இறைவனும், ஜீவனுமே சத்தியம்!

219

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•06•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(355) மனிதனே புனிதன் —
இறைவனும், ஜீவனுமே சத்தியம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது குரு ஈஸ்வராலயம் புனித மெய்யன்பர்கள் நமது சுவாமி அவர்களுடன் மிகுந்த அன்புடன் இருப்பவர்கள். இந்த அதிகமான அன்பும் கூட சில சமயங்களில் அவர்களுக்குப் போராடி ஜெயித்திட ஓர் வாய்ப்பையும், உரிமையும் அவர்களே உண்டாக் கிக் கொள்வதும் உண்டு. அதில் வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும், சுவாமி தான
காரணம் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றார் கள். சுவாமிக்கு தங்களது பணிவைக் காட்டும் போது அவர்கள் உள்ளத்தில் சத்தியம் தானே துலங்கி, உண்மையை எப்படியும் அறிந்து கொள்ள அது உதவுகிறது. இது நடை பெறா விட்டால் அனுபவம் என்பதும் ஏது? சத்தியத்தில் தானே உண்மை மறை பொருளாய் விளங்குகிறது! சத் = இறைவன், இயம் = ஜீவன். உண்மை யின் சாரம் இதுவன்றோ! சீடன் குருவின் பொறுப்பைச் சொல்லா மல் உணர்த்தும் செயலன்றோ உண்மை.

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் இறை சக்தியைப் பற்றிய விஷயமாகும். எல்லாவற்றிலும் பரவி இருப்பதால் பரம்பொருள்! அளவற்றவராதலால் அபரிமிதம் உடையவர்! அசையாத் தன்மை அவரிடம் உள்ளதால் அசையும் பொருளை வெளிக்காட்டுகிறார். (அசையா நிலை உள்ளிருத்தி, அசையும் பொருள் வெளிக் காட்டி) அளவற்றவராதலால் அசையாதவர்! அவரே எல்லாம் என்பதால் அன்பின் முழுமை உடையவர்! அவர் உள்ளேயும், வெளியேயும் உள்ளவரானதால் இரு பக்கம் உடையவராகிறார். அதாவது உயிராகவும், உடலாக வும் பரவுதல்! அப்படியே பிரியா மல் ஒன்றாய் இணைந்தும் இருக்கிறார்! இரண்டாகப் பிரிந்தாலும் பிரிவில்லை! பிளவில்லை! உயிராகவும், உடலாகவும் பிரிந்தாலும், பிரிவில் ஒற்றுமை கொண்டவரே இறைவன். வாலைத்தாய் சக்தி அருள் என்பது பருவமாற்றங்களால் உண்டாகும் அல்லது ஏற்படுத்தப் படும் அபூர்வ சக்தி என்பது வேதங்களின் ரகசியம். நமது சுவாமி தனது துணைவியாரை அடைந்த பிறகு இந்த வாலை சக்தி உபாசனை யை சற்குரு நாதர் துவங்கி வைத்தார். நமது சுவாமி தனது குருநாதரிடம் பணிவுடன் சில விஷயங்களைக் கேட்டு அறிந்து தெளிவு பெற்றார். “தான் சிறிய வயதில் இருந்தே வாழ்ந்து வரும் நிலையைக் கண்டு கிராம மக்கள் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். தம்பனவசியன் கூட்டத்தார் கூறும் தகாதன வார்த்தைகளை கேட்டுக் கொண்டு, தனக்கு அவப் பெயரை உண்டு பண்ண, சில கிராமத்துப் பெண்கள் துணிந்த தற்கும் காரணம் அறியாமல் மனதினுள் சுமையை உணர்கி றேன். ‘மையலார் தம்பிடியில் அகப்படுத்த முனைதல் போது, நான் அறியாத குருவாய், மனம் விழிக்கலுற்ற ஆத்ம குருவே’ தன்னிலை விளக்கம் தந்தருள வேண்டும் “என்று சுவாமி தனது உள்ளக்கிடங்கையை வெளி யிட்டு விட்டார்.

சற்குருநாதர் , “மகனே, எதையும் எதிர்மறையாக சிந்தனை செய்யக் கூடாது என்று ஸ்ரீ பதஞ்சலி மாமுனிவர் கூற்றை நீ ஏன் நினைவில் கொள்ளக் கூடாது? நீ தவறு ஏதும் செய்து இருந்தால் அல்லவோ இதற்கு விளக்கம் கேட்டு அறியலாம். சோதனையில் தானே மாணவன் தேர்வில் வெற்றி அடைகிறான். வாலை தேவியின் ஆசி என்பது மனதை மிகவும் பக்குவப்படுத்த வே சித்தர்களால் வேண்டப்படு வது. தீமை சக்தியின் சோதனை தான் என்றாலும் கூட, அதை நமக்கு சாதகமாக ஏன் மாற்றிக் கொள்ளக்கூடாது. கவலை, துக்கம் நம்மிடம் இல்லை என்றாகும் போது வருத்தப் படுவது என்பதும் நம்மைச் சேர்ந்த செயலாகாது. கவலை, துக்கம், வருத்தம் தரும் இவ்வுலகத்தைச் சேர்ந்தவன் நீ இல்லை என்னும் போது, அதனை நிர்வாகம் செய்யும் பொறுப்பும் உன்னைத் சாராது என்பதால் உன்மீது உனக்குப் பரிதாபமான உணர்வும் வரக் கூடாது. அனைத்தும் பராபரத் தினுடையது என்னும் போது உனது பொறுப்பும் அவருடைய தாக இறைசக்தியே ஏற்றுக் கொள்ளும். உனக்கு வாலையின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் மகனே. அதன் வழியில் மெய் அன்பர்கள் முக்தியைப் பெற்று விடுவார்கள். இறைவனை நாடு. ஆசிகள்” என்றார்.

முன்பெல்லாம் பரம்பிக்குளம் அணைக்கட்டில் இருந்து ஆழியாறு அணைக்கு நீர் வரத்தை இணைக்கும் திட்டம் செயல்படாத காலகட்டத்தில் யானைகள் ஆனைமலைக் காடு களில் இருந்து கூட்டம் கூட்ட மாகக் கீழே வந்து விவசாய நிலங்களில் பயிர்பச்சைகளை அழித்து வந்தன. கொப்பம் எனப்படும் பெரிய பெரிய குழிகளை யானைகள் அதிகமாக வந்து போகும் வழித்தடங்களைக் கணக்கில் கொண்டு தோண்டி எடுத்து, மரக்கிளைகள் மற்றும் ஓலைகளால் மூடி, மேலே மண் போட்டு தானிய விதைகளை மேலே தூவி, நீர் தெளித்து விட்டு விடுவார்கள். இவைகளில் யானைகள் விழும் போது மீட்டு , கும்கி யானைகளைக் கொண்டு அடக்கி கூப்புகளில் மரங்களைச் சுமந்து பணிபுரியப் பயன்படுத்து வார்கள். பெரிய மண்குழிகளால் ஆகிய கொப்பங்களில் விழும் அந்த யானைகளை அடக்கி மனிதன் ஆணைக்கு அடிபணிய வைக்கும் செயல் நடந்து கொண்டுள்ளது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button