ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
24•10•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(107) மனிதனே புனிதன் —
உணவின் விளையாட்டு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வழக்கப்படி மைசூரில் முக்கிய மூன்று இடங்களைப் பார்த்து விட்டு, ஹளபேடு புறப்பட்டனர். அநேக பொருட்களைக் கொள்முதல் செய்து, பேருந்தில் ஏற்றிக்கெண்டிருந்தனர். போகுமிடமெங்கும் இதே கதையானது. “எவ்வளவு செலவு செய்து பிரயாணம் போகிறோம்? வீடு திரும்பும் போது அங்கு கிடைக்காத பொருட்களை வாங்கிப் போனால் நல்ல விலை போகுமே! பிறகு விட்ட பணத்தைப் பிடிக்க வேண்டாமா?” எங்கு சென்றாலும் வியாபாரிகளின் கொள்கைப் பிடிப்பு ஒரு ஆச்சரியமே!
நமது சுவாமியின் மைத்துனர் வியாபாரிகளும் ஒரு வயதான$ வியாபாரியைச் சுட்டிக் காட்டி, “ஹோட்டல்களில் உணவு சாப்பிடும் போது, அந்தப் பெரியவர் உணவருந்தும் மேஜையில் நமது எதிரே வந்து அமர்ந்து கொண்டால், நாம் எழுந்து வேறு மேஜைக்குச் சென்று விட வேண்டும் ” என்று கூறிவிட்டுச் போனார். மைத்துனர் தனது நண்பர்களுடன் அமர்ந்து கொண்டார்.
மிகச்சரியாகச் சொல்லி வைத்தது போல் அந்தப் பெரியவர், சுவாமி தனியே அமர்ந்து இருந்த மேஜையில், சுவாமி எதிரில் அமர்ந்து கொண்டார். பெரியவர் சுவாமியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார். சுவாமி அமைதியாகக் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பெரியவரின் கண்களைப் பார்த்தபடி இருந்த சுவாமியின் தீட்சண்யமான பார்வையைக் தாளாமல் அவர் தனது பார்வையைத் தாழ்த்திக் கொண்டார். மெல்ல மெதுவாக எழுந்தார். தனது தலையை இரண்டு முறை அசைத்தார்.
பிறகு வேகமாக அருகில் இருந்த மேஜையில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த, சகபிரயாணியின் எதிரில் அமர்ந்து உணவை வாங்கி வேகவேகமாகச் சாப்பிட்டார். அதற்குள் உணவைப் பார்சலும் செய்து கொண்டார். எதிரில் பேந்தப்பேந்த விழித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் தனது உணவுக்காக பணத்தைப் பெற்றுக்கெள்ளச் சொல்லிவிட்டு அவசரமாக உணவு விடுதியை விட்டு வெளியேறினார். அந்தப் பெரியவர் வசதி மிக்கவர். பல பாக்ஷைகள் பேசக்கூடியவர். ஆனால் வயதாகியும் இப்படி ஒரு வேடிக்கையைச் செய்தபடியே இருந்தார். அது அவரது பொழுது போக்கு என்று பேசிக் கொண்டார்கள்.
அது பஞ்சாபி ஹோட்டல். விலை சற்று கூடுதலாக இருந்தது. பெரியவர் அமர்ந்து சாப்பிட்ட மேஜையில் அவருக்கு எதிரே அமர்ந்து சாப்பிட்ட சகபிரயாணி ஆயிரம் ரூபாய் பணம் கட்டவேண்டியதாயிற்று!
சிலரது பொழுதுபோக்கு பல பேருக்கு வாழ்வில் எத்தனையோ துன்பங்களைத் தந்து விடுகிறது. மற்றவர்களுக்கு முடிந்த அளவிற்கு உபகாரமாக இருப்பதே நன்மை பயக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிறருக்கு உபத்திரவம் செய்யாமல் இருப்பதே நலம்.நன்றி!
எதையும் சுலபமாகக் கையாளும் வரை சில போராட்டங்கள் வாழ்வில் ஏற்படத்தான் செய்கின்றன. அது நமக்கு நல்ல அனுபவ ஞானத்தைத் தரும் என்று எண்ணும் வரை தீமைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மன்னிக்கும் மனம் வந்து விட்டால், ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் தானாகவே வந்து விடும்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.