ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
04•06•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(339) மனிதனே புனிதன் —
எதிர்ப்பு,நேர்மறை எண்ணம், ஜெயம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல் விழுந்த காக்கை் கூட்டத்தின் கதியாக விபத்து செய்தியால் கூட்டம் கலைந்து ஓடியது. அப்பன் மகனிடம், “தெய்வ நிந்தனை பெருங்குற்றம் மகனே. மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்பா
விழுந்து கும்பிடு” என்று கெஞ்சி னார். அவனும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், தனது குடும்பத்தை இறைவா காப்பாற்று எனக் கண்ணீருடன் இறஞ்சிக் கொண்டான். இருவரும் கண்ணீரும் கம்பலை யுமாகப் புறப்பட்டுச் சென்றனர். கொஞ்ச காலத்திற்குத் தீயசக்தி உபாசனையாளர்கள் நடமாட்டம் அங்கு நின்று போனது. நமது சுவாமி அவர்களுக்குப் பழனியில் லைன்மேன் நடராஜா சுவாமி களின் வீட்டில் தங்கியிருந்த நேரம். சற்குரு அவர்களுடன் ஒரு நாளேனும் தங்கியிருந்து வரவேண்டும் என்ற ஆவலில் அதனை எண்ணத்தில் கொண்டார். தனது கருத்தை எப்படித் தெரிவிப்பது ? தியானம் செய்த பிறகு நாவசைக்காமல், உதடுகள் அசைக்காமல், மனதினுள் மிகுந்த சப்தத்துடன் தனது கோரிக்கையைச் சொல்லிக் கொண்டார். அதற்குச் சிறிது காலத்தில் பலனும் மிக மகிழ்வுடன் வந்து சேர்ந்தது. மலைக்குகைக்குள் வாழ்ந்த துறவி ஒரு மத்தியானம் ஒரு வேளை மட்டுமே உணவை உட் கொள்பவர். இறைவனுக்காக உணவைச் சமைத்து அவர் உணடபிறகுதான், தான் உணவு உண்பதாகக் கூறிக் கொண்டார். அது அவருக்கு மனநிறைவை ஏற்படுத்துவதால் சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் எப்போதும் காணப்படுவார்.
இங்கு வந்து தங்கி தியானம் செய்து வருபவர்கள் நீண்ட நாட்கள் தங்குவது கிடையாது. ஒரு சிலர் இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்து சமாது அடைந்து விட்டார்கள்.மற்றும் சிலர் இங்கு உயிருடன் பூமிக்குள் ஜீவசமாது ஆனவர்கள். ஜீவசமாது ஆனவர்கள் இடங்களில் மக்கள் தங்களின் கால்பாதங்கள் பட்டு விடக்கூடாது என்று கூறி மிக்க மரியாதையைச் செலுத்தி விலகி வந்தனர். நமது சுவாமியிடம் அங்கு தங்கியிருந்த போது என்ன நடந்தது என்று ஒரு சமயத்தில் கேட்டிருந்தேன். எனக்கே உரிய ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்பினேன். “சொன்னால் நம்பவா போகின்றீர்கள்!” என்று மட்டுமே பதில் கூறினார். அதன் விபரத்தை சுமார் இருபது வருடம் சென்றபிறகு அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நமது சுவாமியின் நாக்கை அறுத்து விடுகிறேன் என்று சொல்லி அமாவாசை அன்று அவர் நெஞ்சில் ஏறி அமர்ந்து பிச்சுவாக்கத்தியை எடுத்தவர், சுவாமியின் குருநாதர் அங்கு வந்துவிட்ட பிறகு உடனே எழுந்தார் அல்லவா, அப்போது கத்தியின் நுனியால் நமது சுவாமியின் இடது முழங்கால் பகுதியில் சொருகி இரத்த காயத்தை ஏற்படுத்தி இருந்தார். மறுநாள் சுவாமியி னால் நடக்க முடியாமல் வலியினால் படுத்துக் கிடந்தார். துறவி சென்று வடக்குப் பக்கம் மலைச்சரிவில் படர்ந்து வளர்ந்து கிடந்த சாணப்பூண்டு இலை களைப் பறித்து வந்து, கைகளால் பச்சிலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை விட்டு சக்கையைப் புண்ணில் வைத்துக் காவித் துணியைக் கிழித்துக் கட்டுப் போட்டு விட்டார். நமது சுவாமி
வலியை மறந்து தியானத்தில் இருக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார்.
துறவி பச்சிலை பறிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த வானரம் ஒன்று அதுவும் பச்சிலையைச் செடியுடன் பறித்துத், தரையில் இழுத்தபடியே கொண்டு வந்து துறவியின் முன்னால் போட்டது. துறவி அதற்குத் தன்னிடம் இருந்த கறிகாய் களைத் தரவும் பெற்றுக கொண்டு சென்றது. துறவி நமது சுவாமியிடம் ” விலங்குகளுக் கும் உள்ள அறிவைப் பாருங்கள்” என்று கூறினார். அன்றைய தினம் குரு நாதர் வந்து விட்டார்.
தனது சீடப்பிள்ளை பலமான காயத்துடன் இருப்பதைப் பார்த்தார். சில மூலிகைகள் கொணர்ந்து சாறுபிழிந்து அதனைத் தணலில் வைத்து பசை போலச் செய்து வெட்டுக் காயத்தில் வைத்துக் கட்டுப் போடச் செய்தார். படிப்படியாக வலி குறைந்து சுவாமி தனது இயல்பு நிலைக்குத் திரும்பினார். இடது முழங்கால் பகுதியில் ஏற்பட்டவடு மறையவில்லை.
சற்குருநாதரின் பரிகாரங்கள் மிக எளிமையானவை. துன்பமுறும் அன்பர்களுக்கான அவைகள் நிச்சயம் நல்ல பலன்களைத் தருவது. நமது சுவாமி அவர்களுக்கு அடாத காரியம் செய்து விட்டுப் போனதால் இதனைக் கற்றுக் கொடுத்தார். பரிகாரம் செய்பவர், முதலில் கார்த்திகை நட்சத்திரம் துவங்கி இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் ஜெபம் செய்து கார்த்திகை நட்சத்திரத்தில் முடிவாகச் ஜெபப் பூர்த்தி செய்ய வேண்டும். முறைப்படி கடைப் பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றித் தெள்ளத் தெளிவாக சற்குரு நாதர் எடுத்துரைத்தார். மெளனமாக சுவாமி இருந்ததால் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆகாயத்தில் கார்த்திகை நட்சத்திரம் தென்படும் காலங்களில் ஜெபம் வெகுவாகப் பலனைத்தரத் துவங்கும். அன்று இரவு உறங்கச் சொல்லி சற்குரு நாதர் சுவாமியிடம் கூறினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.