உண்மைச் சீடனின் தகுதி!

171

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•05•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(311) மனிதனே புனிதன் —
உண்மைச் சீடனின் தகுதி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“மனிதன் தனது ஆத்மாவை சாதாரணமான ஆத்மாவாக எண்ணும் போதுதான், இறை சக்தியின் அருளுக்குப பாத்திரமாகிறான். நல்ல பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகிறான். தன்னை ஆடம்பர வாழ்க்கைக்கு உரிய ஆத்மாவாக வழியை மாற்றிக் கொண்டால் ஏற்படும் பழக்க வழக்கங்கள் தவறான பாதைக்குச் சென்று விடும் வாய்ப்புகள் உண்டாகி விடும். நல்ல சீடன் எதிலும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பான். மனிதாபிமானம் இரண்டு வகையாக உண்டு. சாதாரணமான மனிதாபிமானம் ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர் மீது செல்லும். இது புகழை விரும்பாது, ஈடுபாடு கொண்டு, பிரதிபலனை எதிர்பாராது சேவைகளைச் செய்து கொண்டிருப்பது. பிரிதொன்று பெரிய ஆஸ்ரமங்கள், அனாதைகளைத் தத்தெடுத்து விளம்பரம் செய்து தேவைகளை நிறைவேற்றிடும் இடங்களில் சென்று மனிதா பிமான உதவிகள் செய்தாலும் பெரிய விளம்பரம், செய்து உதவிகளை பெருமைப்படுத்திப் பேசிக் கொள்ளும் பணத்தின் மனிதாபிமானம். முதலில் சொல்லியதற்கு தெய்வீக அருள் கிடைக்கும். மற்றதில் தன் முயற்சியின் உழைப்பின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஏன்? தெய்வீக ஆசீர்வாதம் இதற்கும் கிடைக்கும்! தன் புகழ் விரும்பாத தன்னலமற்ற மனிதாபிமான உதவிகளை நீங்கள் எங்குதான் செய்தாலும் அதற்கு இறையருள் கடாட்சம் நிச்சயம் உண்டு.”

“சீடன் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வதே சிறப்பு! நன்நெறி தவறாமல் வாழ வேண்டும். சீடன் தனது சுய மரியாதையை எப்போதும் பொறுமையுடன் காத்து வரவேண்டும். நியாயத்துடன் நடந்து கொண்டு தெய்வ சிந்தனையுடன் வாழ வேண்டும். தனது கடமைகளைச் செய்வதில் மகா தைரியத்துடனும், ஊக்கமுடனும் இருக்க வேண்டும். ஆசான் காட்டிய வழிகளில் சீடன் எதனைக் கண்டானோ அதன்படி நடக்க வேண்டும். தருமம் தவறாமலும், ஒழுக்கமுடனும், வாழ்ந்து வாழ்வைப் பயனுள்ள தாகத் செய்ய வேண்டும். ஊருடன் ஒத்துப் போக வேண்டும். மனம் தடுமாறாமல், தன்னிடம் கோபப்படுபவரிடம் கோபம் கொள்ளாமல், சீடன் தனது கர்மாவைச் செய்து வரவேண்டும். மனிதர்கள் தங்களது லாபத்தையோ அல்லது சுகத்தையோ தேடி, அவர்களது காரியங்களில் தங்கள் இஷ்டம்போல் செய்வது இயற்கை சுதந்திரம் என்றாலும், அதில் பிழை இருந்தால் தவறைச் சுட்டிக்காட்டலாமே தவிர, அவர்கள் மீது கோபம் கொள்ளக் கூடாது. அறிவுரைகள் மட்டுமே கூறவேண்டும். மக்களிடம் அன்பைக் காட்டுவது சீடனது கடமை. வித்தைகளில் குருவை விஞ்சிக்காட்ட வேண்டும். அதனால் குருவின் அருட் கடாட்சம் சீடனுக்குக் கிடைக்கும் ” என்று தான் அறிந்திருந்த செய்திகளை ஸ்ரீ நாகராஜன் சுவாமி கூறினார்.

சற்குரு நாதர் ஆசீர்வதித்து , “நீ மதுரை மேகநாதனைச் சந்தித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப் பிரவேசம் செய்து வரும் போது எனது வீட்டைக் பற்றியும், “சண்டாளம் தீர்த்த படலம்” பற்றிய அரிய உண்மைகளை உனக்குத் தெரியப்படுத்துகி றேன். இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடி. உனது குழந்தைகள் மூலமாக பல விஷயங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வாய் க்கும். கூச்சப்படாமல் தெரிந்து கொள். அரிய மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் அறிய கோகுலை அழைத்துப் போ. அவைகள் இருக்குமிடம் உனக்குக் காட்டுவான். அவைகளின் பயனும் என்னிடம் அறிந்து உள்ளான். உனது ஆன்மிகப் பயணத்தில் குழந்தைகள் இருவரும் உறுதுணையாக இருப்பார்கள் ” என்று ஆசிகூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

சுவாமி அவர்கள் வீட்டை விட்டு
வெளியேறிச் சென்று விட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தார். குருநாதர் தருகின்ற பாடங்களை அனுபவமாக்க விரும்பினார். ராமாயணம் நடந்த காலத்தில் மறைக்கப்பட்ட பரிகார ஸ்தலம் வெளிப்படும் போது நமது சுவாமி தயாராகி இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறினால் சுதந்திரமான காலத்தை தவவாழ்க்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தணியாத ஆவல்! அதனை வீட்டில் தனது துணைவியாரிடம் வெளியிடத் தயங்கினார். பாட்டி பொன்னம்மா நாச்சியார் அவர்களிடம் கூறிவிட நல்ல வாய்ப்பாக இந்த சமயத்தையே தேர்ந்தெடுத்தார். ஆனால் பாட்டியிடம் காரணத்தைக் கூறாமல் வெளியேற முடியாது. பாட்டி அவர்கள் சூரிய தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் மீனாம்பாள் நாச்சியார் குழந்தைகளுடன் சோமனூர் சென்றிருந்தார்கள். தகப்பனார் தனது கூட்டாளி களுடன் கடைகளுக்குச் சென்று
விட்டார். மற்றவர்கள் தம்பனவசியன் கூட்டத்தினர் பிடியில் அகப்பட்டு அவர்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். சுவாமியும் பாட்டியும் மாத்திரமே பூஜை அறையின் முன்பு ஸ்ரீ தேவஜோதி விளக்கை நமஸ்கரித்துவிட்டுத் திண்ணை யில் அமர்ந்து கொண்டனர். சுவாமி பாட்டியிடம் மெல்லத் தன் கருத்தைச் சொன்னார். அவரும் அதனைச் செவிமடுத் தார். ஆனால்……..

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button