உணர்வினை மீட்கும் வழி!

211

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•07•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(392) மனிதனே புனிதன் —
உணர்வினை மீட்கும் வழி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனம் மிகமிக வலிமைச் சக்தியைப் பெற்றதாகக் கூறும் சித்தர்கள், அது உணர்வினை அடிமையாக்கி விடும் அளவிற்கு வலிமை வாய்ந்தது என்று உணர்த்தினர். சித்தர் பெருமக்கள் மனத்தின் பிடியில் இருந்து உணர்வைத் தனியே பிரித்து வெளிக் கொண்டு வந்தார்கள். அதற்கு ஒரு எளிய வழியைக் கைக்கொண்டனர். அது சிரசின் உச்சியில் பிரமாந்திர வாயிலைக் அடிக்கடி கவனித்து வருவதா கும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களைக் கொண்டு கவனித்துப் பிரம்மாந்தி ரத்தில் ஐம்புலன் உணர்வுகளை ஒன்ற வைக்க வேண்டும். அப்படி அடிக்கடி கவனித்து வருவதால், மனதின் பிடியை விட்டு உணர்வு தனியே பிரிந்து விடும். இல்லை யெனில் மனதின் பிடியில் சிக்குண்ட உணர்வு, மனம் போன போக்கெல்லாம் சென்று உணர்வின் மின்காந்த சக்தி, மின்சார சக்தியாக மாற்றப்பட்டு உணர்ச்சிகளாக மாறி, ஆற்றல் சக்திகள் அனைத்தும் தேவைக்கு மேல் செலவழிந்து விடும். அதனைத் தடுத்து சக்தியின் சேமிப்பை அதிகப்படுத்தும் எளிய தியானத்தின் முதற்படியே சிரசின் உச்சியை அடிக்கடி கவனித்து வருதலாகும். நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டிருந் தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நமது கவனம் சிரசின் உச்சியில் இருக்குமாறு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை சகஸ்ரார தளம் என்றும் கூறுவர். இந்த உச்சியாகிய சகஸ்ராரத்தில் உணர்வு பூர்வமாகக் கவனத்தை நாம் செலுத்தி வந்தால், அதனால் உண்டாகும் பலன்கள் மிகவும் அநேகம். மனதை இதன் மூலமாக அடங்கிப் போகும் சூழல் நிச்சயமாக ஏற்படும்.

குருமுகமாக இந்த வித்தையைக் கற்றுக் கொண்டு சிறப்படைந்த வர்கள் தெய்வீப்பிறப்பு என்னும் அடுத்த நிலையை எய்துவிட முடியும். உணர்வினை மீட்டெடுக்க விரும்புபவர்கள் உட்கார்ந்த நிலையில் இருந்தாலோ, படுத்த நிலையில் இருந்தாலோ, கவனத்தைச் சிரசு
உச்சியில் இருக்கச் செய்தாலே, ஒரு சுகானுபவமாக அது மாறி விடும். பிறகு தேகத்தைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் உணர்வு இறையருளுடன் கலந்து வாழும் பாக்கியத்தை உண்டாக்கும். சித்தர்கள் இந்நிலையை நிர்விகல்ப சமாதி யோகத்திற்குக் கொண்டு சென்று விடுவார்கள். ஆகாயசித்தன் கண்ட இந்த சக்தியில் மிக முக்கியமான விஷயமே, சிறு மூளையை இயங்கச் செய்யும் ஓர் அற்புதம் நிறைந்தது இவ் வித்தை. காயத்திரி மந்திரம் உபாசனை செய்து வந்த, அமரர் பண்டிட் கண்னையா யோகியின் முக்கியமான சீடப்பிள்ளை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஆன்மிக ஆராய்ச்சியாளர். நமது சுவாமி பவானியில் தங்கியிருந்தபோது சிறுமூளை யின் இயக்கத்தை சுவாமியின் வாயிலாக விரும்பிக் கேட்டு அறிந்து கொண்டவர். நமது சுவாமியிடம் விபூதியை அபிமந்திரித்துப் பெற்றுக் கொண்டவர். இது பற்றிய முழு விபரங்களை இனி வரும் பாடங்களில், பவானியில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து அறிந்து கொள்ளப் போகின்றீர்கள்.

ஒரு முறை நமது சுவாமி மற்றும் சோமனூர் தியான நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றிருந்த போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நமது சுவாமியின் சற்குருநாதர் அவர்கள், அங்கிருந்த ஒரு பெரிய கல்லின்மீது ஒற்றைக் காலால் நின்று, சூரியனைப் பார்த்தபடி இருந்தார். காலை முதல் மாலை வரையிலும் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் பரவசம் அடைந்து போற்றினர் “அற்புதமான சாதனை இதுதான். மூளையின் முக்கிய கேந்திரங்கள் செயற்பட இது உதவும் ” என அறிஞர் ஒருவர் தமது கருத்தை வெளியிட்டு மகிழ்ந்தார். “இந்தமாதிரி சித்தர்கள் சாதனைகள் புரிந்து வாழ்வது எதற்காக? “என்று தற்போது மகாயோகி என அழைக்கப்படும் திரு.பாஸ்கரன் குருக்கள் தனது வினாவை அன்று பொருத்தமான
நேரத்தில் நமது சுவாமி அவர்களிடம் வினவினார். அதற்கு நமது சுவாமி, “உணர்வைக் கொண்டு மனதை அடக்கி, தமது வசப்பட்டு அதே மனதிற்கு மிகுந்த ஆற்றலை உண்டுபண்ணுவார்கள். பிறகு மனோ சக்தியைக் கொண்டே இறைசக்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். இதனால் இறைவனுடன் ஒன்றி, இயைந்து வாழத் துவங்குவார் கள். இவர்களின் வாழ்வில் இவர்களுக்குள் உண்டாகும் மிகப் பெரிய ஆன்மீக முன்னேற்றத்தை உலக மக்களுக்கு நல்வழி காட்டும், விருப்பு, வெறுப்பற்ற ஞான வள்ளலாக விளங்குவார்கள்” எனக் கூறினார். திரு.பாஸ்கரன் குருக்கள், ” எனது வாழ்வையே ஆன்மிக முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்பு செய்கிறேன். இது குருநாதர் மற்றும் பஞ்சபூதங்கள் சாக்ஷியாகக் கூறுகிறேன்” என
சபதம் வேறு செய்தார். அதை எந்த நேரத்தில், எப்படிக் கூறினாரோ தெரியாது. நமது சுவாமி அவர்களின் குருநாதரைப் பார்த்துக் கூறினார். இறைவன் சித்தம் அப்படித் தான் இருந்தது!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button