக்கு அளிக்கும் தண்டனையும் மிகவும் கடுமையாக இருக்கும். தற்போது இறைசக்தியானது தீயவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கி வருவதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இறைசக்தியைப் பெருமைப்படுத்த தியானம் செய்வதும், நாவசைய்மல் பிரார்த்தனைகள் செய்வதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நமது சுவாமி அவர்களிடம் மலையாள மாந்திரீகர்,” சுவாமி நான் யாருக்கும் கெடுதல் செய்வதில்லை. துன்ப்படும் மக்களுக்கு எனதறிவில் உதவிகள் செய்து வருகிறேன்.எங்கள் காரணவான்களின், பித்ருக்களின் சமாதிக்குள் யாரையும் அழைத்துப் போக மாட்டேன். நீங்கள் நல்லதை நினைப்பவர். எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். வயிற்றில் இருந்த அழுக்கெல்லாம் போய் விட்டது. இனி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று தனது குலதெய்வத்தைக் கும்பிட்டு அனுப்பி வைக்கத் திரு.மணி அவர்களும், சுவாமியும் நன்றி கூறினர்.
சுவாமி குணம் பெற்றது போல் நடந்து கொண்டாலும், அவருக்குத் தலையாய கடமை மற்றதும் இருந்தது. எதிர்மறை எண்ணங்களை வெளிப்படச் செய்யும் சக்தி கேந்திரத்தைத் தனது கட்டுக்குள் கொண்டு வர தொடர்ச்சியான தியானத்தில் ஆழந்து வரலானார். இதுவும் ஒரு வகைப் போராட்டம் என்று சொல்லலாம். தியானத்தின் முழு உண்மைகளை அனுபவ வாயிலாக அறிந்து, தெளிந்து, அதனைக் கடைப் பிடித்து பேரின்பத்தில் வாழ்ந்து வரும் ஞானியர்களுக்கு மட்டுமே இது புரியும். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆன்மிக ஞானம் பேசுபவர்கள் அநேகம் பேரை நாங்கள் சந்தித்திருக்கிறோம். எல்லாம் வெறும் வாய் சவடால்தான். நாம் ஒரு நல்ல ஆன்மிக பாதையை பற்றிக் கொண்டு பயணம் புறப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு ஒவ்வொரு ஞானியர்களையும், சித்தர்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் நாம் இங்கேயே உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.
சுவாமி அவர்கள் கேட்பது, “நீங்கள் என்ன அனுபவத்தைப் சொல்லப் போகிறீர்கள். சித்தர்கள் பற்றி அவர்கள் எழுதியுள்ளதைப் படித்துத் தெரிந்து கொள்கிறோம். அரைத்த மாவையே மீண்டும் அரைக்காதீர்கள்” என்பார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.