உள்ளத்தின் உறுதியே பயன்படும்.

239

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•07•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(390) மனிதனே புனிதன் —-
உள்ளத்தின் உறுதியே பயன்படும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நகைகள் திரும்பவும் கிடைக்கப் தியானம் செய்யும்படி கேட்டதும் சுவாமி, ” அம்மா இந்த உலகில் தோன்றும் அத்தனை பொருட்க ளும், ஜீவர்களும் முடிவில் அழிந்து போகக் கூடியவையே.
நாம் எத்தனை மரணங்களைப் பார்த்திருக்கிறோம்? எத்தனை எத்தனை அழிவுகளைக் கண்டு கொண்டு இருக்கிறோம். நாம் அனைவருக்கும் ஒரு நாள் மரணம் அடையத்தான் போகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தும் . அது உங்களுக்கு நினைவில் வர வில்லையா? மரணத்தை வென்று வாழும் வழி ஒன்று உண்டு என்று சித்தர்கள் வழி காட்டி இருக்கிறார்களே; அதனைத் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா? நீங்களாக நகையைப் கொடுத்து விட்டு அது திரும்பக் கிடைத்திட வழியைக் கேட்கின்றீர்கள். மனித வடிவெடுத்த நாம் அனைவருக் கும் ஆண்டவன் அறிவைக் கொடுத்திருக்கின்றார். அறிவைப் கொண்டு எது செய்யலாம், எதைச செய்யக்கூடாது என்ற பகுத்தறிவு எல்லோருக்குமே இருக்கிறது. இதனைத் தான் அறிவின் விவேகம் என்றனர். இறைவனை வணங்குவதே நிலையற்ற, புறவுலக சொத்து, சுகங்களைப் பெறுவதற்கே என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். இறை நம்பிக்கை யோடு, தான, தர்மத்தை செய்து வாருங்கள். இதனைப் போல் பல மடங்கு செல்வத்தை இறைவன் தருவார் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அத்துடன் இப்போது உள்ள உங்களின் செல்வ நிலைக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் இறைவனுக்கு நன்றி கூறுங்கள் ” என்றார். “எனக்கு தொலைந்து போன அதே நகைகள் தான் வேண்டும். ஆசையாய்ச் செய்த பொருளின் அருமை யாருக்குத் தெரியும். புதிய நகைகள் எத்தனையோ நாங்கள் வாங்குவோம். புளூ ஜாகர் கல்வைத்த நகைகள் இப்போது கிடைப்பது அரிது” என்று ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார்.

இறைப் பற்றற்றுப் பொருள் பற்றை மாத்திரம் உடையோர் வாழ்வு கவலை மிக்கதன்றோ? அறிவே உருவான உள்ளத்தில் பேரறிவாளனாகிய இறைவன் வீற்றிருந்து ஆட்சி புரிவதுதான் நன்மை பயக்கும். அதற்கு அதிகமாகத் தன்னைப் பற்றிய, தனது ஆத்மாவைப் பற்றிய சிந்தனை தான் அதற்கு உதவும். நமது சுவாமி, தவயோகினி அம்மா அழைத்த காரணம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அவர் கூறினார், “நாகராஜ் சுவாமி சூரசம்ஹாரத் திருவிழா வருகிறது. அது சமயம் சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் வேல்வாங்கும் உற்சவம் நடைபெறும் . அங்கே முருகன் திருமேனியில் வியர்வை பெருக்கெடுத்து ஓடுவதைக் காணப் பல்லாயிரவர் கூறுவர். அதனைப் பார்த்து விட்டுப் பிறகு நாகபட்டினம் போகிறோம். நானும் ராசீபுரத்துத் தங்கச்சி, மெட்ராஸ் தங்கச்சி மூவரும் எங்களது அம்பாஸடர் காரில் செல்கிறோம். நீங்கள் வருவதானால் எங்களுடன் வரலாம். உணவைப் பற்றிக் கவலை வேண்டாம். நாங்கள் சமையல் செய்து கொள்வோம். உங்கள் செலவுக்கும் பணம் கொண்டு வந்தால் போதும். யோசித்து விடை கூறுங்கள். அடுத்த வாரம் பிரயாணம் துவங்குகிறது” என்று கூறினார். “ஆகட்டும் அம்மா” என்று சுவாமி சுருக்கமாக விடை பகர்ந்தார்.

அப்போது ஒரு முக்கியமான நபர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரால் சுவாமி யின் வாழ்வு மாற்றம் பெறப் போவதற்கு ஒருவகையில் காரணமாக விளங்கப் போகின்ற வர். இந்தக் கூட்டம் முடியும் போது அவரை நாம் அறிமுகம் செய்து கொள்வோம். திருமதி வேதவல்லி ராஜசேகரன் அவர்களின் தாயார், திருமதி கமலம்மாள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு வினாவினைக் கேட்டார். அது, “நம்முடைய வாழ்வினைக் காப்பாற்றுவது எது?” என்பதுதான். அவர்கள் வேதவேதாந்தங்களைக் கற்றறிந் தவர். எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய மனோபாவனை. உண்மையில் அவர்களிடம் அளப்பறிய சக்தி மிகுத்திருந்தது. அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றார்கள் என்றால் அதில் ஏதாவது காரணம் ஒன்றிருக்கும். நமது சுவாமி நிதானமாகப் பதிலைக் கூறினார். ” நமது வாழ்க்கையில் நடை பெறும் எத்தகைய சம்பவங்க ளுக்கும் ஏதாவது ஒரு பொருளின்றி நடை பெறாது. இச்சம்பவம் நடை பெற்றதற் கான காரியம் என்னவாக இருக்கும்? அத்துடன் அதன் காரணம் என்னவாக இருக்கும்? என்பதைக் கவனித்து அறிதல் என்பதே அபரிமிதமான ஆற்றல் என்பது கருத்து! இத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் எல்லா வகையிலும் நியாயமாக நடந்து கொள்வார்கள். இவர்களின் வாக்கு சுத்தமாக இருக்கும். உண்மை யைப் பேசிக் கடைப்பிடித்து வரும் இவர்களைத் சத்திய வந்தர்கள் என்று நானிலத்தோர் போற்று வார்கள். இவர்களது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைக் கோர்வையாகச் சேர்த்தால் அற்புதமான வாழ்வின் ஹாரமாக அது அமையும். அதனைப் போன்றே செம்மை மிகுந்த வாழ்வை நடத்திக் கொண்டு இருப்பார்கள். இவர்களது வாழ்வினைக் காத்துக் கொண்டு இருப்பதற்கு காரணம் விவேகம் என்பதே பொருந்தும் என்பது ஞானியர் களின் முடிந்த கருத்தாகும் ” என்றார்.சபையே சலசலத்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி !வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button