இயற்கையின் அதிசயம்!

198

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•01•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(196) மனிதனே புனிதன் —
இயற்கையின் அதிசயம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தனியாருக்குச் சொந்தமான தென்னை விவசாயத் தோட்டத்தின் அக்கினி மூலை சார்ந்த இடம் உதிரகாளியக கோயில் கொண்டுள்ள இடம். அதன் கிழக்குப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான பெரிய ஓடை வடக்கு நோக்கிச் செல்கிறது. இப்போது இருக்கும் சூழல்கள் அந்தக் காலகட்டங்களில் இல்லை. ஆட்டுக்கிடா வெட்டிப் பொங்கலிட்டுப் படையல் நடத்துகின்ற காலம் அது. வனப்பகுதி என்பதால் குறைவாகவே பக்தர்கள் காணப்பட்டனர். தேங்காய், பழம், பத்தி, சூடன், கனி என்று கூறப்படும் எலுமிச்சை, விபூதி, சந்தனம், குங்குமம், அரளிப்பூக்கள், மற்றும் காணிக்கையாக ஏதாவது காசுகள் எனக் கொண்டு வந்திருந்தனர்.

அன்று அவரவர்களே பூஜைகள் செய்து கொள்ளவேண்டும். பூஜாரிகள் என்று யாரும் அன்று கிடையாது. திரு. மணி அவர்கள் தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தார். உச்சிக்கால பூஜை நேரத்தில் பெரிய செவ்வெறும்புகள் மிகவும் கும்பல் கும்பலாக தரை முழுவதும் நிறைந்து, உடலிலும் ஏறிக் கொண்டிருந்தன. எங்கிருந்துதான் அத்தனை செவ்வெறும்புகள் வந்தனவோ? கடித்தால் உடல் வாதனையைப் பெற்று விடும். நமது சுவாமியின் உடல் மீது செவ்வெறும்பு ஊரத் துவங்கியதுமே, ஒரு எறும்பை உதறித் தள்ளி விட்டார். ஒரு எறும்பைத் தள்ளியதும் நூற்றுக் கணக்கில் செவ்வெறும்புகள் கூட்டம் கூட்டமாக வந்து அவரது உடலை மொய்க்கத் துவங்கின.

அப்போது பின்புறம் இருந்து ஒருகுரல் ஒலித்தது. “அப்பா ஆடாமல், அசையாமல் அப்படியே நின்று விடு. அவைகள் போய்விடும்” என்று கூறியது. நாகராஜன் சுவாமி அவர்களும் அப்படியே செய்தார். முப்பது நிமிடங்கள் அப்போது தியானத்திலேயே கழித்தார் சுவாமி. எல்லா செவ்வெறும்புகளும் மெல்ல சுவாமியின் உடலை விட்டுவிட்டு இறங்கிச் சென்றன. கண்களைத் திறந்து பார்த்த சுவாமியினால் நம்பவே முடியவில்லை! எங்கு பார்த்தாலும் செவ்வெறும்புக் கூட்டங்கள். இறங்கிய அனைத்து செவ்வெறும்புகளும் கோயில் மரத்தின் மீது ஏறிக்கொண்டு இருந்தன. மரம் முழுவதும் எறும்புகளால் நிரம்பி வழிந்தது.

நாகராஜன் சுவாமி தன்னை அழைத்துப் பேசிய வரைப் பின்னால் திரும்பிப் பார்த்தார். சந்தன நிறத்தில் மேல் சட்டை, தும்பைப்பூ மல்வேட்டி, காதில் கடுக்கண்கள், பட்டையாக விபூதிபூசிய நெற்றியுமாகப் புன்சிரிபுபுடன், உயரமும், நல்ல ஆகிருதியுமாக அவர் தென்பட்டார். “தம்பி உனது க்ஷதாயார் செய்த புண்ணியத்தால் தான் தப்பிப் பிழைத்து விட்டாய். இவைகள் கடுமையான விஷ எறும்புகள் என்றும், கடித்தால் விஷம் உடலில் ஏறி ஆளையே கொன்று விடுமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்! இவைகள் அநேகமாக காடுகளை விட்டு வெளியே வராதவை. உன்னிடத்தில் தெய்வ ஆசீர்வாதம் நிச்சயமாக இருக்கும் என நம்புகிறேன். உதிரகாளி ஒரு வனதேவதை. அவளருளும் உனக்கு உண்டு. அதோ அந்த மரத்தின் கிளையில் பெரிய சர்பம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதைப் பார். இந்த எறும்புகள் அவற்றை ஒன்றுமே செய்யாமல் விலகிச் செல்வதைக் கவனி. இது இயற்றைக்குப் புறம்பு அல்லவா? ஏதோ இனம்புரியாத சக்திக்குக் கட்டுப்பட்டவையாக ஒழுங்காக நடந்து கொள்கின்ற மாதிரி நான் உணர்கிறேன். இங்கு உம்மால் அதனை உணர முடிகின்றதா? இங்கு பெரு மழை பெய்து மலையில் பெரிய நிலச்சரிவு ஏற்படப் போகிறது. அதாவது புரியுதா” எனக் கேட்டுத் தானே பலமாகச் சிரித்துக் கொண்டார். சுவாமி மெளனமாகிப் போனார்.திரு.மணி அவர்கள் சற்று பயந்து போய் விட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button