ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
06•05•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்.
பொள்ளாச்சி.
(310) மனிதனே புனிதன் —-
உண்மையான குருவின் இயல்பு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குரு நாதர் அவர்கள் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களிடம், “மகனே, நாகராஜா நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது. அநேக பழக்க வழக்கங்கள் உலக மக்கள் கடைப்பிடித்து வருகிறார் கள். இவர்களை நேர்படுத்தி வழிகாட்டும் ஆசான்கள் என்பவர் கள் எப்படி இருக்க வேண்டும்? ஆசானிடம் பயின்ற மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களின் இயல்புகள் என்ற வாழ்க்கை நடைமுறை பற்றி எனது வாயால் சொல்லக் கேட்க ஆவலுறுகிறாய். முதலில் குரு நாதனின் இயல்பு குணங்கள் பற்றிக் கூறுகிறேன், கேட்பாயாக. இதுவும் ஸ்ரீ ஈஸ்வர நீதி தான்”
சற்குருநாதன் என்பவர் இயல்பில் அஞ்சா நெஞ்சமும், தீயசக்திகள் எதற்கும் பயம் கொள்ளாத் தன்மையும், தெய்வீக சக்திகளைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். உலக மக்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தான் கூறிய கருத்துக்களை விட, இன்னும் மேன்மையான கருத்துக்களை யும், அதனை நடை முறைப் படுத்தும் மேன்மையான நல்வழி களை, யார் கூறினாலும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் உளப் பக்குவம் உடையவராக விளங்க வேண்டும் . தன்னை நட்பாக ஏற்றுக்கொள்ளும் பரிசுத்தமாக குருமார்களிடம் மாறாத நட்புடன் பழகி வர வேண்டும். தன்னைப் பற்றிய அபிப்ராயம் பேதம் செய்பவர் களிடமும், தன்னை எதிர்ப்பாக எண்ணிப் பிறரிடத்துப் பிரச்சாரம் செயபவர்களிடமும், தனது பொறுமையான குணத்தைக் கொண்டு, அவர்கள் மனதிலும் அமைதியை ஏற்படுத்தச் செய்ய வேண்டும். எக்காரியத்திலும் களைப்போ, சோர்வோ இல்லாத வராகவும், எல்லாத் தேவை களிலும் ஆடம்பரமற்ற எளிய வாழ்வு வாழ வேண்டும். எந்த விஷயத்திலும் வாது புரியக் கூடாது. வீண் சந்தேகம் யார் மீதும் கொள்ளக் கூடாது. மற்றவர்கள மீது வீண்பழி சொல்லக் கூடாது. மனிதர்களின் எண்ணங்களையும்
நடவடிக்கைகளையும் மிகவும் மதிநுட்பத்துடன் அறிந்து கொள்வதில் வல்லவராக இருக்க வேண்டும். என்றுமே புறம் பேசுதல், கோள் சொல்லுதல் இவைகளில் திறமை மிக்க
மக்கள் சொல்லும் பேச்சை குரு ஏற்றுக் கொள்ளக்கூடாது. எந்தச் செயலிலும் அவசரப்படாதவராக விளங்க வேண்டும்.
சற்குரு நாதர், தன்னைப்பற்றி அநியாயமாக, அக்கிரமமாக எவர் குற்றம் ,குறைகள் கூறினாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்வதே மேன்மை தரும். எதனையும் முழுமையாக அறிந்து கொள்ளவே விரும்ப வேண்டும். எப்படிப்பட்ட விஷயங்களையும் சந்தேகம் தீர விசாரித்துக் கொள்ள வேண்டி யதைக் கொள்ளல் தகும்; அல்லாததை மனதில் கொள்ளக்கூடாது. உலக நடவடிக்கைகளை மிக உண்ணிப்பாய் கவனித்து வந்து கொண்டிருப்பதால் உலகினுக்கு நன்மை தரும். மற்றவர்கள் புகழ்ந்து பேசினாலும், பேசா விட்டாலும் தான் கைக்கொண்ட அறவழியை விடக்கூடாது குருவாக வேண்டும். எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அதில் நன்நெறி யைக் கடைப்பிடிப்பவரே குரு. எப்போதும் சமமான மன நிலையில் இருந்து கொண்டு, இனிய வார்த்தைகள் பேசி மகிழ்விப்பவராக இருத்தல் வேண்டும். முகத்தில் எப்போதும் சாந்தமும், அமைதியும் திகழ்ந்து கொண்டே இருக்கும் இறை அருள் நிறையப் பெற்றவரும்; இதற்கும் மேலாகப் தன்னை குருவாக உள்ளன்புடன் ஏற்றுக் கொள்ளும் சீடனுக்குச் சரியான தகுதி இருந்தால், சகல ஞானத் தையும் போதித்து, தன்னை விடவும் சிறந்தவனாக இந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ வைப்பவரே மிகச்சிறந்த ஆசான் ஆவார். மகனே நாகராஜா, நல்ல குருநாதன் என்பவன் தானும் வளர்ந்து மற்றவர்களையும் வளர வைப்பவனே. இங்கு குரு தான் முக்கியமான தகுதிகளை அடைந்திருக்க வேண்டும். அப்போது தான் சீடனுக்குச் சிறந்த கல்வி ஞானத்தைப் ப போதனைப் படுத்த முடியும்” என்றுகூறி தியானத்தில் அமர வைக்கப்பட்ட நமது சுவாமி அவர்களை நோக்கினார். நமது சுவாமி, ” தகுதி பெற்றவரே குருநாதர் ஆக முடியும் என்று விளங்கச் சொல்லிய வள்ளலே! இப்படிப்பட்ட உத்தம குருநாத ருக்கு அமையும் உத்தம சீடனின் தகுதி களையும் ஸ்ரீ ஈஸ்வர நீதி யில் இருந்து விளக்க வேண்டும் ஐயனே” எனப்பாதம் பணிந்து நமது சுவாமி அவர்கள் கேட்டார்.
” மகனே நாகராஜன்! எத்தனையோ சீடர்கள் தங்கள் குருநாதனிடம் ஞானம் பயில வருகின்றனர். தாங்கள் ஆசைப் பட்ட வித்தைகளைக் கற்றுக் கொண்டு, குரு நாதரை விட்டு விலகிச் சென்று விடுவார். அவரும் அதனையே விரும்பு வார். காரணம் தன் நம்பிக்கை யும், தகுதியும், தவத்தில் ஈடுபாடும், பணியில் சோர்வும்
அற்ற சீடனையே விரும்புகிறார்.
அதனைப் பற்றி நீ கூறுவது உனக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறி மென்மையாகச் சிரித்தார். நமது சுவாமி, “அடியவன் கூற்றில் பிழையிருந்தால் ஐயா நீர் பொறுத்தருள வேண்டும்” என்று கூறி சற்குருவைப் பணிந்து உரைக்கலுற்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.