ஊமைப் பைத்திய சுவாமி!

182

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

14•06•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(349) மனிதனே புனிதன் —
ஊமைப் பைத்திய சுவாமி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குதிரை வண்டிக்காரர் வாலிபப் பையனை முறைகேடாக இழுத்துக் கொண்டு செல்லுவ தைப் பார்த்து சந்தேகம் வலுத்த தால், சப்தமாகக் காவலரிடம் பிடித்துக் கொடுப்பேன் என்றதும், ஆத்திரம் அடைந்த மந்திரவாதி, ” போய்ச் சொல்லய்யா,எங்களுக்கு என்ன பயம்? பைத்தியம் வீட்டுக் காவலில் இருந்து தப்பி வந்து விட்டது. வீட்டிற்கு அழைத்துப் போகிறோம். நீங்க எதுக்கு வம்பு பண்ணவாரீங்க?” என்று சமாதானமாகக் கூறவும், “ஓகோ அப்படியா சங்கதி! அப்படீனா கூட்டீட்டுப் போங்க” என்று கூறிய அவர் ஜிப்பா ஜோபியில் இருந்து பீடியை எடுத்துப் பற்ற வைத்த போது பலமாக இருமல் வந்து, தாளமுடியாமல் பாதை யில் அமர்ந்து கொண்டு இருமி னார். மூவர்குழு சற்று தூரத்தில் சென்றதும் அவர் எழுந்து குதிரை யின் அருகில் சென்று முகத்தைத் தடவி சமாதானம் செய்தார். அவருக்கு இன்னும் மூவரைப் பற்றிய சந்தேகம் தீராததால் அவர்கள் சென்ற பாதையில் வண்டியை மெல்ல விட்டுக் கொண்டு சென்றார். வழியில் அவருக்குத் தெரிந்த சாமியார் எதிரில் வரவும், அவரிடம் பள்ளி மாணவனைக் கூட்டிச்சென்று கொண்டிருந்த இருவர் பற்றி விசாரித்தார். தான் அவர்களைப் பார்த்ததாகவும், “வரட்டாறு” செல்லும் பாதை யில் செல்வதாகவும் விபரம் சொல்லி விட்டு, அவர்களைப் பார்த்தால் சந்தேகப்படும்படி நடந்து கொள்வதாகவும் கூறினார். குதிரை வண்டிக்காரர் சாமியாரையும் அழைத்துக் கொண்டு வண்டியில் வேகமாகப் போனார். குதிரையும் ஒழுங்காக வே சவாரி சென்றது.

வரட்டாற்றுப் பகுதியில் ஒரு சாமியார் ஒருவர் வசித்து வந்தார். கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் உள்ளவர். அவரிடம் இருந்த ஒரு விசேஷம், கஞ்சாவைப் புகைத்து விட்டு அதன் சாம்பலைத் தட்டில் கொட்டினால் அது தங்கத்துகள்க ளாக உதிரும். கஞ்சாவுடன் வேறு மூலிகைகள் சேர்த்து அதனைப் புகைத்து தங்கச் சாம்பலைக் கீழே எறிந்து விடுவது அவரது வழக்கம். இது மற்ற சாமியார் களுக்கு, அந்த நாளில் அதிசயமாக இருந்தது. அவர் சமாதியானது ஒரு சோக மான செய்தியாகும். இந்தப் பகுதியில் தான் பின் நாளில் பழனி ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமி, தனது குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமிகளின் அருளாசியுடன், விவசாயம் செய்வதற்கு நிலம் இங்கு தான் கிரையம் செய்தார். நமது சுவாமியை இழுத்துப் போன மாந்திரீகர்கள் அவர் ஊமையாக்கப் பட்டிருப்பதை நம்பாமல், “ஜாலவித்தையை அன்று செய்த சாமியார் எங்கே? உனக்கு எந்த முறையில் எங்கே விஷவைத்தியம் செய்தார்கள்? உன்னிடத்தில் ஏதாவது தாயத்து உள்ளதா? உள்ளதை உள்ளபடி கூறுடா” என்று கன்னத்தில் அறைந்து, ஓடையில் உருட்டி விட்டார்கள். உடுப்புகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, இடுப்பில் கட்டியிருந்த அரைஞான் கயிற்றை அறுத்து எறிந்தார்கள். இவர்கள் இப்படி சித்திரவதை செய்வதை ஓடை யின் அக்கரையில் நின்று கொண்டு இருந்த ஒருவர் இதனைக் கவனித்துக் கொண்டிருந்தார்.காலை வெயில் சுரீரென சுட்டுத் தகித்துக் கொண்டிருந்தது.

நமது சுவாமி உள்ளங்கையில் இந்திரஜால மூலிகை வேர் இருந்தது. இறுகப்பற்றி இருந்த தால் அவர்கள் பார்வையில் படாமல் இருந்தது. அதனை மாந்திரீகச் சீடன் கவனித்து விட்டான். “குருவே இவன் உள்ளங் கையில் எதையோ மறைத்து வைத்திருக்கிறான்” என்று கூறியபடியே சுவாமியின் வலது கையைப் பற்றி விரல் களைப் பிரித்து மூலிகையைப் பறித்துக் கொள்ள முயன்றான். அது அவனுக்கு அத்தனை சுலபமாக இருக்கவில்லை. சீடன் தனது குருவிடம், “இவன் உடும்புப் பிடியாகப் பிடித்து இருக்கிறான். இவனது கையில் இருந்து தான் நறுமணம் வருது” என்று கூறியபடியே கையைத் திருகினான். அப்போது நமது சுவாமி உடும்பை நினைத்து அதனை அழைத்தார். மிகப் பெரிய உடும்பு ஒன்று இவர்கள் இருக்கும் இடம் நோக்கி மெல்ல மெல்ல அசைந்து வரத் துவங்கி யது. அதனைக் கண்டதும் மாந்திரீகர்கள் தங்கள் கையில் விஷம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டனர். அப்போது குதிரை வண்டி அங்கே வந்து நின்றது அதில் இருந்து சாமியாரும், குதிரை வண்டிக் காரரும் இறங்கி இவர்களை நோக்கி ஓடி வந்தனர். வரட்டாற் றின் தென் கரையில் நின்று கவனித்துக் கொண்டிருந்த அந்த நபர், தனக்கு அறிமுகமான குதிரை வண்டிக்காரர் ஓடி வருவதைப் பார்த்து, ஏதோ விபரீதம் நடக்கிறது என எண்ணி அவரும் ஓடி வந்தார். இதற்கு நடுவே பெரிய உடும்பு அருகே வந்து விடவும், நமது சுவாமி யைப் பிடித்து உடும்பின் மீது தள்ளி விட்டான் மாந்திரீகனின் சீடன். சுவாமி கீழே விழும் போது வலது கையானது கல்மீது அடிபடவும் கையில் இருந்த வேர் நழுவி தூரத்தில் போய் விழுந்தது. நமது சுவாமியின் கையில் இருந்து மூலிகை வேர் விழுவதை மாந்திரீகர்கள் கண்டு அதனை எடுக்க ஓடினர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button