ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
11•10•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம் ,
பொள்ளாச்சி.
(94) மனிதனே புனிதன் —
இயற்கையில் மனநிலை !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1.உலகில் சிலர் இறைவனது அருள் பெறுவது தான் உயர்ந்த உன்னதநிலை என்றும் அதனால் முக்தி கிடைக்கும் என்றே நம்பிக்கையுடன் போதித்து வந்தனர். மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
2.இறைவன் அருள் பெற்ற வேறு சிலர் மருளாடி அதனை அருள் வாக்காகக் கூறிவந்தனர் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
3. மற்றும் சிலர் இறைவனது அருளைத் தாங்களே செய்ய வேண்டும் என்று எண்ணினர். அதனால் நான் தான் கடவுள். என்னை வணங்கினால் இறைவனை வணங்குவது போன்றதாகும் என்று மருளில் மூழ்கினர். அவர்கள் சமாதியான இடங்களை மக்கள் மிகவும் பலமாக ஏற்றுக் கொண்டு கும்பல் கும்பலாக யாத்திரையில் கலந்து கொள்கின்றனர்.
4.ஆனால் மக்கள் அகங்காரம், ஆணவம், ஆசைகள் என்பனவற்றைத் துறக்கத் தயாராக இல்லை. பத்துவிதமான புண்ணியங்களைப் புரிந்து
இறையருளுடன் ஒன்றாகி பெருவாழ்வு வாழ இஷ்டமில்லை. இறைவனை எண்ணித் தியானம் செய்ய விரும்புவதில்லை. தியானம் பற்றித் தெரிந்து கொண்டாலும் அதனைக் கடைப்பிடிக்க விரும்புவதில்லை. தனக்குப் புகழ்தேடி அலைவதும், மற்றவர் பாராட்டுதல்களைப் பெறுவதிலும் லட்சியம் வந்து விட்டது! தான் ஒரு தெய்வ பக்தி கொண்டவன் என்பதைப் பிறர் சொல்லக் கேட்பதில் ஆசை பிறந்து விட்டது! ஆக,
தனது உடலில் உள்ள பிரபஞ்ச ரகசியமாக விளங்கும் உயர் மின் நுண்காந்த சக்தியைத் தனது மனதின் உந்துதல்களால் அதனை மின்சார சக்தியாக மாற்றிக் கொண்டு விடுகிறான். மின் காந்தம் மின்சாரமாக மாற்றிக் கொண்டால் அத்தனை சேமிப்பு சக்திகளும் செலவாகி விடுகின்றன. இதனையே திரும்பத் திரும்பச் செய்து விட்டுப் பழமொழிகளை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார்கள். “மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்க வில்லையாம்”என்று.
நமது வாழ்வினுக்குத் தேவையான பணிகளுக்கு மின்காந்த சக்தியை மின்சக்தியாக மாற்றுவது இயல்பான ஒன்று தான். இதில் ஓலி, ஒளித்து தன்மைகள் அதிகப்படாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பது, அவரவர்கள் வசமே உள்ளது. இந்த முக்கிய போதனைகளைச் சுவாமி அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றவர்கள் மிகவும் சுலபமாக அறிந்து கொண்டிடலாம். அன்போடு அவர் கூறும் உண்மை விளக்கங்கள் நமக்கு வரப்பிரசாதம் தான்.
நமது நொண்டி உசேன் வீட்டில் இருந்து பார்க்கச் சற்குருநாதர் ஆடாமலும், அசையாமலும் கற்சிலை போல தவத்தில் அமர்ந்திருப்பது நன்றாகத் தெரிந்தது. என்னதான் நொண்டி உசேன் கடுமையாகப் பேசினாலும் அதில் பாசம் மிகுந்திருக்கும். தன்னைப் பெரிய மனிதன் என்று எண்ணித் செயல்பட்டதால் தனது உடலின் ஊனத்தை ஒரு பொருட்டாகவே எண்ணுவதுமில்லை! சற்குருநாதரைக் கிழவன் என்று வைதாலும், அவரின் முன்பு தரையில் தனது சூம்பிய கால்களை மடக்கிப் பணிவுடன் அமர்ந்து கொண்டார். நமது சுவாமி வஜ்ராசனத்தில் உட்கார்ந்து, தனது குருநாதரின் தேஜஸ் மிகுந்த முகவிலாசத்தைக் கண்கள் இமையாது பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடத்தில் இருந்து வீசும் நறுமணத்தில் உசேன் மெய்மறந்து போனார். உசேனால் கம்பு ஊன்றித்தான் நடக்கவே முடியும். இல்லாவிட்டால் கீழே விழுந்து விடுவார். சற்குருநாதர் கண்விழித்து உசேனைப் பரிவுடன் பார்த்தார். ஏனோ உசேன் உடலில் தீவிர நடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நடுக்கம் நின்று விட்டது. உசேன் கொடுத்த பொருட்களைக் பெற்றுக் கொண்டார். ஜெபம் செய்து ஒரு எள்மாவு உருண்டையை அவருக்குக் கொடுக்க வாங்கிச் சாப்பிட்டார். மூன்று உருண்டைகளையும் சாப்பிட வைத்தார். உசேன் கண்களில் நீர் அருவிபோல் வழிந்து கொண்டிருந்தது. சாப்பிட்ட பின்னர் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார். சற்குருநாதரின் அருள்ஞான ஒளி மழையில் உசேன் மெய்மறந்து போனார். சற்குருநாதர் புரியாத காட்டு பாஷையில் ஏதேதோ கூறியவுடன் உசேன் பயந்து போனார். நமது சுவாமியின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார். சற்குருநாதர் இடிஇடிப்பது போல் பலமாகக் சிரித்து விட்டு, “என்ன உசேன் நலமா?” என்று இனிமையாகக் கேட்டார்.
உசேனுக்குத் தைரியம் வந்து விட்டது! “நாங்களெல்லாம் ஆண்டவனை நோக்கித் தவம் இருப்பது ஞாயம். எங்களுக்கு ஏதாவது அங்கிருந்து கிடைக்கலாம். ஆனா நீங்க எதற்காக தவம் பண்ணுறீங்க? உங்களுக்கு அப்படி என்னதான் தேவை? எங்கூட என் வீட்டிற்கு வாங்க, கடைசி வரைக்கும் சோறு போட்டுக் காப்பாத்தறேன்!” இதுதான் உசேன். நம்பிக்கையின் மறு சின்னம். சற்குருநாதர் கடகடவென சிரித்தார். “உசேன் உனக்குக் கல்யாணமாகிக் குழந்தைகளுடன் வாழும் போது வருகிறேன். அப்ப எனக்குச் சோறு போடு, என்ன!”என்று மீண்டும் சிரித்தார். பிறகு புறப்பட்டார்.
மாலைக் கருக்கலில் சிறிது தூரம் சென்றவர் மறைந்து தான் போனார்! உசேனுக்கு பிரமிப்பு! சுவாமியும் உசேனும் பேசிக் கொண்டே வீடு திரும்பினார்கள். அப்போது. ..
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)
நன்றி!வணக்கம்!
–ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.