உலகம் புகழ் உத்தமர்.

269

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•05•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(329) மனிதனே புனிதன் —
உலகம் புகழ் உத்தமர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதர் மேலும் கூறினார், “கடவுள் சிந்தனையுடனே வாழ்ந்த நாயன்மார்கள் இல்லற தருமத்தைக் கடைப்பிடித்தே வீடு பேறு பெற்றார்கள். மகனே நீயும் அவ்வாறே வாழ்ந்து பந்தபாசம் நிலையைக் கடநது சிறந்த தவயோகியாகத் திகழ்வாய். வாழ்க்கை என்னும் அபாயகர மான சுழல் என்று நீ எண்ணுவது போல், பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டு வாழ்வில், பந்தமற்று ஜீவனைக் கடைத் தேற்ற எண்ணுபவன் கூற மாட்டான். இல்லறத்தை அவ மதிப்பது என்பது, மனித இன தர்மத்தின் உயிர்த் தொடர்பின் அறத்தையே அவமதிப்பது போல் ஆகும். மகனே, நீ எனது ஆணை யை மீறி நடக்க எண்ணாதே” எனவும், உண்மையை உணர்ந்து கொண்ட திரு.சின்னய்யன் அவர்கள் தனது குருவின் திருவடிகள் பணிந்து அவ்வாறே நடந்து கொள்வதாக வாக்களித்து, குருவினிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். அன்று முதல் தனது குரு நாதனின் ஆணைப் படி, இறைவன் சிந்தனையோடு தனது பணியை மேற்கொண்டு ஒழுகிவந்தார். பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தில் சம்மதம் தந்து, இல்லறமாகிய நல்லற வாழ்வில் புதல்வர் களைப் பெற்று வாழ்வில் சிறப்புச் சேர்த்தார்.

தம்மை நாடி வரும் நோயாளி கள் எவரிடத்தும் பணம் பெறாமல், இலவசமாக அனைவருக்கும் மருத்துவம் செய்து வந்தார். தீராத பிணிகள் அனைத்தையும் ஈஸ்வரர் அருளால் திருநீற்றாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் தீர்த்து வைத்தார். நாகப்பாம்புகள் தேள்கடி விஷக்கடிகளால் கடியுண்டு, வேதனைப்பட்டு வரும் மக்களின் துன்பங்களைப் போக்கினார். தமது எழுபத்தி இரண்டாம் வயது வரையிலும், தெய்வ பக்தியுடன், சத்திய, ஞாய, தர்மங்களைக் கடைப் பிடித்து, நோயாளிகளிடம் இனிய நன்மொழிகள் கூறி வந்தார். இவரிடத்தில் உள்ள தெய்வீக குணங்களை நன்கு அறிந்து கொண்ட ஊராரும், மற்றவர்களும் மிகுந்த அன்பை அவரிடம் செலுத்தி அவர் பெயரைக் குறிப்பிட்டுக் கூறாமல் “ஐயன்” என்று அழைக்கலாயினர். அளவற்ற மதிப்பும், மரியாதை யும் நம்பிக்கையும், பயமும், பக்தியும் கொண்டு, “பரோபகாரி” எனக் கொண்டாடி மகிழ்ந்து, புகழ்ந்து வாழ்த்தி வரலாயினர். இவரது பெரிய தோட்டத்தில் கிளுவை மரம் ஒன்றை நட்டு வளர்த்து வந்தார். அதன் கீழ் அமர்ந்து எப்போதும் ஜெபம் செய்து வந்தார். அங்கு வாழை மரங்களைப் பயிர் செய்து வந்ததால் ” வாழைத் தோட்டத்து ஐயன் ” என்று எல்லோரும் அவரை அழைத்து வரலாயினர்.

சிவனருள் செல்வரான இவர் ஜீவடாருண்யம் பூண்டவர். எந்த ஜீவனையும் இம்சிக்கத் துணிய மாட்டார். தனது கண் முன் எந்த ஜீவனையும் மற்றவர்கள் துன்பம் செய்யவோ, வதை செய்யவோ அனுமதிக்க மாட்டார். பூரணமான அன்பையும், இரக்கத் தையும் நாம் பிற உயிர்களிடத் தில் காட்டினால், அவைகளும் அவ்வன்பின் உணர்ச்சியோடு நமக்கு வசப்படும் என்பது ஐயனின் எண்ணம். இந்த அன்பின் உணர்ச்சியை அவர் எல்லா உயிர்களிடத்தும் கொண்டிருந்ததால், தீய ஜந்துக்கள் அனைத்தும் அவரது ஆத்ம சக்திக்குக் கீழ்ப்படியக் கூடியவை யாயிருந்தன. எத்தனையோ உதவிகளை மக்களுக்குச் செய்து வந்த ஐயன் அவர்களது எழுபத்தி இரண்டா வது வயதில் ஒருநாள் அவரது கனவில் சற்குருநாதர் தோன்றி னார். ” மகனே, உனக்கு கைலாச வாழ்வு சித்திக்கும் காலம் துவங்கியுள்ளது. நந்தி தேவர் உன்னை அழைத்துச் செல்வார். நீ அன்புடன் வளர்த்துவரும் காளை மாட்டினால் தான் அந்த சம்பவம் நிகழும். தெய்வீக வாழ்வு உன்னை அழைக்கிறது. ” என்று கூறி ஆசீர்வதித்து மறைந்தார்.

மறுநாள் தாம் கண்ட கனவு நனவாகும் நாள் என்று எண்ணி ஸ்ரீ ஈஸ்வரரின் ஆசீர்வாதம் கிடைத்ததற்கு நன்றி கூறினார். மகன்கள் பேரூர் பட்டீஸ்வரம் கோயிலில் நடராஜர் உற்சவம் கண்டு வரலாம் என சிந்தை கொண்டு, தந்தையை அழைத்தனர். தான் கைலாய தரிசனம் கண்டு ஆசி பெறப் போவதாகக் கூறி விட்டு, அவர்களை வழி அனுப்பி வைத்தார். அவர் அருமை பெருமையாக வளர்த்து வந்த வெள்ளை நிறக் காளை வாழைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டி ருந்தது. சிவ பூஜை கைங்கரியங் களைச் சிறப்புடன் நடத்தி, நைவேத்தியம் படைத்து வழிபட்டு விட்டு தனது காளை மாட்டைப் தேடிப் போனார். மரணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள சிவ சிந்தனையும், பஞ்சாட்சர மந்திரமும் ஜெபித்தபடியே செல்ல, இவரது காளை இவரைத் தேடி வந்தது. அந்த நேரத்தில் ஆகாயத்தில் தெய்வீக காட்சிகள் ஒளிப்பிரவாகமாகத் தோன்றின. அதனைக் கண்டு ஆடிப்பாடி மகிழ்வு கொண்டு கரங்களை உயர்த்தி சிவநாமம் உச்சரித்த படியே இருந்தார். திரு நந்தி தேவர் காட்சியும் கிடைக்கப் பெற்றார். நந்தி தேவர் ஆசீர்வதித்ததும் வாழைத் தோட்டத்து ஐயன் வளர்த்து வந்த காளை, தனது தலையை ஆட்டிய படியே சீறிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button