இறைவனுடன் மனிதனின் தொடர்பு?

237

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்

04•07•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(369) மனிதனே புனிதன் —
இறைவனுடன் மனிதனின் தொடர்பு?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“தென் பழனியில் மலைக் கொழுந்து என்னும் பெயரில், பால தண்டாயுத சுவாமியாகக் காட்சி தரும் ஸ்ரீ முருகன் விக்கிர கத்தை, நவகிரகங்களின் நவ பாஷாணங்கள் கொண்டு, பாஷாணக்கட்டு மூலிகைச்சாறு வகைகள் சேர்த்து அரைத்து, காற்றில் உலரும் முன்பு சிறுகச்சிறுகச் சேர்த்துப் போக நாதரால் உருவாக்கி வைகப்பட் டது. இதற்குத் தேவையான சொக்கத் தங்கம் சுத்தி முறை யினால் தயாரித்த போக நாதர், மனிதன் உருவம் போன்று அதனை வார்ப்படம் செய்தார். அந்த உருவத்தின் மீது மூலிகை சாற்றினால் அரைக்கப்பட்ட நவ பாஷாணத்தைக், கல்வத்தில் இருந்து ஆள்காட்டி விரலினால் எடுத்து, உடனே அது உலரும் முன்பு, சொக்கத்தங்க மனிதஉரு வின் மீது, பாதம் தொடங்கி உச்சி வரை மீன்செதில்கள் போன்று, ஒன்றின் மீது ஒன்றாகப் பொருந்த அமைக்கப்பட்டு, மலைக் கொழுந்து முருகப்பன் சிலை தயாரிக்கப்பட்டு உள்ளது. என்னே போகநாதரின் பொறுமை யுடன் கூடிய திறமையின் ஆற்றல்! ? நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தக் கூடிய இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டி யுள்ளார் மகா சித்தர் பெருமான். தாயின் கர்பத்தில் உருவாகும் சிசு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகங்களின் சக்தி ஆற்றலைப் பெற்று ஒன்பது மாதங்களில் மனித உருவெடுக்க கின்ற தன்மையை கிரகநவ பாஷாணம் நமக்கு உணர்த்துகி றது மகனே! ஒவ்வொரு நாளும் நட்சத்திர சக்தி ஆற்றலை ஈர்த்து, அதனை வெளிப்படுத்தும் மூலிகைச் சாறுகள், கலவத்தில் அரைத்து எடுப்பதற்கு எத்தனை தேவைப்பட்டிருக்கும்? அக்காலத் தில் மூலிகை வனங்கள் அதிகம் இருந்ததால் இது சாத்தியப் பட்டதப்பா நாகராஜா! ”

“மனிதனாக உருவாக முதலில் உடம்பு தேவை. பிரக்ருதியின் சக்தி என்று கூறப்படுகின்ற மனமும், அதனுடன் கூடிய பிராண சக்தியின் ஆற்றலும் சேர்ந்து உயிராக உருப்பெருகின் றது அல்லவா? அந்த உயிர் உடலுக்குத் தேவை. அத்துடன் உடலையும், உயிரையும் இயக்கிக் கொண்டிருக்கும் சாரதி யாகிய, பகவான் சொரூபமான ஆன்மா தேவை. இப்படிப் பலவற்றின் தொகுதியால், இறைவனால் படைக்கப் பட்டவனே மனிதன். ஆன்மா நேரடியாக மனிதனை இயக்குவ தில்லை. அதன் சக்தி ஆற்றல் மனிதனை இயங்குவதை, ஆன்மா சாட்சியாக இருந்து கவனித்துக் கொண்டுள்ளது. இறைவன் கட்டளைப்படி சூரியன் தனது ஒளி சக்தியினால் மற்றும் தனது நாதமாகிய ‘ஓஓஓ ஓஓஓம்’ என்ற ஒலி சக்தியினா லும் உலகத்தின் இயக்கங்களை நடத்திக் கொண்டே உள்ளது. சூரியன் இதில் நேரடியாகச் செயற் படுவதில்லை. சூரியன் சாட்சியாக இருக்க அதன் முன் நிலையில் தான் சகல இயக்கங் களும் நடைபெறுவதைப் போல, ஆன்மாவும் இறைவன் ஆணைப் படி ஒரு சாட்சியாக இருக்க, ஆன்மாவின் ஆற்றல் சக்தியைப் பெற்று, உடலைக் கொண்டு ஜீவன் எனப்படும் உயிரானது உலகத்தின் இன்ப துன்பங்ஙளில் அனுபவம் பெறுகின்றது. கண்களால் பார்ப்பது, காதுகளால் கேட்பது, நாவில் ருசிப்பது, வாயினால் பேசுவது, சரீரத்தில் தொடு உணர்வுகள், முக்கினால் சுவாசிப்பது, வாசனைகளை அறிவது, உடலினால் இன்பங் களைத் துன்பங்களைப் பெறுவது போன்ற அத்துணை அனுபவங் களும் உயிராகிய ஜீவனுக்கு ஏற்படுவதற்கு ஆதாரமாக விளங்கிக் கொண்டிருப்பது ஆன்மாவே! ஒவ்வொரு ஜீவராசிகளிலும் இறைவன், ஆன்மாவின் வழியாகவே ஜீவனை இயக்கிவருகின்றார்.”

” 1.ஹ்ருதயம் என்று சொல்லக் கூடிய புத்தி, 2.மனம், 3.உணர்வு, 4.ஆளுமை, 5.உலக அறிவு, 6.பகுத்தறிவு, 7.அறவுக்கூர்மை, 8.உள்ளுணர்வு, 9.மனோதிடம், 10.சிந்தனை ஆற்றல், 11.மனத்தெளிவு, 12.மனக் கலக்கம், 13.நினைவு, 14.நிச்சய புத்தி, 15.தீர்மானம், 16.பிராண சக்தி, 17.ஆசை, 18.இன்பநாட்டம் இவை அனைத்தும் செயல்பட, ஆத்மாவின் இறைத்தன்மையின் ஆற்றலில் இருந்து சக்தியைப் பெற்று இயங்குவதால், நமது ஞானியர்கள் மேற்கூறிய ஆற்றல்களை அனைத்தையும் ஒட்டு மொத்தமாகப் சேர்த்து ‘ஆன்மா ‘ என்று தான் கூறியிருக் கின்றார்கள். மனதை இயக்குவது இறை சக்தியான ஆன்மா. உடலின் இயக்கங்களாகத் திகழ்வது இறை சக்தியான ஆன்மா. இதுவே அனைத்துமாக விளங்குவதும், அனைத்தையும் கடந்ததாக இருப்பதுவும் ஆன்மாவே என்ற உண்மையை உணர்ந்த ஆன்றோரின் உண்மை யான கூற்று. இறை சக்தியான ஆன்மாவே பேரறிவின் பேருணர்வாக இருந்து இயங்க வைத்துக் கொண்டே உள்ளது. ஆன்மாவை யாரொருவர் உணர்ந்து கொள்கின்றனரோ, அவரே இறைவனை அறிந்து கொள்வதுடன், இறைவனது கருணையால் மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்து பேறுடன் நீடு வாழ்வார். இறைவனே ஆன்மாவாக இருப்பதால் அவரால் வழி நடத்தப் படுவோமாக என எண்ண வேண்டும் . பழனியில் ஸ்ரீ போகநாதருக்கு முருகன் அநேக உண்மைகளைப் போதனைப் படுத்தியுள்ளார். அதில் ஒன்று குருநாதன் தனது சீடனுக்குத் தரும் பெருமை மிகுந்த ஸ்தானமும் மரியாதை யும் ஆகும்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி !வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button