ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
06•11•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(130) மனிதனே புனிதன் —
ஈர்த்த ஆகாயப் பதிவுகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வக்கீல் குடும்பத்தில் மிகச்சிறந்த ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தவர் தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள்,
நமது Dr.திரு.ராஜசேகரன் அவர்களின் தாயாரும் ஆவார். இவர் நடத்திவந்த தியானக் கூட்டத்தில் நமது சுவாமி அவர்களும் கலந்து கொண்டு, அவர்களுக்குக் காட்சிகள் தெரிவதைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினார் அல்லவா? இப்போது நமது சுவாமி காட்சிகள் தெரிவதைப் பற்றிக் கூறியதும் எல்லோருக்கும் ஆவல் அதிகமாகி விட்டது.
தொலைக் காட்சிப் பெட்டியில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நேராகக் காண்பதைப் போலவே அப்படியே அந்தந்த நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லத் துவங்கி விட்டார். இதில் அந்தத் தியானக் குழுவினருக்கு எதையும் தெரிந்து கொள்ளத் தூண்டுதல் ஆனது. பிறகு இதன் போக்கு சரியில்லை என்பதை உணர்ந்து வெளிப்படையாக மற்ற விஷயங்கள் பற்றிக் கூறுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். அதற்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது. தன் முயற்சியில் தானே அறிந்து கொள்ள முயலும் உத்வேகம் மறைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் தான்.
இக்காலகட்டத்தில் நமது சுவாமி தனது முன் ஜென்ம நிகழ்வுளைப் பற்றிய பல செய்திகளைத் தெரிந்து கொண்டிட இந்த சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொண்டார். மட்டுமல்லாமல் தனது பழம் பாடல்களான, அனுபூதி மாலை, சாகாக்கலை, ஞானச்சுடர் ஆகிய அனைத்தையும் வரிசைக் கிரமமாகத் தனது தியானத்தில் ஈர்த்து பதிவு செய்து கொண்டார். வான் தொடர்புகளில் உள்ள தெய்வீக சக்திகள் பற்றிய அனைத்து விஷயங்களும், பிரபஞ்ச சாவிபற்றிய மந்திரக் குறிப்புகளையும், அநேக அனுபவ வைத்திய ஒளஷதங்கள் பற்றிய குறிப்புக்களும், தெய்வ அழைப்பு பற்றிய ரகசியம் குறியீடுகளும் ஈர்த்து எடுத்துக் கொண்டார். இந்த நல்ல அனுபவம் தந்த சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரபட் சுவாமி அவர்களுக்கும், எல்லாம் வல்ல இறைசக்திக்கும் நன்றியைக் கூறக்கடமைப் பட்டுள்ளோம். நமது சுவாமி அவர்களுக்கும் எங்களின் நன்றி உரித்தாகுக! .
தெய்வீக சக்திகள் மனிதனின் அறிவு மேம்பாடு அடைய அடையத்தான் தங்களின் ஆசீர்வாதத்தையும், அதற்கு அடுத்தபடியான அறிவின் மேம்பாட்டிற்கும் மேலும் உதவிகள் செய்து வருவார்கள். சுவாமி அவர்கள் கூறுவதே, தெய்வீக சக்திகள் நமக்கு உதவிகள் செய்ய நெருங்கும் போது அதனை நமக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே! தெய்வீக சக்திகள் நமக்கு உதவிட அதற்கு அவர்கள் மீது நம்பிக்கையும், குரு கடாட்சமும் நமக்குக் கிடைத்திட வேண்டும். அத்துடன் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு செயல்பட வேண்டும். எதையும் தெரிந்து கொள்வதைவிட, எதனையும் அறிந்து புரிந்து கொண்டு விட்டால் நமக்குப் புரிந்ததில் இருந்தே அறிவின் விருத்தி ஆரம்பமாகும் என்பது நமது சுவாமி அவர்களின் நம்பிக்கை!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.