ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
17•11•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(140) மனிதனே புனிதன் —
இறைவனின் தீர்ப்பு மாறாது!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமியின் குடும்பத்துக்கு நேர்ந்த இன்னல்களுக்குப் பிறகு ஒருநாள் அமாவாசை தினம் நமது சுவாமியின் குருநாதர் வீட்டின் பின்புற வாயிலில் நின்று கொண்டிருந்தார். எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள். குருநாதரும், சீடரும் பூஜை அறைக்குள் போனார்கள். சுவாமியை சற்குரு நாதர் சற்று நேரம் மெளனாகப் பார்த்துக் கொண்டிருந்தார். “குடும்பத்தினர் பட்ட வேதனை அதிகமோ?” என்று குருநாதர் கேட்டார்.
“இல்லை பகவானே, நடந்ததை அவமானமாகக் கருதுகின்றனர்” என்றார் சுவாமி.
குருநாதர் சிரித்துக் கொண்டே, “ஓ..வேதனைகள் இல்லாத அவமானமா?”
“என்னை ஆட்கொண்டவரே, பிறறைப் பார்க்கக் கூசச்செய்யும், வெட்கித்தலை குனியச் செய்யும் அவமானம் என்று கருதுகிறார்கள்”– சுவாமி நாகராஜ்.
“அது உங்களுக்கா, அல்லது குற்றம் செய்தவர்களுக்கா? இந்த உண்மை கூடப் புரியாதவர்களா? ஏன் இதனை எடுத்துரைக்க உனக்குத் தகுதி போதாதோ?” சற்குரு நாதர் கேட்டுவிட்டு சிறிது நேரம் மெளனமானார்.
உண்மை உறைக்க நாகராஜன் சுவாமியும் மெளனமானார். பிறகு,
“உறவினருடன் இணக்கமாக வாழவேண்டும் என விரும்புகிறோம் பகவானே?”– நாகராஜன் சுவாமி.
“உறவினர்கள், நண்பர்களுடன் மட்டுமல்ல, இறைசக்தியுடன் இணக்கமாக வாழ உனது குடும்பத்தினர் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான் அனைத்தும் வசமாகும். இறைவனை வணங்குவதற்கு பயம் எதற்கு? — அதனால் அநேக துன்பங்கள் ஏற்படும். இறைவனை உரிமையுடன் வணங்கிட வேண்டும். அதனால் நன்மைகள் விளையும்”
“தம்பனவசியன் குடும்பம் எங்களை வெறுக்கக் காரணம் என்னவோ? சஞ்சித வினை நீக்கும் ஐயனே கூற வேண்டுகிறேன்.– நமது சுவாமி.
“அதுவும் என்னால் தான். பல ஜென்மங்களின் தொடர்பினால் வந்த வினைப்பயன்! இந்த ஜென்மத்தில் அவர்கள் தங்களின் வினைப்பயனை அனுபவிக்க வேண்டும். அதுவும் உன்னால்! இறைவனின் தீர்ப்பு என்றுமே மாறாதது”– சற்குருநாதர் மேலும் கூறினார்,
“உன்னுள்ளே என்னைத் தேடிக் காண்; கண்ட பின் என்னுள்ளே நீ இருப்பாய் காண்! கலத்தலின் தனித்துவம் அது”என்றார்.
பிறகு,”வேணு கோபால சுவாமியைக் காண மாதேஸ்வரன் மலைக்குப் போகின்றாய் அல்லவா? நான் சொல்லும் வார்த்தையைக் கூறு. உன்னை அடையாளம் கண்டு கொள்வார். ‘பிரம்மம் என்றால் என்ன?’
என்பதே அது! ”
நமது நாகராஜன் சுவாமி சற்குருவை நோக்கி, ” தேசிகரே, ஆண்டவரே, குருவினால் சீடனுக்கும், சீடனால் குருவிற்கும் விளையும் பயன்கள் யாது?” என வினவினார்.
அதற்கு சற்குரு,” ஆத்மாவில் இருந்து , பஞ்சேந்ரியங்கள் பெறக்கிடைக்கும் உணர்வு என்னும் காந்தசக்தியை, மனம் பெற்றுக் கொடுக்க, அதனைப் பெற்ற பஞ்சேந்திரியங்கள் அவைகளை உணர்ச்சிகள் என்ற மின்சார சக்தியாக மாற்றித் தொழில் படுகிறது. குரு, சிஷ்ய மனோ பாவனையில் அப்படியே நடை பெறுகின்றது, ஆழ்ந்த நம்பிக்கையின் விளைவால்”
நமது சுவாமி பணிவாக, “எம்மை ஆட்கொள்ள வந்த தெய்வமே, சீடனின் கவலைகள், வேதனைகள் குருநாதர்களைத் தாக்குமோ?” என்று கேட்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.