இருள் தேவி ஐயிரையின் காட்சி

199

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•06•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(338) மனிதனே புனிதன் —
இருள் தேவி ஐயிரையின் காட்சி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உணவு சமைத்துவிட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த துறவியார் கையைக் குருநாதர் பற்றிக் கொண்டிருந்தார். அந்த சாதுவோ நாக்கை நீளமாகத் தொங்க விட்டபடி வாயில் இருந்து எச்சில் சுரந்து வழியத் தலையை மேலும் கீழும் ஆட்டிய படி, கண்களை அகலத் திறந்து “பே பே” என்று திக்கித் திணறிய கீச்சுக் குரலில் சப்தம் செய்தபடி நின்று கொண்டு இருந்தார். இந்தக் காட்சி அவர்களுக்குத் திகிலைத் தந்திருக்க வேண்டும். சற்குருநாதர் அவர்களைப் பார்த்து, “யாருக்கும் தீங்கிழைக் காத அப்பாவி ஊமையனின் நாக்கை அறுக்கத் துணிந்த திருவாளர்களே. உங்களின் பூஜைக்கு நாங்களும் இடையூ ராக இருந்துள்ளோம். ஊமைய னாவது வாயைத் திறக்க வில்லை. இதோ இவளைப் பார் எப்போதும் நாக்கை நீட்டிய படியே இருக்கிறாள். சுலபமாக அறுத்து எடுத்துக் கொள்ளலாம். வாருங்கள் ” என்று அழைத்தார். அவர்களுக்குக் குழப்பம். சாமியாரைப் போய்ப் பெண் என்று அழைக்கின்றாரே என்று நால்வரும் டார்ச்லைட் வெளிச்சத்தில் பார்க்க, நாக்கை நீட்டிய படி தலையை ஆட்டிக் கொண்டிருந்த சாமியார் உருவம், அப்படியே ஊருமாறி நாக்கை நீட்டியபடி கபாலம் ஏந்திய பத்திரகாளியின் உருவமாக “ஹூம்” காரம் செய்தபடி அவர்களை நோக்கி நகரவே, அடுத்தநொடியில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று அலறிக் கொண்டு எடுத்தனர் ஓட்டம்.

மாந்தரீக மாணவர்களின் குரு இவர்கள் ஓடுவதைப் பார்த்தவர் நிழல் உருவமாகத் தன்னை நோக்கி அநேக ஆவிகள் படையெடுப்பதைப் போன்று பிரமை உண்டாகவே , பயந்தலறி அனைத்தையும் துறந்து பிடித்தாரே ஓட்டம்! இந்த மாயையை உருவாக்கிய ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குருநாதர் தனது அருகில் சிரித்தபடி நின்று கொண்டிருந்த துறவியைப் பார்த்து, “குழந்தை பசியோடு இருப்பான். போய் ஆதரவாக உணவு கொடுப்பாய். இரண்டு நாட்கள் பொறுத்து வருகிறேன். பழனி லைன்மேன் நடராஜன் வீடு வரை சென்று விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு அமாவாசை இருளில் கலந்து மறைந்து விட்டார். நமது சுவாமி அவர்கள் அலறி ஓடும்போது விழித்து எழுந்து கொண்டார். ஏனோ காலில் வலி ஏற்பட்டது. பசியுடன் இருந்த சுவாமி, துறவி அன்போடு கொடுத்த உணவைப் சாப்பிட்டு விட்டு குகைக்கு வெளியில் சென்றார். வானத்தில் நட்சத்திரங்கள் துல்லியமாகப் பளிச்சென்று மிளிர்ந்து கொண்டிருந்தன. கார்த்திகை நட்சத்திரத்தைப் பார்த்தார். எதிர்ப்புக்களை விலக்கிடும் திருக் கார்த்திகை நட்சத்திரப் பாடத்தை நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி தனது சற்குருவிடம் அங்குதான் கற்றுக் கொள்ளப் போகின்றார். நமது சுவாமி குருநாதர் கட்டளைப்படி யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார். உணவோ எதுவோ கொடுத்தால் மறுக்காமல், பிறருக்காவது உபயோகப்படும் என்று எண்ணிப் பெற்றுக் கொள்வார்.

[ நமது குருஈஸ்வராலய வாசகர்களாகிய மெய்யன்பர் களின் கவனத்திற்கு :– பாடம் சரியாக பவானி புறப்பட்டுச் செல்லும் நிலைக்குச் சுவாமி உட்படுவதைப் பற்றித்தான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் நமது சுவாமியைப் பல காலம் ஞானவழியில் தயார் செய்தது எப்படி என்பதில் பற்பல தகவல்கள் நிறைந்து கிடைக்கின் றன. நல்ல தகவல் களஞ்சிய மான இதனை விட்டுச் செல்ல மனமில்லை. எனவே அன்பர்கள் இதனை நிறைவாக அறிந்து கொண்டு போகலாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி — மதுரை M.மேகநாதன்.]

இடதுகால் வலியுடன் இரண்டு நாட்கள் பொழுது காலம் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார் நமது சுவாமி. ஓடியவர்கள் கொடுத்த தகவலால் சில தைரியவான்கள் அங்கு வந்து சப்தம் போட்டுப் பேசியபடி இருந்தனர். இடையிடையே உணவு சமைக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்த சாமியாரை மிரட்டினர். “எங்கே அந்த மாயாஜால சுவாமி? இப்ப தைரியம் இருந்தால் எனது முன்னாடி வந்து மந்திரம் போடச் சொல்லு பார்க்கிறேன். அவனை உண்டு இல்லை என்று ஒருவழி பண்றம்பாரு” என்று கத்தியபடி அவரும், அவரது நண்பர்கள் சிலரும் ஆர்ப்பாட்டம் செய்தார் கள். பாட்டிலில் சாராயத்தைக் குடித்தபடி இன்னாத வார்த்தை களைக் கொட்டிக் கொண்டிருந் தனர். அப்போது மலையின் அடிவாரத்தில் சில இருசக்கர வாகனங்கள் வேகமாக வந்து நின்றன. குய்யோ முறையோ என்று அழுகைச் சப்தம் பலமாகக் கேட்டது. மூச்சு வாங்க மேலே வந்தவர்கள் , “அப்பா பெரிய தம்பி, மோசம் போயிட்டமப்பா. வண்டி விபத்தில் உம் பொஞ்சாதி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடுமலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க. இங்க என்னடா தண்ணியடிக்க வேறு இடமா உங்களுக்குக் கிடைக்கல? உயிர் பொழைக்கவச்சா வந்து நேர்த்தி செய்யறோமுனு வேண்டிக்கடா பெரியதம்பி ” எனக் கூறிவிட்டுச் தேம்பியழுதார் அந்தப் பெரியவர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button