எங்கே தெய்வீக பிரசாதம்?

193

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•02•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(223) மனிதனே புனிதன் —
எங்கே தெய்வீக பிரசாதம்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரபஞ்ச சத்தியினுள் இருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் இயற்கை சக்தியை, மாயை என்றே ஞானியர்கள் குறிப்பிட்டனர். உலகில் அனைத்துமே தோன்றுவதும், மறைவதும் கொண்டு கணித்தனர். இதனை ஆட்சி செய்பவது இறைவனது அருட்சக்தியால் தான்! உலகில் படைக்கப்படுகின்ற அனைத்தும் என்றும் நிலை பெற்றிருக்கும் இறைவனது எழில் மிகுந்த பாகங்களே என்றும் கூறினர். படைப்பின் சக்தி ஆண்டவரிடம் ஊற்றுப்போல் பெருகுகின்றது. அவரிடம் இருந்தே காணும் பிரபஞ்சங்கள் அனைத்தும் தோன்றி, எல்லாம் இறுதியில் இறைவனிமே ஒன்றாகக் கலந்து விடுகின்றன. அருளாசிகள் புரிகின்ற அவர் ஒருவரே அனைத்திற்கும் தலைவராகவும், உலகில் தெய்வங்களாகவும் தென்படுகின்றார். மனிதர்களித்திலே பரிபூரணமாகிய பேரமைதி நிலவுகின்றதென்றால் அங்கே இறைவன் வெளிப்படுகின்றார். தெய்வங்களை உண்டு பண்ணி அவர்களுக்கு மகிமைகள் பலவும் தந்தவர். உலகில் உள்ள அனைத்தும் இறைவனது பாதுகாவலின் கீழே வைக்கப்பட்டுள்ள! மனிதர்களால் வழிபாடு செய்யப்படும் இறைவனால் பிரபஞ்சத்தில் உலகங்களும் நிலைபெற்றிருக்கின்றன. அவ்விறைசக்தியைத் தேவாதி தேவன் என்றே அருமறைகள் போற்றுகின்றன.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வழக்கம் போல் நமது சுவாமி தியானத்தில் அமர்ந்து விடுவார். அவ்வீட்டின் உரிமையாளரும் எழுந்து தியானத்தில் ஆசனமிட்டுக் கொண்டு, சின்முத்திரை வைத்து அமர்ந்து விட்டார். இரு சுவாமிகளும் எழுத்து தங்களது வழக்கமான காலைக்கடன்களை முடித்துக் குளித்து மீண்டும் தியானத்தில் அமர்ந்து கொண்டனர். “என்ன நாகராஜா எப்படி நிலவரம்? ” என்று ஞானகுரு கேட்டதும் நமது சுவாமி, ” இன்றுமுதல் இவ்வீட்டில் பூரண அமைதி நிலவும்” என்று கூறியதைக் கேட்டு அவர் சப்தமாகச் சிரித்தார். அதனால் தியானம் கலைந்த விவசாயி எழுந்து வந்து காலைவணக்கம் தெரிவித்தார். பிறகு பூஜையறைக்குப் போனவர் அங்கே வைக்கப்பட்டிருந்த செம்பில் தீர்த்தம் வராதது கண்டு அதிர்ச்சி அடைந்து பிறகு வருந்தினார். பிறகு,” பிரசாதங்கள் ஏன் வரவில்லை?” என்று வினாவினார்.

“இனி மேல் வராது. பிரசாதம் கொண்டு வந்து தந்தவர்களாகிய நல்ல ஆத்மாக்கள் புண்ணியத்தைப் பெற்று விட்டார்கள். அவர்களுக்கு நன்றியைத் கூறுங்கள். இனி ஒழுங்காக தியானம் செய்ய முயற்சி செய்து வரவேண்டும். விபூதி தருகிறேன் பெற்றுக் கொள்ளுங்கள் ” என்று கூறியபடியே, அவருடைய ஜிப்பா உடையின் ஜோபியில் கையை விட்டு விபூதியை எடுத்து அவரது நெற்றியில் பூசிவிட்டார். பிறகு அவரிடம் விடை பெற்றுக் கொண்டார்கள். நமது சுவாமி ஸ்ரீ வேணுகோபால சுவாமியிடம் தான் பண்ணாரி செல்வதாகக் கூறி உத்தரவு பெற்றுக்கொண்டு, நன்றி கூறினார். பண்ணாரி செல்லும் பேருந்தில் நமது சுவாமி அமர்ந்து கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button