உள்ளத்தில் ஏற்றிய தீபம்!

183

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

14•04•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(288) மனிதனே புனிதன் —
உள்ளத்தில் ஏற்றிய தீபம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விவசாயத் தொழில் செய்து வந்த சுவாமியுடன் அவரது துணைவியாரும் சேர்ந்து உழைத்தார்கள். வேலியைச் சுற்றிலும் தேக்குமரம் நாற்றுக்கள் பயிர் செய்தனர். விவசாயம் பற்றிய அனேகமாக விஷயங்களை மூத்தமகன் கோகுல் அவர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது. வழி வழியாக விவசாயம் செய்து வந்ததால் அது இயற்கையாகவே அவருக்குள்ளே இருந்து வெளிப்பட்டது. தென்னை விவசாயம் அவருக்கு நல்ல பலன் தந்தது என்றுதான் கூற வேண்டும். நமது சுவாமி விவசாயம் செய்து வந்த இடத்திற்கு அநேக பள்ளி மாணவர்கள் வந்து சென்றனர். மாலைக் காலங்களில் சிலம்பம் கற்றுக்கொள்ள வந்தவர்களில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம், தவயோகினி சுந்தரம்மாள் அவர்களின் பேரன்களும் அடங்குவர். விவசாயத் தொழிலை தனது இரண்டாவது மறுமகன் துன்பத்தில் உழல்வதால் அவருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்பது சுவாமியின் தாயார் பக்கத்து வாதம். “எது எப்படி நடந்தாலும் இறைவா ஸ்ரீ ஈஸ்வரா இனி நீதான் பக்கத் துணையிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும்” என்று நாச்சியார் அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தார்கள். விவசாயத் தொழில் அதுவும் கைமாறிப் போகிறது, இனி பிழைப்புக்கு வழிதேட வேண்டிய சூழல் உருவாகி விட்டது. இதைத் தானே தம்பனவசியன் கூட்டத் தினர் எதிர்பார்த்தது. இனி சற்குரு நாதரையும் சுவாமி மூலம் வளைத்துப் பிடித்து விடலாம் என கனவு காணத் துவங்கி விட்டனர்.

சுவாமி விவசாயத்தை ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினார். சுவாமியின் குழந்தைகள் தாங்கவொண்ணாத் துயருற்றனர். பத்து பைசா தேவை என்றால் ஏன்? எதற்கு? என்று விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாய சூழல். வீடுகளுக்கு குடி தண்ணீர் வழங்கினார்கள். சுவாமி குடியிருந்த வீட்டிற்கு மட்டும் கிடையாது. தெருங்குழாயில் பிடித்து வரப் போனால் அங்கும் உதவிக்கு மக்கள் இருந்தனர். எப்படியோ பிரார்த்தனை நல்லபடியாக நடந்து வந்தது. பணம் என்பது கனவில் பார்த்து ரசிக்கும் பொருளாகிப் போனது. தீபம் ஏற்றி வழிபட எண்ணெய் இல்லாவிட்டாலும், உள்ளத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதை யார் தான் தடுக்க முடிந்திடும்? உணவிற்கு ஏதும் குறைவு வைக்காமல் வீட்டுப் ‘ பெரியவர்கள் உதவியிருந்தது. பாட்டி தவஞானச்சுடர் அவர்கள் செய்யும் உதவியை யாராலும் தடுக்க இயலவில்லை. எதற்கும் கண்கலங்குவதோ, துக்கப் படுவதோ அவருக்குப் பிடிக்காது. அவரால் வளர்க்கப் பட்டவர் அல்லவா நமது சுவாமி. அஞ்சா நெஞ்சினராகத்தான் அவர் விளங்கி வந்தார். வீட்டை விட்டு விட்டுப் பரதேசம் போக வேண்டியதிருக்கும் என குருநாதர் கூறியிருந்தார். அந்த நாள் விரைவில் வரவேண்டும் என சுவாமி குருநாதரை பிரார்த்தனை செய்து வந்தார்.

இந்த சமயத்தில் பொள்ளாச்சி செளண்டம்மன் கோயிலில் நடந்து வந்த பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு அவசியம் போக வேண்டி வந்தது. அப்படி ஒரு எதிர்பார்ப்பு தியான அன்பர் களிடம் நிலவி வந்தது. காரணம் நமது சுவாமி கூறும் ஞான விளக்கங்கள் அவர்கள் அனைவருக்கும் பிடித்துப் போனது. தவிரவும் மிக எளிமையாகவும் இருந்தது தான். சுவாமி இப்போதெல்லாம் எத்தனை தொலைவு இடங்களுக்கும் நடந்தே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். அதற்குக் காரணம் நடைப் பயணம் உடலுக்கு ஆரோக்கியம் என தமக்குள் அடிக்கடி கூறிக் கொண்டார்.
பண்ணாரி மாரியம்மன் கோயிலில், பவானி தியான சங்கம் புதிய ஞானநூல் வெளியீட்டு விழாவினுக்கு ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள். கிளைச்சங்கங்கள் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார்கள். பொள்ளாச்சியில் அழைப்பிதழ் படித்துக்கூறிய போது, நமது சுவாமிக்கு அந்த விழாவினுக்குப் போகவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. காரணம் அங்கே முக்கியமான நபர்களைச் சந்திக்கப் போகிறோம் என்று மனதில் சந்துஷ்ட்டி ஏற்பட்டது. உணவு, தங்குமிடம் இலவசம், நமது சுவாமிக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டை சத்தியத்தின் சக்தி நிலைத் சங்கத்திலிருந்து சுவாமி பெயருக்கு வந்திருந்தது. உறுப்பினர் எண் 883. சங்கத்தலைவர் ஒப்புதலுடன் காணப்பட்டது. 29•01•1983 – ம் வருடத்தில் பதியப்பட்டது. உறுப்பினர் சந்தாத் தொகை (05•25) ஐந்து ரூபாய் இருபத்தி ஐந்து பைசா. ஆத்மஞானி திரு.R. பாலசுப்பிரமணியம் அவர்களால் அனுப்பப்பெற்ற ஞாபகார்த்த சின்னம் அது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி !வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button