ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
10•04•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(284) மனிதனே புனிதன் —
உப்பில்லாப் பத்தியம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொட்டல்புதூர் துணி வியாபாரி களுக்கு சுவாமி நன்றி கூறினார். “கடனை அடைத்து விட்டுப் பிறகு உப்புப் போட்டுச் சாப்பிடு கிறேன்” என்று கூறிவிட்டுச் சுவாமி அவர்களுக்கு நன்றி கூறினார். அவர்களின் தலைவர், “நாகு சுவாமி, நாங்க ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டுக் கடனைக் கட்டி விடுகிறோம். உங்கள் வசதிப்படி நீங்கள் திருப்பித் தரலாம். அதுக்காக உப்பு போட்டுச் சாப்பிடாமல் இருக்கலாகுமா? ” என்று கேட்டபடி நமது சுவாமியின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். மற்ற சக வியாபாரி களைப் பார்த்து, “இன்றைய வியாபாரம் போதும் மக்களே! நாம சுவாமியுடன் ஊர் திரும்புவோம்” என்று கூறியபடி வியாபாரத் சரக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டனர். சுவாமி அவர்களிடம்,” நீங்கள் ஏன் அதிக விலை சொல்லி வியாபாரம் செய்கின்றீர்கள்? என்று கேட்டார். ” நாங்கள் யாரையும் ஏமாற்றி வாழ்வது கிடையாது. நாங்கள் கூடுதல் விலை கூறினால், பேரம் பேசாமல், விலையைக் கொடுத்து வாங்கினால் நாங்கள் என்ன செய்வது சுவாமி? வாங்குபவர் திறமை இதில் வெளிப்படுகிறது என்னமோ உண்மை சுவாமி ” எனக் கூறியபடி ஒரு நல்ல கைக் கடிகாரத்தைக்காட்டி , “இதன் விலையை உங்களால் அனுமானிக்க முடியுமா?” எனக் கேட்டார்கள். நல்ல தங்க வண்ணத்தில் ஜொலிக்கும் அது சுமார் ஐநூறு ரூபாய் மதிப்பில் இருக்கும். துணி வியாபாரி ஒருவர் அதன் விலையை ரூபாய் இரண்டாயிரம் என்று கூறிவிட்டு, விலை பேரம் பேசச் சொன்னார். சுவாமி அதன் விலையை நானூறு என்று சொல்லி விட்டார். அப்போது துணி வியாபாரி கூறினார்,” நாநூறு ரூபாயிக்கு விற்பனை செய்தாலே எங்களுக்கு இருநூற்றி ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கும். வியாபாரம் எல்லாம் வாங்குபவர் திறமையைப் பொறுத்தது ” என்றார். நமது சுவாமியும், அவர் குடும்பத்தினர் மேற்கொண்ட சிலவு சிக்கனமான நடவடிக்கையால் ஒன்னரை ஆண்டு கால அவகாசத்தில் பத்தாயிரம் ரூபாய் கடன் கட்டி முடிக்கப் பட்டு, பின்புதான் சுவாமி அவர்கள் உப்பை உணவில் சேர்த்துக் கொண்டார்.
கள்ளுக்கடை ஆட்கள் தினமும் வீட்டிற்கு வந்து செல்வதால் வீட்டின் நிம்மதியும், தெருக்களில் தினமும் சண்டை சச்சரவுகளும் நடந்ததால் கிராமத்தின் நிம்மதியே போய் விட்டது. திரு.APM.சாமி அவர்களின் சிறிய வயது நண்பர் திரு.சின்னு அவர்கள் வாழ்வு நிலையோ மிகவும் மோசமாகிப் போனது. அதோ பாருங்கள் ஒருவர் காடா பனியனும், தலையில் துண்டு உருமால் கட்டிக் கொண்டும், கைலியை வரிந்து கட்டிக் கொண்டும், பீடியைப் புகைத்தபடி வந்து கொண்டிருக்கும் நபர்தான் சின்னக் கவுண்டர் அவர்கள். நமது சுவாமி அவர்களின் தகப்பனார் அவர்களுக்கு நல்ல நண்பர். அவரது மகன்கள் இருவர் பொள்ளாச்சி சக்தி மில்லில் வேலை பார்த்து வந்தனர். மற்றொரு பையன், மகள், மனைவி மூவரும் தினசரிக் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். இவர்களின் வருமானத்தை அவர் கள்ளுக்கடையில் செலவு செய்து வந்தார். ஒரு நாள் இவரது அகால மரணம் கிராமத்தையே உலுக்கி எடுத்து விட்டது. தினசரி தான் குடிப்பதும் அல்லாமல், மற்றவர்களையும் குடிக்கப் பழக்கி வந்தார். அன்று கள் குடி வெறி அதிகமாக, வீட்டிற்குச் சென்று மனைவி மக்களைத் அடித்துத் துவைத்துக் துன்புறுத்தி எல்லோரையும் அழவைத்தார். குடிக்கப் பணம் கேட்டுத் தராததால் சமையல் செய்து கொண்டிருந்த மனைவியை காலால் உதைத்துத் தள்ளி விட்டு, சமையல் முடியும் தருவாயில் இருந்த சோற்றுப் பானை மற்றும் உள்ள மண் பாத்திரங்களை எல்லாம் வாசலில் போட்டு உடைத்து விட்டுப் பாட்டுப் பாடியபடியே தள்ளாடி நடத்து சென்று கள்ளுக்கடை வாசலில் படுத்துக் கொண்டார். குழந்தைகள் அனைவரும் பசியுடன் அம்மாவைச் சுற்றிலும் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். சமைப்பதற்குப் பாத்திரம் எதுவும் இல்லாமல் போனது. அவரின் இரண்டாவது மகன் வெங்கட்சாமி மிகுந்த கோபம் உடையவன். தகப்பனார் செய்யும் அட்டூழியங்களைப் பல்கலைக் கடித்துக் கறுவியபடியே பார்த்துக் கொண்டிருந்தான் . அவனது கண்கள் சிவந்து கோபத்துடன், தகப்பனை எப்போதும் வெறுப்புடன் முறைத்துப் பார்க்கத் துவங்கின.
ஒரு நாள் வெள்ளிக்கிழமை வெங்கிட்டு காட்டில் வரப்பு வெட்டும் வேலையில் மும்முரமாய் இருந்தார். அவர் ஒரு வாரகாலமாகப் பாடுபட்ட பணத்தை தனது ஜோபியிலேயே வைத்திருந்தார். பணத்தைக் கேட்டு நச்சரித்து சண்டையிட வந்தார் திரு.சின்னக்கவுண்டர். பாத்திரங்களை உடைத்துப் பட்டினி போட்ட தகப்பனைக் கண்டதும் ஆத்திரம் கடும் கோபமாக மாறியது. வெங்கிட்டு தனது கோபத்தை மண்ணை வெட்டும் வேகத்தில் காட்டிக் கொண்டு இருந்தார். தகப்பன் முகத்தில் விழிப்பதையே பாவமாக எண்ணி விட்டார். இன்னமும் சிறிது நேரத்தில் தானும் ஒரு மகாப்பாவத்தைச் செய்யப் போகிறோம் என்று எண்ணுவதற்கே நேரம் இல்லை.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.