இயற்கை தத்துவ இயல்பு!

169

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•02•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(231) மனிதனே புனிதன் —-
இயற்கை தத்துவ இயல்பு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° °°°°°
ஆதி குரு நாதனின் உயர்ந்த உள்ளமானது அனைவரும் கல்வியில், சமுதாய உயர்வில், தெய்வீக சிந்தனையில், ஒற்றுமை உணர்வுடன் சிறப்பான வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணியது. இதனை சிந்தித்துப் பாட்டியின் உள்ளம் உருகக் கண்கள் பனித்தன. ஆனால் ஆதி குரு நாதன் தனது தாயிடம் கொண்ட உன்னத அன்பின் உயர்வை எண்ணி அவர்மீது கொண்ட மரியாதை பன்மடங்காக அதிகரித்தது. இனி நிகழ்வைக் கவனிப்போம்.

” ஆதி குரு நாதனின் மனமானது தனது தாயின் நிலை கண்டு கழிவிரக்கம் கொண்டது.ஆனால் மனதில் ஒரு நெருடல் முள்ளாகத் தைத்தது. தனது குடும்பத்தில் ஏதோ புதிர் போன்று நிகழ்ந்து கொண்டுள்ளது. காரண காரியங்கள் மறைக்கப்படுவது யாரால்? என்ற எண்ணமுடன் தாயாரைப் பரிவுடன் பார்த்தார். அங்கிருந்து புறப்பட்டுப் போனவர் தனியிடத்தில் ஏகாந்தமாக தவத்தில் ஈடுபட்டுத் தனது தலைவனாகிய இறைசக்தியுடன் தொடர்பு கொண்டார். வானோர்கள் செய்யும் சோதனையை அறிந்து கொண்டு விட்டார். விதியை அனுபவித்துக் தீர்க்கும் நிலை வந்ததை எண்ணி தவத்தில் உறுதியானார்.”

“குரு நாதனின் தாயாரோ தனது நிலை எப்படிஆகுமென்று? உணர்ந்து கொண்டார். தனது உடல் இனிமேல் தனக்கு உதவாது என்று எண்ணினார். இயற்கையின் அமைப்பும், அதன் ஒழுங்கும், தெய்வீக நியதியும் அறிந்து கொண்டு இனிமேல் உலகில் எதனைச் செய்தாலும் அல்லது செய்யா விட்டாலும் தன்னை மரணம் நெருங்கி விட்டதை நன்றாக உணர்ந்து விட்டார். இனிமேல் இருப்பது ஒரேஒரு வழிதான். அதாவது, கவலையை மனதில் ஏற்காமல், தெய்வத்தை மட்டுமே ஏற்பது என்று, இடைவிடாமல் பிரார்த்தனையை உறுதியுடன் செய்து வந்தார். தனது மருமகள் தனக்கு உதவி செய்யாமல் இருப்பதையும் மறந்து விட்டார்.”

” ஒரு வார காலமாக மழை இடை விடாது பெய்த படி இருந்தது. தனது கணவன் அவருடைய தாயின் மீது வைத்திருக்கும் அக்கறையை எண்ணி எண்ணி குருபத்தினி உள்ளம் எரிமலையாகக் குமுறியது. தான் கொடுக்கும் கஞ்சியைக் குடிக்க மறுக்கும் மாமியின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவர் அதனைக் குடிக்க மறுத்ததற்குக் காரணம், அதில் மயில் துத்தம் என்ற பாஷாணம் கலக்கப்பட்டுக் கஞ்சி நீல நிறமாக மாறி விட்டிருந்ததை ஆதி குரு நாதனின் தாயார் அறிந்து கொண்டார். இறைவனை எண்ணித் துதி செய்தார்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button